PUBLISHED ON : ஜன 01, 2026

தமிழகம்
அக்.7: நோயாளிகளை மருத்துவ பயனாளிகள் என அழைக்க அரசாணை.
அக்.8: பரஸ்பரம் மன்னிப்பு கோரியதால் நாம் தமிழர்
கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகை விஜயலட்சுமி இடையிலான வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது.
அக்.12: பா.ஜ.,வின் 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' மதுரையில் துவக்கம்.
அக்.15: மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி ராஜினாமா.
அக்.23: சேந்தமங்கலம் தி.மு.க., எம்.எல்.ஏ., பொன்னுசாமி 74, காலமானார்.
அக்.25: பா.ம.க., செயல் தலைவராக மகள் காந்திமதியை அறிவித்தார் ராமதாஸ்.
இந்தியா
அக்.3: 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையில் பாகிஸ்தானின் 12 - 13 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக விமானப்படை தளபதி ஏ.பி.சிங்., தெரிவித்தார்.
* ம.பி.,யில் 'கோல்ட்ரிப்' இருமல் மருந்து பயன்படுத்திய 12 குழந்தைகள் பலி. தயாரிப்பு நிறுவனமான காஞ்சிபுரம் ஸ்ரீசன் பார்மா உரிமம் ரத்து.
அக்.5: மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங்கில் நிலச்சரிவு. 24 பேர் பலி.
அக்.7: குஜராத் முதல்வர், பிரதமர் என தொடர்ந்து அரசு தலைமை பொறுப்பில் 25வது ஆண்டில் அடி எடுத்து வைத்தார் பிரதமர் மோடி.
* உ.பி.,யில் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு ரூ. 40 லட்சம் விபத்து காப்பீடு வழங்கப்படும் என அரசு அறிவிப்பு.
அக்.8: மகாராஷ்டிராவின் நவி மும்பையில் ரூ. 19,650 கோடியில் விமான நிலையம் திறப்பு. இந்தியாவின் முதல் முழுவதும் டிஜிட்டல் வசதி கொண்டது.
* உள்துறை அமைச்சர் அமித்ஷா 'ஸோஹோ' இ-மெயிலுக்கு மாறினார்.
அக்.9: மும்பையில் பிரதமர் மோடி - பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் சந்திப்பு. 64 முதலீடு திட்டங்கள் கையெழுத்தானது.
அக்.10: பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பு, பணிபுரிய ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் ஆந்திரா முதலிடம். தமிழகத்துக்கு நான்காவது இடம்.
* இந்தியாவில் அரசு மருத்துவமனையில் (டில்லி எய்ம்ஸ்) முதன்முறையாக ரோபோடிக் உதவியுடன் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை.
அக்.12: 1984ல் பஞ்சாப் அமிர்தசரஸ் பொற்கோயிலில் பதுங்கிய பயங்கரவாதிகளை வெளியேற்ற 'ஆப்பரேஷன் புளூ ஸ்டார்' நடவடிக்கைக்கு முன்னாள் பிரதமர் இந்திரா உத்தரவிட்டது தவறு என காங்., எம்.பி., சிதம்பரம் கருத்து.
* இந்தியாவில் ஒரு லட்சம் ஓராசிரியர் பள்ளிகள் இருப்பதாக மத்திய கல்வி அமைச்சகம் தகவல்.
* திருமணமான பெண்களுக் கான 'மிசஸ் யுனிவர்ஸ்' போட்டியில் முதன்முறையாக இந்தியாவின் ஷெரி சிங் பட்டம் வென்றார்.
அக்.14: டில்லியில் பிரதமர் மோடி - மங்கோலிய அதிபர் குரேல்சுக் உக்னா சந்திப்பு.
* ராஜஸ்தானின் ஜெய்சல்மர் - ஜோத்பூர் சென்ற பஸ்சில் தீ விபத்து. 21 பேர் பலி.
அக்.17: சபரிமலையில் துவார பாலகர்கள் சிலையில் வேயப்பட்ட தங்க கவசங்களின் எடை 4 கிலோ குறைந்திருப்பது கண்டறியப்பட்டது. இவ்வழக்கில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் தலைவர் உன்னிகிருஷ்ணன் உட்பட 7 பேர் கைது.
