PUBLISHED ON : ஜன 01, 2026

தமிழகம்
செப்.1: பணியாற்றும் ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) கட்டாயம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.
செப்.8: ம.தி.மு.க., வில் இருந்து மல்லை சத்யா நீக்கம்.
செப்.12: இ.கம்யூ., மாநில செயலராக வீரபாண்டியன் தேர்வு.
செப்.13: த.வெ.க., தலைவர்
விஜய் முதல் தேர்தல் பிரசாரத்தை திருச்சியில் துவக்கினார்.
செப்.15: பெற்றோரை இழந்து உறவினர்கள் ஆதரவில் வாழும் குழந்தைகளின் கல்வி, பிற வாழ்வாதாரத் தேவைகளுக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் வழங்கும் 'அன்பு கரங்கள்' திட்டம் துவக்கம்.
செப்.16: சைவ, வைணவம் குறித்த ஆபாச பேச்சு தொடர்பான தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு முடித்துவைப்பு.
செப்.25: முன்னாள் சுகாதாரத்துறை செயலர் பீலா வெங்கடேசன் 56, ஐ.ஏ.எஸ்., காலமானார்.
செப்.27 : பி.எஸ்.என்.எல்., '4ஜி' சேவையை பிரதமர் மோடி துவக்கினார்.
செப்.30: சென்னை எண்ணுாரில் அனல்மின் நிலைய கட்டுமான பணியில் இரும்பு சாரம் விழுந்து விபத்து. அசாம் தொழிலாளர்கள் 9 பேர் பலி.
இந்தியா
செப்.2: தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் பாரதிய ராஷ்ட்ரிய சமீதியில் இருந்து அவரது மகள் கவிதா நீக்கம்.
செப்.4: டில்லியில் பிரதமர் மோடி - சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங் சந்திப்பு. ஐந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
* குடியுரிமை திருத்த சட்டத்தின் (சி.ஏ.ஏ.,) காலக் கெடு 2014 டிச., 31ல் இருந்து 2024 டிச., 31க்கு நீட்டிப்பு. இச்சட்டத்தின்படி இத்தேதிக்கு முன் இந்தியா வந்த பாக்., ஆப்கன், வங்கதேச சிறுபான்மையினருக்கு குடியுரிமை அளிக்கப்படும்.
செப்.8: ஆதாரை அடையாள ஆவணமாக பரிசீலிக்க வேண்டு மென தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.
செப்.10: வாரணாசியில் பிரதமர் மோடி - மொரீஷியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் சந்திப்பு.
செப்.13: வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்துக்கு, 2 ஆண்டுக்குப் பின் முதன் முறையாக பிரதமர் மோடி சென்றார். ரூ.4200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல்.
* மிசோரமில் ரூ. 8071 கோடியில் முதன்முறையாக பைராபி - சாய்ராங் இடையே 51.38 கி.மீ., துாரத்துக்கு ரயில் சேவையை பிரதமர் மோடி துவக்கினார்.
செப்.14: அசாமின் நுமாலிகரில் மூங்கில் மூலம் எத்தனால் தயாரிக்கும் ஆலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
செப்.15: மத்திய அரசின் 'வக்ப் வாரிய' சட்டத் திருத்தத்தில் சில பிரிவுகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
செப்.16: டில்லியில் உள் துறை அமைச்சர் அமித்ஷா - அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி சந்திப்பு.
செப்.17: மத்திய பிரதேசத்தில் ஜவுளிப்பூங்காவை பிரதமர் துவக்கி வைத்தார்.
செப்.20: கேரள அரசு சார்பில் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் பவள விழாவையொட்டி பம்பா நதிக்கரையில் உலகளாவிய ஐயப்ப சங்கமம் நிகழ்ச்சி நடந்தது.
செப்.22: ஆப்கனின் காபூலில் இருந்து டில்லி வந்த விமானத்தில், சக்கர பகுதியில் அமர்ந்து வந்த 13 வயது சிறுவன், விசாரணைக்குப்பின் மீண்டும் அவரது நாட்டுக்கே திருப்பி அனுப்பி வைப்பு.
