PUBLISHED ON : மார் 15, 2026

பள்ளி ஆசிரியையான, எ.ஜெயஸ்ரீ, வயது 55, கடந்த, ஏழு ஆண்டுகளுக்கு முன், சாலை விபத்தில் சிக்கி, சுயநினைவை இழந்தார். விபத்தின் பாதிப்பால், தன் பெயர், மகன் மற்றும் உறவினர்களை மறந்தார். இவரை அனைத்து மருத்துவ சிகிச்சைகளாலும் காப்பாற்ற முடியாத நிலை. விபத்தின் காரணமாக அதிர்ச்சியில் சுயநினைவை இழந்திருக்கலாம் என்பதால், தன் அம்மாவின் இந்த நிலையை மாற்ற நினைத்த மகன், மருத்துவரின் யோசனைபடி, உடற்பயிற்சி கூடத்துக்கு அழைத்து சென்றார். அங்கு பெற்ற பயிற்சி, அவரை பழைய நிலைக்கு திருப்பி உள்ளது.
இன்று, சிறந்த பளுதுாக்கும் வீராங்கனையாக பரிசுகள் பல பெற்று சாதனையாளர் ஆகிவிட்டார், ஜெயஸ்ரீ. கேரளாவில், பாலக்காடு, உயர்நிலை பள்ளியில் தற்சமயம் பணியாற்றி வரும் இவர், மாணவர்களுக்கு உடற்பயிற்சியின் அருமை பெருமைகளை எடுத்துரைத்து வருகிறார்.
- ஜோல்னாபையன்

