PUBLISHED ON : ஜன 11, 2026

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடந்த, 60 ஆண்டுகளுக்கு மேலாக, சினிமா நடிகர்களுக்கு ஆடை வடிவமைப்பு மற்றும் தையற் தொழில் செய்து வருபவர், சாய் பாபு. ஆந்திர மாநிலம், காக்கிநாடா அருகே உள்ள, பிடாபுரம் கிராமம் தான் இவரது பூர்வீகம். இவரது தந்தை, லட்சுமணன் ராவ். பிழைப்பு தேடி சென்னை வந்தவர், சென்னை கோடம்பாக்கத்தில், ஆடை அலங்காரம் செய்யும் தொழில் செய்து வந்தார். இவருடைய ஆறு மகன்களில் மூத்தவரான, சாய் பாபுவும் இதே தொழிலில் இறங்கினார். தெலுங்கு நடிகர்களான, என்.டி.ராமாராவ், நாகேஸ்வரராவ், மலையாள நடிகர்கள், மோகன்லால், மம்மூட்டி, தமிழ் நடிகர்களான, ரஜினி, கமல், அஜித் மற்றும் விக்ரம் போன்றவர்கள் இவர் தைத்த ஆடைகளை அணிந்துதான் திரையில் தோன்றியுள்ளனர்.
- ஜோல்னாபையன்

