PUBLISHED ON : நவ 08, 2026

ஆந்திர மாநிலத்தில், தீபாவளி இரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது. நரக சதுர்த்தி, தீபாவளி என, இரண்டு தினங்களிலும் கொண்டாடுகின்றனர். நரக சதுர்த்தி அன்றுதான் எண்ணெய் குளியல், புத்தாடை, இனிப்பு- பலகாரம் அனைத்தும். தீபாவளியன்று, தீபவிளக்கு ஏற்றுகின்றனர். ஆமணக்கு செடியின் கிளையில் எண்ணெய்யில் தோய்த்த திரியை வைத்து, தீபம் ஏற்றுவது இங்குள்ளவர்களின் வழக்கம்
தஞ்சை சரஸ்வதி நுாலகத்தில் உள்ள ஆகாச பைரவ ஜல்பம் என்ற நுாலில், வாணவெடிகள் பற்றிய செய்திகள் உள்ளன
தீபாவளியன்று வெடி வெடிக்கும் பழக்கம், முகலாய மன்னர், பாபர் காலத்தில் ஏற்பட்டது
‘மகதாப்’ என்ற உருதுச் சொல்லில் இருந்து தான், மத்தாப்பு என்ற சொல் வந்தது. இதற்கு, ஒளி என்று பொருள்
தீபாவளியன்று, ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடக்கும் போது, பக்தர்களுக்கு எண்ணெய்யும், சிகைக்காயும் பிரசாதமாக வழங்குவது வழக்கம்
ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் தீபாவளியன்று பெருமாளுக்கு மட்டுமல்ல, ஆழ்வார்களுக்கும் புத்தாடை அணிவிக்கப்படுகிறது
காசியில் உள்ள தங்க, காலபைரவர் சிலையை தீபாவளி நாளன்று மட்டுமே வீதி உலாவாக கொண்டு வருகின்றனர்.
– எம்.அசோக் ராஜா
