sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

மார்ச் 21 - உலக வன தினம்!

/

மார்ச் 21 - உலக வன தினம்!

மார்ச் 21 - உலக வன தினம்!

மார்ச் 21 - உலக வன தினம்!

1


PUBLISHED ON : மார் 15, 2026

Google News

PUBLISHED ON : மார் 15, 2026

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடந்த 2012ம் ஆண்டு, மார்ச், 21ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால், உலக வன தினம் அறிவிக்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம், காடுகள் மற்றும் மரங்களின் முக்கியத்துவத்தையும், அவற்றை நிலையாக பேணிக்காப்பதன் அவசியத்தையும் உலக மக்களுக்கு உணர்த்துவதாகும்.

காடுகளின் முக்கியத்துவம்...

சுற்றுச்சூழல் சமநிலை: கா டுகள், பூமியின் நுரையீரல்கள் போலச் செயல்படுகின்றன. அவை அதிக அளவில் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி, நாம் சுவாசிப்பதற்கு தேவையான ஆக்ஸிஜனை வெளியிடுகின்றன. இது, புவி வெப்பமயமாதலை தடுக்க உதவுகிறது.

பல்லுயிர் வளம்: உ லகில் வாழும் விலங்குகள், தாவரங்கள் மற்றும் நுண்ணுயிர்களில், 80 சதவீதத்துக்கும் அதிகமானவை காடுகளையே, தங்கள் வீடாக கொண்டுள்ளன. காடுகளை பாதுகாப்பது, இந்தப் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்க உதவுகிறது.

நீர் சுழற்சி: கா டுகள், மண்ணரிப்பைத் தடுக்கின்றன, நீரின் தரத்தை பராமரிக்கின்றன, நிலத்தடி நீரைச் செறிவூட்டுகின்றன. மேலும், மழைப்பொழிவை ஒழுங்குபடுத்துகின்றன.

பொருளாதாரப் பலன்கள்: உ லக மக்கள் தொகையில், நான்கில் ஒரு பகுதி மக்களுக்கு, உணவு, மருந்து மற்றும் வருமானம் போன்ற வடிவங்களில் வாழ்வாதாரத்தை வழங்குகின்றன, காடுகள்.

இத்தினத்தில், மக்கள் அனைவரும் மரம் நடுதல், காடு பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்றல், நிலையான வன மேலாண்மை கொள்கையை ஆதரித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட ஊக்குவிக்கப்படுவர்.

பூமி, நம்மை எவ்வாறு பாதுகாக்கிறதோ, அதேபோல ஆரோக்கியமான காடுகளை நாமும் காப்போம்.

- திருநிறைச்செல்வன்






      Dinamalar
      Follow us