
ஜனவரி
ஜன. 20: கேரளாவில் 2024 அக். 14ல் காதலன் ஷாரோன்ராஜ்க்கு உணவில் விஷம் கொடுத்து கொலை செய்த வழக்கில் காதலி கரீஷ்மாவுக்கு கேரள நீதிமன்றம் துாக்கு தண்டனை விதித்தது.
ஜன. 29: மேட்டுப்பாளையத்தில் (2019ல்) வேறு ஜாதி பெண்ணை காதல் திருமணம் செய்த தம்பி, அவரது மனைவியை வெட்டிக் கொன்ற அண்ணனுக்கு கோவை எஸ்.சி., / எஸ்.டி., நீதிமன்றம் துாக்கு தண்டனை விதிப்பு.
பிப்ரவரி
பிப். 10: ராஜஸ்தானின் கோடாவை சேர்ந்த மணிஷ், மனைவி ஆஷாவுக்கு ரூ. 15 லட்சம் கொடுத்து ரயில்வேயில் வேலை வாங்கினார். மனைவி பிரிந்ததால், இத்தகவலை ரயில்வேயில் புகாரளித்தார். ஆஷா சஸ்பென்ட். வழக்கை சி.பி.ஐ., விசாரிக்கிறது.
மார்ச்
மார்ச் 26: சென்னையில் ஒரு மணி நேரத்தில் ஆறு பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட மகாராஷ்டிராவின், ஈரானிய கொள்ளையன் ஜாபர் குலாம் உசேன் 'என்கவுன்டரில்' சுட்டுக்கொலை.
ஏப்ரல்
ஏப். 15: திருநெல்வேலி தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு மாணவரை, சக மாணவர் அரிவாளால் வெட்டினார். தடுக்க முயன்ற ஆசிரியைக்கும் வெட்டு விழுந்தது.
மே
மே 23: ம.பி.,யின் இந்துாரை சேர்ந்த ராஜா ரகுவன்சி - சோனம் தம்பதியினர் மேகாலயாவுக்கு தேனிலவுக்கு சென்றனர். அங்கு காதலருடன் சேர்ந்து கணவன் ரகுவன்சியை கொலை செய்து நாடகமாடிய சோனம் உள்ளிட்ட நால்வர் கைது.
ஜூன்
ஜூன் 28: வரதட்சணை கொடுமையால் அவிநாசி இளம்பெண் ரிதன்யா 27, துாக்கிட்டு தற்கொலை.
ஜூலை
ஜூலை 14 : காட்பாடி அருகே ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணியை பாலியல் சீண்டல் செய்து, தள்ளி விட்ட வழக்கில் ஹேமராஜ்க்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து திருப்பத்துார் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு.
ஜூலை 27: நெல்லையில் ஐ.டி., இன்ஜினியர் கவின், காதல் விவகாரத்தில் கொலை. இவ்வழக்கில் அப்பெண்ணின் சகோதரர் சுர்ஜித், தந்தை எஸ்.ஐ., சரவணன் கைது.
ஆகஸ்ட்
ஆக. 6: திருப்பூர் குடிமங்கலத்தில் மடத்துகுளம் எம்.எல்.ஏ., மகேந்திரன் தோட்டத்தில் பணியாற்றும் தந்தை - மகன் பிரச்னையை விசாரிக்க சென்ற எஸ்.ஐ., சண்முகவேல் படுகொலை.
ஆக. 10: மதுரை திருநகர் பஸ் ஸ்டாப் அருகே துாங்கிய மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து, கல்லை போட்டு கொலை செய்த இளைஞர் அலெக்ஸ் கைது.
செப்டம்பர்
செப். 13: கோயம்பேட்டில் இருந்து அரசு பஸ்சை திருடி சென்ற ஒடிசாவின் ஞானசஞ்சன் சாஹு ஆந்திராவின் நெல்லுாரில் கைது.
செப். 16: சென்னை கோயம்பேடு சந்தையில் வியாபாரியிடம் அலைபேசியை திருடிவிட்டு, யாரிடம் திருடினோம் எனத் தெரியாமல் அவரிடமே அந்த அலைபேசியை விற்க முயன்ற மாங்காடு சந்தோஷ் கைது.
அக்டோபர்
அக். 12: நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏழை தொழிலாளர்களை மூளை சலலை செய்து 'கிட்னி' திருடியதாக புகார். இவ்வழக்கில் இரு புரோக்கர்கள் கைது.
நவம்பர்
நவ. 1: மயிலாப்பூரைச் சேர்ந்த தனியார் நிறுவன அதிகாரி ஸ்ரீவத்ஸன் 73. இவரிடம் 'டிஜிட்டல் கைது' பெயரில் ரூ. 4.15 கோடி கொள்ளையடித்த உத்தரபிரதேசத்தின் மனீஷ்குமார் கைது.
நவ. 13: சென்னை கவர்னர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் (2023ல்) ரவுடி கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.
நவ. 19: ராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவி ஷாலினியை 17, கொலை செய்த முனியராஜ் 21, கைது.
டிசம்பர்
டிச. 7: தஞ்சாவூரில் தி.மு.க., முன்னாள் எம்.பி., ஏ.கே.எஸ். விஜயன் வீட்டில் 87 பவுன் நகை திருடிய வழக்கில் தர்மபுரியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது.
டிச. 8: ராமநாதபுரம் ஆர்.எஸ்.மங்கலத்தில் ரியஸ் எஸ்டேட் அதிபர் வீட்டில் 160 பவுன் தங்க நகை, ரூ. 18 லட்சம் திருடு போனது.
டிச. 9: ம.பி.யில் கஞ்சா கடத்திய மாநில அமைச்சர் பிரதிமா பக்ரின் சகோதரர் அனில் பக்ரி கைது.
டிச. 24: திருவள்ளூர் பள்ளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஒடிசாவை சேர்ந்த பிஸ்வ கர்மாவுக்கு, இரட்டை ஆயுள் தண்டனை விதிப்பு.

