sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வருடமலர்

/

2025 - தொழில்

/

2025 - தொழில்

2025 - தொழில்

2025 - தொழில்


PUBLISHED ON : ஜன 01, 2026

Google News

PUBLISHED ON : ஜன 01, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகம்

மார்ச் 14: தமிழக பட்ஜெட் தாக்கல். ரூபாய் குறியீடுக்கு பதிலாக, ரூ. இடம் பெற்றது. அதிகபட்சமாக கல்வி துறைக்கு ரூ. 55,261 கோடி ஒதுக்கீடு. ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்கப்படும் என அறிவிப்பு.

மார்ச் 15: தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல். ரூ. 45,661 கோடி ஒதுக்கீடு.

ஏப். 1: மகளிர் பெயரிலான வீடு, மனை உள்ளிட்ட பத்திர பதிவுக்கான கட்டணம் ஒரு சதவீதம் குறைப்பு.

ஆக. 4: துாத்துக்குடியில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் ரூ. 32,554 கோடி முதலீட்டில் துவங்கப்பட உள்ள தொழில்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அக். 10: தமிழகத்தில் 5000 சதுர அடி வரையிலான தொழிற்சாலை கட்டடங்களுக்கு சுயசான்று வகையில் அனுமதி பெறலாம் என அரசாணை வெளியீடு.

டிச. 6: மதுரையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ. 36,660 கோடி மதிப்பிலான 91 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

டிச. 31: 2025 ஜன. 1ல் ஒரு கிராம் (22 காரட்) தங்கம் விலை ரூ. 7150. இது டிச. 31ல் ரூ. 12,550 என ஒரே ஆண்டில் 75% உயர்ந்தது.

டிச. 5: துாத்துக்குடியில் மின்சார பஸ், ஸ்கூட்டர் தயாரிக்கும் ஆலை அமைக்க, 490 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்ய 'வின்பாஸ்ட்' நிறுவனத்துடன், தமிழக அரசு ஒப்பந்தம்.

இந்தியா

பிப். 1: மத்திய பட்ஜெட் (2025 - 2026) தாக்கல். ஆண்டு வருமானம் ரூ. 12 லட்சம் வரை வரி இல்லை.

பிப். 2: ரயில்வே சேவை அனைத்துக்கும் ஒரே செயலி (ரயில் ஒன்) அறிமுகம்.

பிப். 6: உணவுப்பொருள் வினியோக நிறுவனமான 'ஜொமேட்டா', தன் பெயரை 'எட்டர்னல்' என மாற்றியது.

பிப். 10: அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இரும்பு, அலுமினியத்துக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என அந்நாட்டு அதிபர் டிரம்ப் அறிவிப்பு.

மார்ச் 1: பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவராக துஹின் பாண்டே பதவியேற்பு.

மார்ச் 3: ரயில்வே நிறுவனங்களான ஐ.ஆர்.சி.டி.சி.,, ஐ.ஆர்.எப்.சி., ஆகியவற்றுக்கு நவரத்னா அந்தஸ்து வழங்கியது மத்திய அரசு.

மார்ச் 5: 'நைட் பிராங்க்' வெளியிட்ட அறிக்கையில் உலகில் அதிக சொத்து மதிப்பு கொண்ட தனி நபர் (பணக்காரர்) எண்ணிக்கையில் இந்தியாவுக்கு (85,698 பேர்) நான்காவது இடம். முதலிடத்தில் அமெரிக்கா (9,05,413) உள்ளது.

மார்ச் 5: சந்தாதாரர் ஆகி ஓராண்டுக்குள் உயிரிழக்க நேரிட்டால், குறைந்தபட்ச ஆயுள் காப்பீடு பலனாக ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும் என இ.பி.எப்., அறிவிப்பு.

மார்ச் 6: மக்காச் சோளத்திற்கு விதிக்கப்பட்ட ஒரு சதவீத செஸ் வரியை தமிழக அரசு நீக்கியது.

மார்ச் 11: வரியில்லா உளுந்து இறக்குமதியை ஓராண்டுக்கு நீட்டித்தது மத்திய அரசு.

மார்ச் 25: உலகின் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம். ஆண்டுக்கு 23.90 கோடி டன் உற்பத்தியாகிறது. இது உலகளவில் 24 சதவீதம்.

ஏப். 21: வோடபோன் ஐடியாவில் மத்திய அரசின் பங்கு 49 சதவீதமாக உயர்வு.

மே 19: உருளைக்கிழங்கு உற்பத்தியில் 2050ல் சீனாவை முந்தி இந்தியா முதலிடம் பெறும் என சர்வதேச உருளை மையம் கணிப்பு.

மே 25: ஒரே நாளில் (ஜன. 25) எல்.ஐ.சி., நிறுவனத்தின் 4,52,839 முகவர்கள், 5,88,107 பாலிசிகளை விற்று கின்னஸ் சாதனை.

மே 25: 2024 - 2025 நிதியாண்டுக்கான இ.பி.எப்., வட்டி விகிதம் 8.25 சதவீதம் என அறிவிப்பு.

மே 26: ஜப்பானை முந்தி உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடானது இந்தியா (4.187 டிரில்லியன் அமெரிக்க டாலர்).

