PUBLISHED ON : ஜன 01, 2026

தமிழகம்
ஜூலை 1: இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கு திறன் பயிற்சி அளிக்கும் 'வெற்றி நிச்சயம்' திட்டம் துவக்கம்.
ஜூலை2: சேலம் மாவட்ட செயலர் பதவியில் இருந்து ராமதாஸ் ஆதரவு பா.ம.க., எம்.எல்.ஏ., அருள் நீக்கம். அன்புமணி நடவடிக்கை.
ஜூலை6 : சிவகாசி, சின்ன காமன்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து. 10 பேர் பலி.
ஜூலை8: கடலுார், செம்மங்குப்பத்தில் ரயில்வே கேட்டை கடந்த பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் மூன்று மாணவர்கள் பலி.
ஜூலை11: மதுரையில் 'மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை' மாநாட்டை நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடத்தினார்.
ஜூலை13: சென்னையில் இருந்து 50 டீசல் டேங்கர் களுடன் சென்ற சரக்கு ரயில் திருவள்ளூரில் தடம் புரண்டு தீ விபத்து. 18 டேங்கர் எரிந்து நாசம்.
ஜூலை15: அரசின் சேவைகள் வழங்கும் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் துவக்கம்.
ஜூலை21: சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீவஸ்தவா பதவியேற்பு.
ஜூலை25: ராஜ்யசபா எம்.பி.,யாக தி.மு.க., வின் வில்சன், சல்மா, சிவலிங்கம், அ.தி.மு.க., வின் இன்பதுரை, தனபால், ம.நீ.ம., கமல் பதவியேற்பு.
* பா.ம.க., தலைவர் அன்புமணி, 'தமிழக மக்கள் உரிமைமீட்பு' நுாறு நாள் நடை பயணத்தை திருப்போரூரில் துவக்கம்.
ஜூலை28 : 300.17 லிட்டர் தாய்ப்பால் தானம் கொடுத்தார் திருச்சியின் செல்வபிருந்தா. இச்சாதனை நிகழ்த்திய முதல் ஆசிய பெண்.
ஜூலை31: தே.ஜ., கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் பன்னீர்செல்வம் அறிவிப்பு.
* முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார் பன்னீர் செல்வம்.
இந்தியா
ஜூலை1: 'தட்கல்' முறை ரயில் டிக்கெட் முன் பதிவுக்கு ஆதார் கட்டாயம் நடை முறைக்கு வந்தது.
* வெளிநாடுகளுக்கான இந்தியாவின் உளவு அமைப்பு (ரா) தலைவராக பராக் ஜெயின் பதவியேற்பு.
ஜூலை5: மகாராஷ்டிராவில் சிவசேனாவின் உத்தவ், எம்.என்.எஸ்., தலைவர் ராஜ்தாக்கரே 20 ஆண்டுக்குப்பின் ஒன்றாக அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்பு.
ஜூலை8: ம.பி., பன்னா புலிகள் காப்பகத்தில் வாழ்ந்த ஆசியாவின் வயதான யானை (வத்சலா 100) உயிரிழப்பு.
ஜூலை13: வழக்கறிஞர் உஜ்வல் நிஹாம், வெளியுறவு முன்னாள் செயலர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா, சமூக சேவகர் சதானந்தன் மாஸ்டர், வரலாற்று ஆய்வாளர் மீனாட்சி ஜெயின் ஆகியோர் ராஜ்யசபா நியமன எம்.பி.,யாக பதவியேற்பு.
ஜூலை16: ஹரியானா கவர்னராக ஆஷிம் கோஷ், கோவா கவர்னராக அசோக் கணபதி ராஜூ, லடாக் துணை நிலை கவர்னராக ஸ்ரீ கவிந்தர் குப்தா பதவியேற்பு.
ஜூலை17: கர்நாடகா தர்ம ஸ்தலா கோயிலில் பெண்கள் கொன்று புதைக்கப்பட்டனர் என அவதுாறு பரப்பிய சர்வதேச ஊடகங்கள் அது பொய் என தெரிந்ததும் அமைதியாகின.
