/
இணைப்பு மலர்
/
வருடமலர்
/
2025ல் ஜனவரி - ஜூனில் நடந்த விளையாட்டு நிகழ்வுகள்
/
2025ல் ஜனவரி - ஜூனில் நடந்த விளையாட்டு நிகழ்வுகள்
PUBLISHED ON : ஜன 01, 2026

ஜனவரி
ஜன.1: நியூயார்க்கில் நடந்த உலக 'பிளிட்ஸ்' செஸ் சாம்பியன் ஷிப்பில் இந்திய வீராங்கனை வைஷாலி வெண்கலம்.
ஜன.17: இந்தியாவின் குகேஷ் (செஸ்), ஹர்மன்பிரீத் சிங் (ஹாக்கி), பிரவீன் குமார் ('பாரா' உயரம் தாண்டுதல்), மனு பாகருக்கு (துப்பாக்கி சுடுதல்) 'கேல் ரத்னா' விருது வழங்கப்பட்டது.
ஜன.18: வதோதராவில் நடந்த விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் பைனலில் விதர்பாவை வீழ்த்திய கர்நாடகா அணி சாம்பியன்.
ஜன.25-26: மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் ஒற்றையரில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ், இத்தாலியின் ஜானிக் சின்னர் சாம்பியன்.
பிப்ரவரி
பிப்.1: இந்தியாவின் சச்சினுக்கு, பி.சி.சி.ஐ., சார்பில் சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
* ஹாக்கி இந்தியா லீக் தொடரில் பெங்கால் அணி கோப்பை வென்றது.
பிப்.2: இங்கிலாந்துக்கு எதிரான 'டி-20' தொடரை 4-1 எனக் கைப்பற்றிய இந்திய அணி கோப்பை வென்றது.
பிப்.12: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது.
மார்ச்
மார்ச்2: நாக்பூரில் நடந்த கேரளாவுக்கு எதிரான ரஞ்சி கோப்பை பைனலில், முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்ற அடிப்படையில் விதர்பா அணி சாம்பியன்.
* துபாய் ஓபன் டென்னிஸ் இரட்டையரில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, ஆஸ்திரேலியா பாபிரின் ஜோடி சாம்பியன்.
மார்ச்3: பிரான்சில் நடந்த கேன்ஸ் ஓபன் செஸ் தொடரில் இந்தியாவின் இனியன் சாம்பியன்.
மார்ச்7: பிராகு செஸ் தொடரில் இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன்.
மார்ச்15: மும்பையில் நடந்த பெண்கள் பிரிமியர் லீக் ('டி-20') பைனலில் மும்பை அணி, டில்லியை வீழ்த்தி 2வது முறையாக கோப்பை வென்றது.
மார்ச்22: துருக்கியில் நடந்த 'ஆர்டிஸ்டிக்' ஜிம்னாஸ்டிக்ஸ் 'அப்பாரடஸ்' உலக கோப்பை 'வால்ட்' பிரிவில் இந்தியாவின் பிரனதி வெண்கலம்.
மார்ச்28: ஜோர்டானில் நடந்த ஆசிய 'சீனியர்' மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மணிஷா (62 கிலோ) தங்கம்.
ஏப்ரல்
ஏப்.2: பஞ்சாப்பில் நடந்த இந்திய ஓபன் தடகளத்தின் ஈட்டி எறிதலில் இந்திய வீராங்கனை அன்னு ராணி தங்கம்.
ஏப்.12: கோல்கட்டாவில் நடந்த ஐ.எஸ்.எல்., கால்பந்து பைனலில் மோகன் பகான் அணி 2-1 என பெங்களூருவை வீழ்த்தி சாம்பியன்.
ஏப்.17: அயர்லாந்தில் நடந்த உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் ('டைம் பார்மட்') தொடரில் இந்தியாவின் பங்கஜ் அத்வானி சாம்பியன்.
ஏப்.27: டுனிசியாவில் நடந்த 'கன்டெண்டர் டேபிள் டென்னிஸ்' தொடரில் இந்தியாவின் மனுஷ் ஷா, தியா ஜோடி சாம்பியன்.
ஏப்.28: 'டி-20' அரங்கில் சதம் விளாசிய இளம் வீரர் என்ற வரலாறு படைத்தார் ராஜஸ்தானின் வைபவ் சூர்யவன்ஷி (14 வயது, 32 நாள், எதிர்: குஜராத்).