ஜூலை 15: 2013 - 2014 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 2024 - 2025ல் மொத்த நேரடி வரி வருவாய் வசூல் 274 சதவீதம் அதிகரித்தது.

ஜூலை 31: இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத வரி, ரஷ்யாவில் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக அபராதமாக 10 சதவீத வரி விதித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப். ஆக. 6ல் கூடுதலாக 25% வரி விதித்தார்.

ஆக. 15: ஆண்டுக்கு ரூ. 3000 செலுத்தி, 200 முறை சுங்கச்சாவடியை கடந்து செல்லும் திட்டம் தொடக்கம்.

ஆக. 23: 1961க்குப்பின் கொண்டுவந்த 'புதிய வருமான வரி சட்டம் 2025' மசோதாவுக்கு ஜனாதிபதி முர்மு ஒப்புதல்.

ஆக. 30: இந்தியா உட்பட பல நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த கூடுதல் வரி விதிப்பு சட்ட விரோதமானது என அந்நாட்டு மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு.

ஆக. 30: வாகனங்களுக்கான 'பேன்சி' எண்களை ஏல முறையில் ஒதுக்கீடு செய்யும் புதிய நடைமுறையை அறிமுகபடுத்தியது தமிழக அரசு.

ஆக. 30: இந்தியாவின் முதல் 'டெம்பர்டு கிளாஸ்' தயாரிப்பு ஆலை (ஆப்டிமஸ் இன்பிராகாம்), உத்தரபிரதேசத்தின் நொய்டாவில் துவக்கம்.

செப். 22: மக்களுக்கு வரிச்சலுகை வழங்கும் விதமாக ஜி.எஸ்.டி., 2.0 அமல். 12%, 28% வரி நீக்கம். பெரும்பாலான பொருட்கள் 5% வரிக்குள் கொண்டு வரப்பட்டது. 18% தொடர்கிறது. ஆடம்பர பொருட்களுக்கு 44% வரி விதிப்பு.

அக். 4: காசோலை (செக்) பணமாக்குவதற்கு ஒரு மணி நேரத்தில் 'கிளியரிங்' செய்யும் நடைமுறை துவக்கம்.

அக். 8: 'ஸ்மார்ட் கண்ணாடி' வாயிலாகவே பணம் செலுத்தும் வசதியை நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (என்.பி.சி.ஐ.,) அறிமுகம் செய்தது.

அக். 8: நடப்பாண்டின் 9 மாதங்களில் 'டிமேட் கணக்கு துவங்குவோர் எண்ணிக்கை, கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 40% சரிவு.

அக். 8: இந்தியாவில் ஒரு ஜி.பி., டேட்டா விலை, ஒரு கப் தேநீரை விட குறைவு என பிரதமர் மோடி தெரிவித்தார்.

அக். 14: ஆந்திராவின் விசாகபட்டினத்தில் ரூ. 1.31 லட்சம் கோடி மதிப்பில் செயற்கை நுண்ணறிவு மையம் அமைக்க உள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவிப்பு.

நவ. 1: குறிப்பிட்ட புதுப்பிக்கதக்க மின்சார உபகரணங்கள் இறக்குமதிக்கு பதிவு செய்வது கட்டாயம் என்ற நடைமுறை அமல்.

நவ. 3: ஆராய்ச்சி, மேம்பாட்டு திட்டங்களில் தனியார் துறை பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில், ரூ. 1 லட்சம் கோடி நிதியுதவி திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.

நவ. 29: இந்திய ராணுவ தளவாட ஏற்றுமதி 2014ல் ரூ. 2000 கோடியில் இருந்து 2024 - 25ல் ரூ.23 ஆயிரம் கோடியாக உயர்வு.

டிச. 5: வங்கிகளுக்கு வழங்கப் படும் 'ரெப்போ' வட்டி விகிதத்தை 5.50ல் இருந்து 5.25 என ரிசர்வ் வங்கி குறைத்தது.

டிச. 15: காப்பீடு துறையில் 100% அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் மசோதா லோக்சபாவில் தாக்கல்.

உலகம்

மார்ச் 4: மெக்சிகோ, கனடா, சீனாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கும் முறை அமலுக்கு வந்தது.

மே 25: சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட ஜி.டி.பி., அடிப்படையிலான பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, சீனா, ஜெர்மனிக்கு அடுத்து இந்தியாவுக்கு நான்காவது இடம்.

ஜூலை : பிரிட்டன் - இந்தியா இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து.

அக். 3: உலகில் ரூ. 44.35 லட்சம் கோடி வருமானம் ஈட்டிய முதல் நபரானார் அமெரிக்காவின் எலன் மஸ்க்.

அக். 28: உலகில் அதிவேகமாக (மணிக்கு ரூ. 896 கி.மீ.,) இயங்கும் 'சி.ஆர்., - 450' என்ற சீனாவின் அதிவேக புல்லட் ரயிலின் சோதனை ஓட்டம் நடந்தது.

அக். 31: உலகின் முதன்முதலாக 5 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமானது அமெரிக்காவின் என்விடியா.

நவ. 4: இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டனின் 'ஹிந்துஜா' குழும தலைவர் கோபிசந்த் 85, காலமானார்.






      Dinamalar
      Follow us