* டில்லியில் பிரதமர் மோடி - இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூர்யா சந்திப்பு.
அக்.19: முழுவதும் 'ஏசி' வசதி கொண்ட நாட்டின் முதல் அரசு தொடக்கப்பள்ளி, கேரளாவின் மலப்புரம் நகராட்சியில் திறப்பு. பரப்பளவு 10 ஆயிரம் சதுர அடி.
அக்.20: ராமாயணத்தை விளக்கும் உலகின் முதல் மெழுகு அருங்காட்சியகம் அயோத்தியில் திறப்பு.
அக்.24: ஆந்திரா கர்னுால் அருகே பைக் மோதியதில் டீசல் டேங்க் வெடித்து பஸ் தீப்பிடித்தது. 20 பயணிகள் பலி.
* காஷ்மீர் ராஜ்யசபா தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி 3, பா.ஜ., ஒரு இடத்தில் வெற்றி.
அக்.27: தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி (எஸ்.ஐ.ஆர்., ) துவக்கம்.
அக்.29: சுகோய், ரபேல் என இரு போர் விமானங்களில் பறந்த முதல் ஜனாதிபதி ஆனார் திரவுபதி முர்மு.
அக்.30: மும்பை ஆர்.ஏ. ஸ்டுடியோவில் பள்ளி குழந்தைகளை பிணைக் கைதியாக பிடித்து வைத்திருந்த ரோஹித் ஆர்யா சுட்டுக் கொலை. குழந்தைகள் மீட்பு.
உலகம்
அக்.4: உக்ரைனில் பயணிகள் ரயில் மீது ரஷ்யா தாக்குதல். 30 பேர் பலி.
அக்.11: ஆப்கானிஸ்தானில் பாக்., ராணுவத்தின் வான்வழி தாக்குலுக்கு, தலிபான் படையினர் பதிலடி. 58 பாக்., ராணுவ வீரர்கள் பலி.
அக்.13: எகிப்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில் இஸ்ரேல் - காசா இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. 20 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை ஹமாஸ், 250 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்தன.
அக்.15: மடகாஸ்கரில் அதிபர் ஆண்ட்ரி ரஜோலினாவை எதிர்த்து இளைஞர்கள் போராட்டம். அதிபர் தப்பி ஓட்டம். ராணுவ ஆட்சி அமல்.
அக்.20: கொரோனாவால் (2020ல்) தடைபட்டிருந்த இந்திய - சீன விமான போக்குவரத்து மீண்டும் துவக்கம்.
அக்.26: மலேசியாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னிலையில் தாய்லாந்து - கம்போடியா இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
நீளமான பாலம்
அக். 9: தமிழகத்தின் நீளமான (10.2 கி.மீ.,) மேம்பாலம் கோவை அவிநாசி சாலையில் (உப்பலிபாளையம் - கோல்டுவின்ஸ்) திறப்பு.
இரும்பு மனிதர்
அக். 30: சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாள் நினைவாக 150 ரூபாய் நாணயம், தபால் தலை வெளியீடு.
சரணம் ஐயப்பா
அக். 22 : சபரிமலையில் தரிசனம் செய்த முதல் பெண் ஜனாதிபதி திரவுபதி முர்மு.
லட்ச தீபம்
அக். 19: அயோத்தியில் தீபாவளிக்காக 26.17 லட்சம் தீபம் ஏற்றி கின்னஸ் சாதனை.
டாப் 4
* அக். 5: உலகின் உயரமான இடத்தில் (19,400 அடி, மிக் லா பாஸ், லடாக்) சாலை அமைக்கப்பட்டது.
* அக். 10: திருப்பரங்குன்றம் மலை என்றே அழைக்க வேண்டும். இங்கு ஆடு, கோழி பலியிடக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
* அக். 28: உலகில் அதிவேக (மணிக்கு ரூ. 896 கி.மீ.,) சீன புல்லட் ரயிலின் (சி.ஆர்., - 450) சோதனை ஓட்டம் நடந்தது.
* அக். 21: ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சானே தகைசி பதவியேற்பு.