மே
மே3: புவனேஸ்வரில் நடந்த சூப்பர் கோப்பை கால்பந்து பைனலில் ஜாம்ஷெட்பூரை வீழ்த்திய கோவா அணி 2வது முறை சாம்பியன் ஆனது.
மே7: டெஸ்ட் அரங்கில் இருந்து இந்தியாவின் ரோகித் சர்மா ஓய்வு.
மே12: டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து இந்தியாவின் விராத் கோலி ஓய்வு.
மே14: இந்திய ராணுவத்தின் கவுரவ 'லெப்டினன்ட் கர்னலாக' இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா நியமனம்.
மே28: கிளப் கால்பந்து அரங்கில் 800 கோல் அடித்த முதல் வீரர் ஆனார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
ஜூன்
ஜூன்3: ஆமதாபாத்தில் நடந்த பிரிமியர் லீக் 18வது சீசனுக்கான பைனலில் பஞ்சாப் அணியை வீழ்த்திய பெங்களூரு அணி முதன்முறையாக கோப்பை வென்றது.
ஜூன்6: பிரிமியர் தொடரில் கோப்பை வென்ற பெங்களூரு அணிக்கு, சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா நடந்தது. கூட்ட நெரிசலில் 11 பேர் பலி.
ஜூன்7-8: பாரிசில் நடந்த பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் ஒற்றையரில் அமெரிக்காவின் கோகோ காப், ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் சாம்பியன்.
ஜூன்8: ஜெர்மனியில் நடந்த 'நேஷன்ஸ் லீக்' கால்பந்து பைனலில் ஸ்பெயினை வீழ்த்திய போர்ச்சுகல் அணி 2வது முறையாக சாம்பியன்.
ஜூன்15: ஆமதாபாத்தில் நடந்த அல்டிமேட் டேபிள் டென்னிஸ் பைனலில் ஜெய்ப்பூரை வீழ்த்திய மும்பை அணி கோப்பை வென்றது.
ஜூன்23: சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவராக ஜிம்பாப்வே முன்னாள் நீச்சல் வீராங்கனை கிறிஸ்டி கவன்ட்ரி (ஜிம்பாப்வே) பதவியேற்றார்.
ஜூன்26: மலேசியாவில் நடந்த ஆசிய ஸ்குவாஷ் இரட்டையர் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார்-அபே சிங், ஜோஷ்னா சின்னப்பா-அனாஹத் சிங், அபே சிங்-அனாஹத் சிங் ஜோடி தங்கம் வென்றன.
'உலகை' வென்ற இந்தியா
ஜன.19: டில்லியில், உலக கோப்பை 'கோ கோ' முதல் சீசன் நடந்தது. பைனலில் நேபாளத்தை வீழ்த்திய இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின. நுாறு சதவீத வெற்றியுடன் இரு அணிகளும் கோப்பை வென்றன.
தங்க மகன்
பிப்.20: கத்தாரில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் ஸ்னுாக்கரில் இந்தியாவின் பங்கஜ் அத்வானி தங்கம். இது, இத்தொடரில் இவரது 14வது தங்கம்.
'கிங்' பிரக்ஞானந்தா
பிப்.2: நெதர்லாந்தில் டாடா ஸ்டீல் செஸ் தொடர் நடந்தது. இதன் மாஸ்டர்ஸ் பிரிவில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா 20, சாம்பியன்.
சிங்கப் பெண்கள்
பிப்.2: மலேசியாவில், பெண்கள் 'டி-20' உலக கோப்பை (19 வயது) நடந்தது. பைனலில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்திய இந்திய அணி 2வது முறையாக சாம்பியன்.
டாப் 4
* மார்ச்8: ஈரானில் நடந்த ஆசிய கபடி சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய பெண்கள் அணி, ஈரானை வீழ்த்தி 5வது முறையாக கோப்பை வென்றது.
* மார்ச்28: மும்பையில் நடந்த இந்திய ஓபன் ஸ்குவாஷ் தொடரில் இந்தியாவின் அனாஹத் சிங் சாம்பியன்.
* ஜூன்14: லண்டன், லார்ட்சில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய தென் ஆப்ரிக்க அணி முதன்முறையாக சாம்பியன்.
* ஜூன்30: யு.எஸ்., ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி சாம்பியன் பட்டம் வென்றார்.

