PUBLISHED ON : ஜூலை 12, 2026

அ நிறம் | அளவு
பெண்கள் அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக செயல்பட்டு சாதனை புரிந்து வருகின்றனர். அசாம் மாநிலம், டேராடூன் பகுதியை சேர்ந்த, ராணுவ அதிகாரி மகளான, சோனாலி கோஷ் என்ற பெண், வனவிலங்குகளை பாதுகாப்பதில் ஆர்வம் கொண்டுள்ளார்.
பயங்கர நவீன ஆயுதங்களுடன் விலங்குகளை கொல்வதற்காக காட்டுக்குள் புகுந்த திருடர்களை ஒழிக்க முன்வந்தார். அதற்காக, ஆதிவாசி மக்களின் உதவியையும் நாடினார். ஆதிவாசிகள் ஆதரவுடன் இவரால் வெற்றிகரமாக செயல்பட முடிவதாக கூறுகிறார். 25 ஆண்டுகளாக காட்டுக்குள் பணியாற்றி வரும் இவர் தற்போது, பல விலங்குகளுக்கு தோழியாகி விட்டார்.
- ஜோல்னாபையன்
