sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வருடமலர்

/

2025 ஜூனில் நடந்த நிகழ்வுகள்

/

2025 ஜூனில் நடந்த நிகழ்வுகள்

2025 ஜூனில் நடந்த நிகழ்வுகள்

2025 ஜூனில் நடந்த நிகழ்வுகள்


PUBLISHED ON : ஜன 01, 2026

Google News

PUBLISHED ON : ஜன 01, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகம்

ஜூன்2: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன் கொடுமை வழக்கில் ஞான சேகரனுக்கு 30 வருட ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.

* மதுரையில் தி.மு.க., பொதுக்குழு கூட்டம் நடந்தது.

ஜூன்9: மதுரையில் பா.ஜ., நிர்வாகிகள் குழு கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு.

ஜூன்10: கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் (ஆர்.டி.இ.,) கீழ் 25% இட ஒதுக்கீட்டுக்கு தமிழகத்துக்கான நிதியை வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

ஜூன்18: சென்னையில் 50 இடங்களில் கட்டணமில்லா தானியங்கி குடிநீர் ஏ.டி.எம்., திறப்பு.

ஜூன்21: வால்பாறை எம்.எல்.ஏ., முகுல் கந்தசாமி 60, காலமானார்.

ஜூன்27: மேட்டூர் அணை 1957க்குப்பின் முழு கொள்ளளவை (120 அடி) எட்டியது.

ஜூன்28: நகை திருட்டு புகார் விசாரணையில் மடப்புரம் (சிவகங்கை மாவட்டம்) காளியம்மன் கோயில் தற்காலிக ஊழியர் சதீஷ் மரணம். இவரை தாக்கியதாக ஐந்து போலீசார் கைது.

ஜூன்30: அரசு பள்ளிகளில் மணி அடித்தால் தண்ணீர் அருந்தும் திட்டம் அமல்.

இந்தியா

ஜூன்4: டில்லியில் பராகுவே அதிபர் சான்டிகோ பெரியா - பிரதமர் மோடி சந்திப்பு.

*ஜாதிவாரி கணக் கெடுப்புடன் 16வது தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2027 மார்ச் 1ல் துவங்கும் என மத்திய அரசு அறிவிப்பு.

ஜூன்5: உள்நாட்டிலேயே முதல் துருவ ஆராய்ச்சி கப்பலை வடிவமைக்க, நார்வேயுடன் இந்தியா ஒப்பந்தம்.

ஜூன்8: 2011-2012ல் இருந்து 2022-2023ல் 26.90 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்பு என மத்திய அரசு அறிவிப்பு.

ஜூன்10: இந்திய மக்கள் தொகை எண்ணிக்கை 146 கோடியாக உயர்வு என ஐ.நா. அறிக்கை.

ஜூன்11: ஒரே நேரத்தில் இரண்டு டிகிரி படிக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என உயர்கல்வி நிறுவனங்களுக்கு யு.ஜி.சி., அறிவுறுத்தியது.

ஜூன்13: ஆந்திராவில் பள்ளி மாணவர்களின் தாய்மார்களுக்கு ஆண்டுதோறும் ரூ. 15 ஆயிரம் வழங்கும் திட்டம் துவக்கம்.

ஜூன்14: உள்நாட்டில் தயாரான முதல் நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல் (ஐ.என்.எஸ். அர்னாலா) கப்பல் படையில் சேர்ப்பு.

ஜூன்15: உத்தரகண்டின் கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விபத்து. 7 பேர் பலி.

ஜூன்18 : பிரதமர் மோடி முதன்முறையாக குரோஷியா சென்றார்.

ஜூன்21: வேட்பாளர் 45 நாளுக்குள் வழக்கு தொடரா விட்டால், ஓட்டுப்பதிவின் 'சிசிடிவி' கேமரா, 'வெப் காஸ்டிங்', வீடியோ, புகைப்பட பதிவுகளை அழித்துவிட தேர்தல் கமிஷன் உத்தரவு.

ஜூன்25: 2019ல் இந்திய விமானப்படை வீரர் அபி நந்தனை சிறைபிடித்த பாக்., ராணுவ அதிகாரி சையத் முயிஸ் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்.

* சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வுக்கு பின், விருப்பமுள்ளவர் மட்டும் மே மாதத்தில் இரண்டாவது பொதுத்தேர்வு எழுதும் முறை அறிமுகம்.

