
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒடிசா மாநில கடல் பகுதியில், குறிப்பிட்ட நாளில் கடல் தண்ணீர், 5 கி.மீ., துாரத்துக்கு உள்வாங்கி விடும். அப்போது, படத்தில் உள்ள நண்டுகள் அங்கு வெளிப்படும். இவை குதிரையின் கால்களில் உள்ள லாட வடிவில் இருப்பதால், 'ஹார்ஸ் ஷூ க்ராப்ஸ்' என, ஆங்கிலத்தில் அழைக்கின்றனர்.
இதன் ரத்தம் மருத்துவ குணம் கொண்டது. பல கொடிய நோய்களுக்கான தடுப்பு மருந்து தயாரிக்க, பயன்படுகிறது. இதனால், இதன் ரத்தம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் நண்டு ரத்தத்தின் விலை, 11 லட்சம் ரூபாய்.
— ஜோல்னாபையன்