ஜூலை18: ரூ. 2100 கோடி மதுபான ஊழல் வழக்கில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் மகன் சைதன்யா கைது.
* காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்திய பாகிஸ் தானின் ரெசிஸ்டன்ட் பிரன்ட் - ஐ சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா.
ஜூலை22: அமெரிக்காவிடம் வாங்கிய 3 'அப்பாச்சி' ஹெலி காப்டர்கள் இந்தியா வந்தன
ஜூலை31: மகாராஷ்டிராவின் மாலேகானில் 2008ல் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் பா.ஜ., முன்னாள் எம்.பி., பிரக்யா சிங் தாக்கூர் உட்பட அனைவரையும் என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது.
உலகம்
ஜூலை1: அமெரிக்காவில் வரி குறைப்பு, கடன் உச்ச வரம்பை அதிகரிக்க வகை செய்யும் 'அழகான பெரிய மசோதா', செனட் சபையில் நிறைவேறியது.
* தாய்லாந்து பிரதமர் ஷின்வத்ராவை பதவி நீக்கம் செய்தது அந்நாட்டு நீதிமன்றம்.
* பிரதமர் மோடி 8 நாள் பயணமாக கானா, டிரினிடாட் டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா பயணம்.
ஜூலை5: ஆப்கனில் தலிபான் ஆட்சியை அங்கீகரித்த முதல் நாடானது ரஷ்யா.
ஜூலை6: பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நடந்த 17வது பிரிஸ்க் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு.
ஜூலை8: சுரினாம் நாட்டின் முதல் பெண் அதிபராக ஜெனிபர் சைமன்ஸ் பதவியேற்பு.
ஜூலை21: வங்கதேசத்தின் டாக்காவில் விமானப்படை பயிற்சி விமானம், பள்ளி மீது விழுந்து தீ விபத்து. 31 பேர் பலி.
ஜூலை22: ஐ.நா.,வின் யுனெஸ்கோ அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறியது.
ஜூலை24: தாய்லாந்து - கம்போடியா இடையிலான மோதலில் 15 பேர் பலி. ஜூலை 28ல் போர் நிறுத்தம் அமல்.
பாரம்பரிய சின்னம்
ஜூலை12: யுனெஸ்கோவின் பாரம்பரிய பண்பாட்டு பட்டியலில் விழுப்புரம் 'செஞ்சி கோட்டை' இடம் பிடித்தது.
இந்தியாவில் பிரிட்டன் போர் விமானம்
ஜூலை 22: தொழில்நுட்ப பிரச்னையால் திருவனந்தபுர விமான நிலையத்தில் உலகின் சக்திவாய்ந்த பிரிட்டன் போர் விமானம் (எப் 35பி) அவசரமாக தரையிறங்கியது. பழுது சரி செய்யப்பட்டு, 37 நாளுக்கு பின் பிரிட்டன் திரும்பியது.
குன்றத்தில் கும்பாபிஷேகம்
ஜூலை14 : முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
அ.தி.மு.க., தேர்தல் பயணம்
ஜூலை7: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' முதல் தேர்தல் பிரசார பயணத்தை கோவையில் இருந்து துவக்கினார்.
டாப் 4
* ஜூலை6: ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க், புதிதாக கட்சி ஒன்றை (அமெரிக்கா கட்சி) துவக்கினார்.
* ஜூலை8: பிரான்ஸ் பாரிஸ் நகரில் சியன் நதி ரூ. 1405 கோடியில் துாய்மைப்படுத்தப்பட்டது. 100 ஆண்டுக்கு பின் மக்கள் குளிக்க அனுமதி.
* ஜூலை21: இந்திய துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ராஜினாமா.
* ஜூலை26: துாத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையம், வ.உ.சி., துறைமுகத்தின் மற்றொரு சரக்கு தளத்தை பிரதமர் மோடி திறந்தார்.