செப்.23: லடாக் யூனியனில் மாநில அந்தஸ்து, 6வது அட்டவணையில் சேர்க்க கோரி மக்கள் போராட்டம். 4 பேர் பலி. போராட்டத்தை முன்நின்று நடத்திய சோனம் வாங்சுக் கைது.
செப்.26: இந்திய விமானப் படையில் பல ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த 'மிக்-21' போர் விமானம் (ரஷ்ய தயாரிப்பு), பணியில் இருந்து விடுவிக்கப்பட்டது.
செப்.28: டில்லியில் தனியார் கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சாமியார் சைதன்யானந்த சரஸ்வதி கைது.
செப்.29: இந்தியா - பூடான் இடையே ரூ. 4033 கோடியில் ரயில் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி அறிவிப்பு.
உலகம்
செப்.1 : ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் நிலநடுக்கம். 2200 பேர் பலி.
செப்.2: துபாயில் இருந்து 127.3 கிலோ தங்கம் கடத்திய நடிகை ரன்யாவுக்கு, வருவாய் புலனாய்வு துறை ரூ. 102.55 கோடி அபராதம் விதிப்பு.
செப்.9: உக்ரைன் மீதான தாக்குதலின் போது ரஷ்யாவின் ட்ரோன், போலந்து பகுதியை தாக்கியது.
செப்.10: அமெரிக்காவின் ஓரெம் நகரில் பல்கலை நிகழ்ச்சியில் உரையாற்றிய அதிபர் டிரம்பின் ஆதரவாளர் சார்லி கிர்க் 31, சுட்டுக்கொலை.
செப்.12: மாணவர்கள் போராட்டத்தால் நேபாளத்தில் ஆட்சி கவிழ்ப்பு. நேபாள இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி பதவியேற்பு.
* பிரேசிலில் ஆட்சிகவிழ்ப்பு சதியில் ஈடுபட்டதாக முன்னாள் அதிபர் பொல்சனாரோவுக்கு 27 ஆண்டு தண்டனை விதிப்பு.
செப்.26: போலந்து மலை யேற்ற வீரர் ஆன்ட்ரெஜ் பர்ஜில், 'ஆக்சிஜன் பேக்' உதவியின்றி எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து பனியில் சறுக்கியவாறு கீழிறங்கி உலக சாதனை.
கரூரில் விஜய்
செப்.27: கரூரில் த.வெ.க., தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் நெரிசல். 10 குழந்தைகள் உட்பட 41 பேர் பலி. சி.பி.ஐ., விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.
நேபாளத்தில் புரட்சி
செப். 9: நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு விதித்த தடையை எதிர்த்து இளைஞர்கள் போராட்டம், வன்முறையில் 20 பேர் பலி. பிரதமர் சர்மா ஒலி ராஜினாமா.
துணை ஜனாதிபதி
செப்.12: இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக தமிழகத்தின் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு. பா.ஜ., கூட்டணி சார்பில் (452 ஓட்டு) வென்றார். 'இண்டி' கூட்டணியின் சுதர்ஷன் ரெட்டி (300 ஓட்டு) தோல்வி. மொத்தம் (752 ஓட்டு)
வெளிநாட்டு பயணம்
செப். 7: முதல்வர் ஸ்டாலின் பிரிட்டன், ஜெர்மனிக்கு பயணம். ரூ. 15,516 கோடி முதலீடு மூலமாக 17 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் 33 ஒப்பந்தங்கள் கையெழுத்து.
டாப் 4
* செப்.13: 'சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன்' என இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா.
* செப்.14: உலகின் பெரிய கட்சி பா.ஜ., (14 கோடி உறுப்பினர்கள்) என அதன் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பு.
* செப்.17: பிரதமர் மோடி 75வது பிறந்த தினத்தை கொண்டாடினார். பதவிக்காலத்தில் இச்சிறப்பை பெறும் மூன்றாவது பிரதமர். (வாஜ்பாய், மன்மோகன் சிங், மோடி)
* செப்.30: பிலிப்பைன்சின் செபுவில் நிலநடுக்கம். 73 பேர் பலி.

