PUBLISHED ON : ஜன 01, 2026

ரிலீசில் சாதனை
தமிழ் சினிமா வரலாற்றில் இந்தாண்டில் 285 படங்கள் வெளியாகின. இதற்கு முன் 2024 (245) படம்.
அதிக வசூல்
தமிழில் கூலி (ரூ. 600 கோடி), குட் பேட் அக்லி (ரூ.200 கோடி),
டிராகன் (ரூ.150 கோடி), விடாமுயற்சி (ரூ.100 கோடி), டியூட் (ரூ.100 கோடி),
மதராஸி (ரூ.100 கோடி), தலைவன் தலைவி (ரூ.100 கோடி) வசூலை குவித்தது.
அதிக லாபம்
அதிக லாபம் தந்த படம் பிரதீப் ரங்கநாதனின் 'டிராகன்'. ரூ. 30 கோடி செலவில் தயாராகி ரூ. 150 கோடி வசூல் செய்தது. சசிகுமாரின் 'டூரிஸ்ட் பேமிலி' ரூ. 10 கோடி பட்ஜெட்டில் உருவாகி ரூ. 90 கோடி வசூலித்தது.
அதிக படங்களில் ஹீரோ (4)
விமல்: படவா, பரமசிவன் பாத்திமா, தேசிங்கு ராஜா 2, மகாசேனா
அதிக படங்களில் நாயகி (3)
திரிஷா: விடாமுயற்சி, குட் பேட் அக்லி, தக் லைப்
நித்யா மேனன்: காதலிக்க நேரமில்லை, தலைவன் தலைவி, இட்லி கடை
லாபம் தந்த படங்கள்
மத கஜ ராஜா, குடும்பஸ்தன், டிராகன், குட் பேட் அக்லி, டூரிஸ்ட் பேமிலி, மாமன், தலைவன் தலைவி, கூலி, பைசன், டியூட் ஆகிய 10 படங்கள் மட்டுமே அனைத்து தரப் பினருக்கும் லாபம் தந்தன.
டும் டும்...
நடிகை சமந்தா - ராஜ் நிடிமொரு
இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் -அகிலா
நடிகை சாக் ஷி அகர்வால் - நவ்னீத் மிஸ்ரா
நடிகை பார்வதி நாயர் - ஆஷ்ரித் அசோக்
நடிகை அபிநயா -- கார்த்திக்
நடிகர் ஸ்ரீராம் - நிகில் பிரியா
சுமாரான வெற்றி
விமர்சன ரீதியாகவும், ஓரளவு வசூலை பெற்ற படங்களாக வீர தீர சூரன் 2, மர்மர், லெவன், மார்கன், மெட்ராஸ் மேட்னி, பறந்து போ, 3 பிஹெச்கே, மாரீசன், ஹவுஸ் மேட்ஸ், சக்தித்திருமகன், ஆர்யன், மிடில் கிளாஸ், ஏமகாதகி, ஆண்பாவம் பொல்லாதது, அங்கம்மாள் ஆகியவை அமைந்தன.
ஏமாற்றிய 'தக் லைப்'
மணிரத்னம் இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில், கமல், சிலம்ப ரசன், திரிஷா நடிப்பில் வெளியான 'தக் லைப்', அஜித்தின் விடா முயற்சி, சூர்யாவின் ரெட்ரோ, சிவகார்த்திகேயனின் மதராஸி படங்கள் தோல்வியை தழுவின.
12 ஆண்டுக்கு பின்...
2025ன் முதல் வெற்றி படம் பொங்கலை முன்னிட்டு வெளியான 'மத கஜ ராஜா'. 12 ஆண்டுக்கு பின் வெளியாகி ரூ. 50 கோடி வசூலை கடந்தது.
ஆரம்பமே வெற்றி
ராஜேஷ்வர் காளிசாமி (குடும்பஸ்தன்), அபிஷன் ஜீவிந்த் (டூரிஸ்ட் பேமிலி), கீர்த்தீஸ்வரன் (டியூட்), கலையரசன் தங்கவேல் (ஆண்பாவம் பொல்லாதது) ஆகிய இயக்குநர்களின் அறிமுக படமே வெற்றி பெற்றது.
விஜய்க்கு நோ
விஜய் நடிப்பில் படம் வெளியாகவில்லை. அரசியலில் இறங்கியதால் சினிமாவை விட்டு விலகும், அவரது கடைசி படமாக 'ஜனநாயகன்' 2026 ஜன. 9ல் வெளியாகிறது.
சிம்பொனி சிகரம்
ஆசியாவிலேயே முதன்முறையாக இசையமைப்பாளர் இளையராஜா மார்ச் 9ல் லண்டனில் 'வேலியன்ட்' சிம்பொனி இசையை அரங்கேற்றினார்.
