/
இணைப்பு மலர்
/
வருடமலர்
/
2025ல் ஜூலை - டிசம்பரில் நடந்த விளையாட்டு நிகழ்வுகள்
/
2025ல் ஜூலை - டிசம்பரில் நடந்த விளையாட்டு நிகழ்வுகள்
2025ல் ஜூலை - டிசம்பரில் நடந்த விளையாட்டு நிகழ்வுகள்
2025ல் ஜூலை - டிசம்பரில் நடந்த விளையாட்டு நிகழ்வுகள்
PUBLISHED ON : ஜன 01, 2026

ஜூலை
ஜூலை6: டி.என்.பி.எல்., தொடரில் திருப்பூர் அணி சாம்பியன்.
ஜூலை11: விம்பிள்டன் டென்னிஸ், பெண்கள் ஒற்றையரில், ஸ்வியாடெக் (போலந்து) முதல் முறையாக சாம்பியன்.
ஜூலை12: தமிழக செஸ் வீரர் ஹரிகிருஷ்ணன் 23, இந்தியாவின் 87வது கிராண்ட்மாஸ்டர் ஆனார்.
ஜூலை13: விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையரில் இத்தாலியின் சின்னர் முதல் கோப்பை வென்றார்.
ஜூலை31: உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் 13 ஆண்டுக்குப் பின், இந்திய ஆண்கள் அணி பதக்கம் (வெண்கலம்) வென்றது.
ஆகஸ்ட்
ஆக.4: இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி, டெஸ்ட் தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.
ஆக.15: சென்னை செஸ் தொடரில் இந்தியாவின் பிரனேஷ் (சாலஞ்சர்ஸ் பிரிவு), ஜெர்மனியின் வின்சென்ட் கீமர் (மாஸ்டர்ஸ்) சாம்பியன்.
ஆக.20: சென்னை, தேசிய தடகள சாம்பியன்ஷிப்பில் தமிழகம் சாம்பியன். தமிழகம் சார்பில் தனலட்சுமி, தமிழரசு (100 மீ.,), விஷால் (400 மீ.,) உள்ளிட்டோர் தங்கம் வென்றனர்.
ஆக.27: பிரிமியர் கிரிக்கெட்டில் இருந்து தமிழகத்தின் அஷ்வின் ஓய்வு.
ஆக.31: பாரிசில் நடந்த உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி வெண்கலம் கைப்பற்றியது.
செப்டம்பர்
செப்.7: பீஹாரில் நடந்த ஆசிய கோப்பை ஹாக்கி பைனலில் இந்தியா, 4--1 என தென் கொரியாவை வீழ்த்தி, சாம்பியன் ஆனது.
* உலக வில்வித்தை 'காம்பவுண்டு' பிரிவில் ரிஷாப் யாதவ், அமன் சைனி, பிரதமேஷ் அடங்கிய இந்திய அணி, முதன் முறையாக தங்கம் வென்று சாதனை.
செப்.8: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையரில் ஸ்பெயினின் அல்காரஸ் சாம்பியன்.
செப்.14: டோக்கியோ, உலக தடகள சாம்பியன்ஷிப் 100 மீ., ஓட்டத்தில் அமெரிக்காவின் மெலிஸ்சா (10.61 வினாடி), ஜமைக்காவின் செவில்லே (9.77) தங்கம் வென்றனர்.
* உலக 'ஸ்பீடு ஸ்கேட்டிங்' சாம்பியன்ஷிப்பில் (சீனா) தங்கம் வென்று வரலாறு படைத்தார் இந்தியாவின் ஆனந்த்குமார்.
செப்.15: கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரில் இந்தியாவின் வைஷாலி சாம்பியன். 'கேண்டிடேட்ஸ்' தொடரில் பங்கேற்க தகுதி.
அக்டோபர்
அக்.13: சர்வதேச பாட்மின்டனில் இருந்து ஓய்வு பெற்றார் இந்தியாவின் செய்னா 35.
அக்.17: துருக்கியில் நடந்த 'சீனியர்' சாப்ரே சேட்டிலைட் வாள் சண்டையில் இந்தியாவின் பவானி தேவி (தமிழகம்) வெள்ளி.
அக்.24: பஹ்ரைனில் நடந்த ஆசிய யூத் விளையாட்டு கபடி போட்டியில் இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் தங்கம் வென்றன. தமிழகம் சார்பில் கார்த்திகா, அபினேஷ் அசத்தினர்.
அக்.25: சிட்னி ஒருநாள் போட்டியில் (ஆஸி.,) பீல்டிங் செய்த போது இந்திய வீரர் ஷ்ரேயஸ் ஐயர், மண்ணீரலில் ஏற்பட்ட சிதைவு காரணமாக, தொடரில் இருந்து விலகல்.