ஜூன் 26: சைபர் மோசடியில் ஈடுபடுபவர்கள் பணத்தை பரிமாற்றம் செய்ய 8.5 லட்சம் போலி வங்கிக்கணக்குகளை தொடங்கியதை சி.பி.ஐ., கண்டுபிடித்தது.

ஜூன்28: ஜெயின் துறவி வித்யானந்த் நுாற்றாண்டு விழாவில் பிரதமர் மோடிக்கு 'தர்ம சக்ரவர்த்தி' பட்டம் வழங்கப்பட்டது.

ஜூன்29: பள்ளிகளில் ஹிந்தியை மூன்றாவது மொழியாக்கும், மும்மொழி திட்டத்தை ரத்து செய்தது மகாராஷ்டிர அரசு.

ஜூன்30: கொரோனா பரவல், இந்தியா - சீனா எல்லை பிரச்னை உள்ளிட்ட காரணத்தால் நிறுத்தி வைக்கப்பட்ட 'மான சரோவர் யாத்திரை', ஐந்து ஆண்டுக்குப்பின் மீண்டும் துவக்கம்.

* தெலுங்கானா சங்க ரெட்டியில் ரசாயன தொழிற் சாலையில் விபத்து. 44 பேர் பலி.

உலகம்

ஜூன்2: ரஷ்யாவின் ஐந்து விமானப்படை தளங்கள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல். 40 போர் விமானங்கள் அழிப்பு.

ஜூன்4: தென்கொரிய அதிபராக லீ ஜா மியுங்க் பதவியேற்பு.

ஜூன்5: அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசில் செலவை குறைத்தல், திறன் மேம்பாடு துறை தலைவர் பதவியில் இருந்து தொழிலதிபர் எலான் மஸ்க் விலகல்.

* பிறப்பு விகிதம் குறைவதை தடுக்க நீண்டகாலம் அமலில் இரு குழந்தை கொள்கையை வியட்நாம் ரத்து செய்தது.

ஜூன்8: வங்கதேசம் சிராஜ் கஞ்ச் மாவட்டத்தில் வங்க கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் நினைவு அருங்காட்சியகம் தாக்கப்பட்டது.

ஜூன்10: ஆஸ்திரியா கிரேஸ் நகரில் உள்ள பள்ளியில் துப்பாக்கியால் சுட்டு 10 பேரை கொன்ற மாணவர் தற்கொலை.

ஜூன்13: பிரான்சில் 15 வயதுக்குட்பட்ட மாணவர்கள் சமூக வலைதளங்களை பயன் படுத்த அந்நாட்டு அரசு தடை

ஜூன்14: ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல், 6 அணு விஞ்ஞானிகள், மூன்று ராணுவ தளபதிகள் உட்பட 78 பேர் பலி. பதிலுக்கு ஈரான், இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்.

ஆரோக்கியம் தரும் யோகா

ஜூன்21 : ஆந்திரா விசாகபட்டினத்தில் பிரதமர் மோடி தலைமையில் யோகா நிகழ்ச்சி நடந்தது. இதில் மூன்று லட்சம் பேர் பங்கேற்று கின்னஸ் சாதனை படைத்தனர்.

கந்தனுக்கு அரோகரா

ஜூன்22: மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் 'கந்த சஷ்டி கவசத்தை' 5 லட்சம் பேர் ஒரே நேரத்தில் பாடினர்.

'பங்கர் பஸ்டர்'

ஜூன்22: ஈரானின் மூன்று அணுசக்தி நிலையம் மீது, அமெரிக்கா இதுவரை பயன்படுத்தப்படாத 'பங்கர் பஸ்டர்' எனும் ஜி.பி.யூ-57 குண்டுகளை (200 அடி ஆழம் வரை செல்லும்) வீசியது.

பசுமை பஸ்

ஜூன்30: தமிழகத்தில் ரூ.208 கோடியில் முதன்முறையாக 120 மின்சார பஸ் சேவை துவக்கம்.

டாப் 4

* ஜூன்5: தனுஷ்கோடியில் 524 ஹெக்டேர் பரப்பளவில் பிளமிங்கோ பறவைகளின் சரணாலயம் திறப்பு.

* ஜூன்10: இந்திய மக்கள்தொகை 146 கோடி என ஐ.நா. அறிக்கை.

* ஜூன்17: கனடாவில் நடந்த 51வது 'ஜி-7' மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு.

* ஜூன்24: ஈரான் - இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் அமல்.






      Dinamalar
      Follow us