PUBLISHED ON : செப் 07, 2025

அமெரிக்காவில், 'ட்ரோன் சீட்' என்ற நிறுவனம், நவீன தொழில்நுட்பத்தின் மூலம், காடுகளை மீட்டெடுக்கும், அற்புதமான பணியை செய்கிறது.
'ட்ரோன்'களால் மரம் நடுதல் என்பது, சாதாரண முயற்சி அல்ல; ஒரு நாளைக்கு, ஒரு லட்சம் மரங்களை நடும் அதிவேக திட்டம் இது.
இங்கு, 'ட்ரோன்'கள், விதைகளை, விதை குண்டுகளாக மாற்றி, துல்லியமாக மண்ணில் பாய்ச்சுகின்றன. மனிதர் செய்யும் வேலையை விட, 10 மடங்கு வேகமாக செய்து முடிக்கின்றன.
காடு அழிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் குறிவைத்து, இந்த, 'ட்ரோன்'கள் பறந்து சென்று, பசுமையை மீட்டெடுக்கின்றன.
கடந்த, 2014ல் துவங்கிய இந்நிறுவனம், 2023 வரை, 40 லட்சம் மரங்களை நட்டுள்ளது.
ஒரு, 'ட்ரோன், இரண்டு பைலட்டுகளால் இயக்கப்பட்டு, ஒரு மணி நேரத்தில், ஆயிரக்கணக்கான விதைகளை வீசுகிறது. இது, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் எதிர்கால புரட்சியாகப் பார்க்கப்படுகிறது.
மனிதர்களும், இயந்திரங்களும் இணைந்து, பூமியைப் பசுமையாக்கும் மகத்தான சாகசத்தை செய்து வருகிறது, அமெரிக்கா.
- ஜோல்னாபையன்