PUBLISHED ON : ஜூலை 26, 2026

அ நிறம் | அளவு
கேரளம் மாநிலம், காசர்கோடு பகுதியை சேர்ந்த கல்லுாரி மாணவர், அபி. ஒரு சக்கரம் மட்டும் உள்ள சைக்கிளில் கேரளத்தை சுற்றி வருகிறார். கல்லுாரி வகுப்பு முடிந்ததும், ஆட்டோ ஓட்டி கிடைக்கும் பணத்தை சேர்த்து, ஒற்றை சக்கர சைக்கிள் வாங்கி ஊர்ச்சுற்றி சாதனை படைத்து வருகிறார்.
இந்த சைக்கிளை ஓட்ட, ஆரம்பத்தில் சிரமப்பட்டார். ஆனால், தொடர் பயிற்சியால், சாலையில் ஓட்ட துவங்கினார்.
பயணத்தின்போது, இளைஞர்கள் போதை பழக்கத்துக்கு அடிமை ஆகக் கூடாது என்று விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். அடுத்ததாக, நாடு முழுவதும் இப்பயணத்தை மேற்கொள்ள இருப்பதாக கூறுகிறார், இந்த இளைஞர்.
— ஜோல்னாபையன்