கல்யாணி டாப்
கல்யாணி பிரியதர்ஷன் முதன்மை வேடத்தில் நடித்து வெளியான 'லோகா சாப்டர் 1', உலகில் ரூ.260 கோடியுடன் அதிகம் வசூலித்த மலையாள படமானது.
பார்ட் 2 படங்கள்
வீர தீர சூரன் 2, தேசிங்கு ராஜா 2, கும்கி 2
ஓடிடி ரிலீஸ்
நேரடியாக ஓடிடியில் டெஸ்ட், ராம்போ, டியர் ஜீவா, ஸ்டீபன், உன் பார்வையில், கந்தன் மலை (யுடியூப் ரிலீஸ்) படங்கள் வெளியாகின.
இயக்குநர் அறிமுகம்
தயாரிப்பாளர் சஷிகாந்த், நடிகை வனிதா (மிசஸ்&மிஸ்டர்) உள்ளிட்ட பலர் இயக்குநராக அறிமுகமாகினர்.
சூரிக்கு வெற்றி
காமெடி நடிகராக இருந்து ஹீரோவான சந்தானத்தின் 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்', யோகி பாபுவின் 'ஜோரா கைய தட்டுங்க', சூரியின் 'மாமன்' படங்கள் ஒரே நாளில் வெளியாகின. சூரியின் படம் வெற்றி பெற்றது.
அதிகரித்த 'மீண்டும் ரிலீஸ்'
ரன், ப்ரெண்ட்ஸ், குஷி, நாயகன், பையா, அட்டகாசம், அஞ்சான், ஆட்டோகிராப், அண்ணாமலை, படையப்பா என பல வெற்றிப்படங்கள் மீண்டும் ரிலீஸாகின.
அனிமேஷன் படம்
'பான் இந்தியா' வெளியீடாக வந்த அனிமேஷன் படம் மகாவதார் நரசிம்மா, ரூ. 325 கோடி வசூலித்தது.
வசூலில் முதலிடம்
ஹிந்தி படமான 'துரந்தர்' ரூ.1000 கோடியுடன் இந்தாண்டு அதிக வசூலைக் குவித்த இந்திய படமானது.
இசையில் ராஜ்யம் (8) ஜிவி பிரகாஷ்
வணங்கான், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், கிங்ஸ்டன், வீர தீர சூரன் 2, குட் பேட் அக்லி, படையாண்ட மாவீரா, இட்லி கடை, மாஸ்க்
ஆங்கில மோகம்
டூரிஸ்ட் பேமிலி, குட் பேட் அக்லி, பைசன், பயாஸ்கோப், மிஸஸ் & மிஸ்டர், ஓஹோ எந்தன் பேபி, சீசா, மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங், 2கே லவ் ஸ்டோரி, டிராகன், ஜென்டில்வுமன், கிங்ஸ்டன், ஸ்வீட்ஹார்ட், சுமோ, ரெட்ரோ, 3 பிஹெச்கே, பன் பட்டர் ஜாம், ரெட் பிளவர், கூலி, டீசல், டியூட், த இன்வெஸ்டிகேஷன், மெசேஞ்சர், அதர்ஸ், மாஸ்க், மிடில் கிளாஸ், பிபி 180, ப்ரைடே, ரிவால்வர் ரீட்டா, கேம் ஆப் லோன்ஸ் உட்பட 80 படங்கள் ஆங்கில தலைப்பில் வெளியாகின.
தமிழில் இருந்து கன்னடம்
* தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது என நடிகர் கமல் பேசியது சர்ச்சையானது. இதனால் படம் கன்னடத்தில் வெளியாகவில்லை.
* துபாயில் இருந்து பெங்களூருவுக்கு 15 கிலோ தங்கம் கடத்திய நடிகை ரன்யா ராவ் கைது.
* போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா கைது.
* நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவை ரகசிய திருமணம் செய்து ஏமாற்றியதாக வழக்கு.
* நடிகை லட்சுமி மேனன் போதையில் ஒரு நபரை கடத்தி அடித்ததாக அவர் மீது வழக்குப்பதிவு.
* 2017ல் மலையாள நடிகை காரில் கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் விடுதலை.
நீங்கா நினைவில்...
மார்ச் 16 : நடிகை பிந்து கோஷ்
மார்ச் 25 : நடிகர் மனோஜ் பாரதிராஜா
ஜூலை 13 : நடிகர் கோட்டா சீனிவாச ராவ்
ஆக., 2 : நடிகர் மதன் பாப்
செப்., 5 : பாடலாசிரியர் பூவை செங்குட்டுவன்
செப்., 18 : ரோபோ ஷங்கர்
அக்., 23 : இசையமைப்பாளர் சபேஷ்
நவ., 10 : நடிகர் அபிநய்
டிச., 4 : தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன்
டிச., 20 : நடிகர் சீனிவாசன் (மலையாளம்)

