PUBLISHED ON : ஆக 02, 2026

அ நிறம் | அளவு
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கிராமத்து மக்கள், கோழி சண்டை போட்டிகளைக் காண மிகவும் விரும்புவர். சண்டை கோழிகள் மீது பணம் கட்டி, போட்டியில் கலந்து கொள்கின்றனர். இங்குள்ள, பீஜாப்புர் பகுதி, கோழி சண்டைக்கு மிகவும் பிரபலம். இங்கு வசிக்கும் மக்கள், பழமையான பழக்கவழக்கங்களை இன்னும் கைவிட தயாராக இல்லை. இளம் தலைமுறையினர் கூட, 'மூர்க் லடாய்' என்ற கோழி சண்டை போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.
கிராமத்து மக்கள், தங்கள் வீடுகளில் யாருக்காவது நோய் ஏற்பட்டால், விரைவில் குணமாக வேண்டும் என, வேண்டுதல் செய்து, கோழி சண்டைகளை நடத்துகின்றனர்.
- ஜோல்னாபையன்
