PUBLISHED ON : பிப் 15, 2026

புனிதமான சிவராத்திரி அன்று, முதல் கால பூஜையின்போது, சோமாஸ்கந்தரையும், இரண்டாம் காலத்தில், தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தியையும், மூன்றாம் காலத்தில், கருவறையின் பின்புறத்தில் உள்ள, லிங்கோத்பவரையும், நான்காம் காலத்தில், ரிஷபாருட மூர்த்தி எனப்படும், சந்திரசேகரரையும் வழிபட வேண்டும் என, சாஸ்திரம் சொல்கிறது.
* காஞ்சிபுரம், கைலாசநாதர் ஆலய கருவறையை சுற்றி, மார்பாலேயே ஊர்ந்து செல்லும்படியாக ஓர் பிரகாரம் அமைந்துள்ளது. இதை, அவ்விதம் வலம் வருபவர் பிறவிப் பிணியில் இருந்து விடுபடுவர் என்பது ஐதீகம். இதை, சொர்க்கப் பிரதட்சணம் என்பர்
* கோதாவரி நதிக்கரையில் உள்ள திரயம்பகேஸ்வரர் இதர சிவலிங்கங்களில் இருந்து மாறுபட்டவர். கருவறையில் உருண்டையான ஒரு பள்ளம் மட்டுமே இருக்கும். அதில், பிரம்மா மற்றும் விஷ்ணுவின் உருவங்கள் கட்டை விரல் அளவில் அமைக்கப்பட்டுள்ளன.
* அரிதான லிங்கம் ஒன்று காஞ்சிபுரத்தில் காணப்படுகிறது. சிவன் - சக்தி ரூபத்தின் ஒருமித்த வடிவமாக அமைந்துள்ள இது, சக்தி லிங்கம் என, அழைக்கப்படுகிறது.