அக்.29: பயிற்சியின் போது பந்து கழுத்தில் தாக்கியதால் ஆஸ்திரேலியாவின் 17 வயது கிரிக்கெட் வீரர் பென் ஆஸ்டின் மரணம்.
அக்.30: புரோ கபடி லீக் தொடரில் டில்லி அணி சாம்பியன் ஆனது. பைனலில் 31--28 என புனே அணியை வீழ்த்தியது.
நவம்பர்
நவ.2: சென்னை ஓபன் டென்னிஸ் ஒற்றையரில் இந்தோனேஷியாவின் ஜானிஸ் டிஜென் சாம்பியன்.
நவ.13: ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் 3 தங்கம் வென்ற முதல் வீராங்கனை ஆனார் இந்தியாவின் ஜோதி.
நவ.17: ஏ.டி.பி., பைனல்ஸ் டென்னிஸ் ஒற்றையரில் தொடர்ந்து 2வது ஆண்டாக (2024, 2025), ஒரு செட் கூட இழக்காமல், கோப்பை வென்ற முதல் வீரர் ஆனார் இத்தாலியின் சின்னர் 24.
நவ.19: உலக கோப்பை கால்பந்து (2026) தொடரில் பங்கேற்க தகுதி பெற்ற சிறிய நாடு என குராசோ (1,56,115 பேர்) சாதனை.
நவ.23: பார்வையற்றோர் 'டி--20' உலக கோப்பை தொடரில் இந்திய பெண்கள் சாம்பியன். பைனலில் நேபாளத்தை வீழ்த்தியது.
டிசம்பர்
டிச.8: கேண்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு (2026, மார்ச் 28-ஏப். 16) தகுதி பெற்ற ஒரே இந்திய வீரரானார் பிரக்ஞானந்தா.
டிச.16: பிரிமியர் ஏலத்தில் ஆஸ்திரேலியாவின் கேமரான் கிரீனை ரூ. 25.2 கோடிக்கு கோல்கட்டா அணி வாங்கியது.
டிச.18: சையது முஷ்தாக் தொடரில் முதன் முறையாக ஜார்க்கண்ட் சாம்பியன். பைனலில், 69 ரன்னில் ஹரியானாவை வென்றது.
* துபாயில் நடந்த 'ரோல் பால்' உலக கோப்பை தொடரில் இந்திய ஆண், பெண்கள் அணிகள் சாம்பியன் ஆகின.
டிச.23: தேசிய பாட்மின்டனில் தமிழக ஆண்கள் அணி சாம்பியன்.
டிச.26: இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, 'பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார்' விருது பெற்றார்.
டிச.28: உலக ரேபிட் செஸ் தொடரில் இந்தியாவின் ஹம்பி, அர்ஜூன் வெண்கலம்.
டிச.30: சொந்தமண்ணில் நடந்த 'டி-20' தொடரை இந்திய பெண்கள் அணி 5-0 என முழுமையாக (எதிர்-இலங்கை) வென்றது.
முதல் ஸ்குவாஷ் கோப்பை
டிச.14: உலக கோப்பை ஸ்குவாஷ் தொடர் சென்னையில் நடந்தது. இதன் பைனலில் வேலவன், ஜோஷ்னா, அனாஹத், அபே சிங் இடம் பெற்ற இந்திய அணி, எகிப்தை வீழ்த்தி முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
சபாஷ் ஷீத்தல்
செப்.27: உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற இரு கைகள் இல்லாத முதல் வீராங்கனை என வரலாறு படைத்தார் இந்தியாவின் ஷீத்தல் தேவி.
'பை - பை'
நவ.1: கிராண்ட்ஸ்லாம் அரங்கில் பட்டம் வென்ற மூத்த வீரர், இந்தியாவின் போபண்ணா 45, ஓய்வு பெற்றார். இரட்டையர் பிரிவில் 1 கிராண்ட்ஸ்லாம், 6 மாஸ்டர்ஸ் உட்பட 26 பட்டம் வென்றுள்ளார்.
ஆசிய சாம்பியன்
செப்.28: துபாயில் நடந்த ஆசிய கோப்பை 'டி-20' தொடரின் பைனலில் வென்ற இந்திய அணி (எதிர், பாக்.,) சாம்பியன் ஆனது. இம்மகிழ்ச்சியில் கேப்டன் சூர்யகுமார் உள்ளிட்ட இந்திய அணியினர்.
டாப் 4
* ஜூலை 23: ஆசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர் ஆனார் ஷ்ரேயாசி.
* ஆக. 25: காமன்வெல்த் பளுதுாக்குதலில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கம்.
* செப்: 14: போல் வால்ட் போட்டியில் சுவீடனின் டுப்ளான்டிஸ் (6.30 மீ.,) 14வது முறை உலக சாதனை.
* நவ. 23: ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டனில் இந்திய வீரர் லக்சயா சென் சாம்பியன்

