PUBLISHED ON : மே 31, 2026

அ நிறம் | அளவு
பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகின்றனர். ஆனால், 'ஆம்புலன்ஸ்' வாகனத்தை ஓட்ட பெண்கள் அதிகமாக முன்வருவது இல்லை. ஆனால், கேரள மாநிலம், கோட்டயம், குறுப்பந்துறை பகுதியை சேர்ந்த, சொதேசி தீபா என்ற பெண், மூன்று ஆண்டுகளாக, 108 'ஆம்புலன்ஸ்' வாகனத்தை வெற்றிகரமாக இயக்கி வருகிறார்.
இவர் தான் கேரளாவின் முதல் பெண் 'ஆம்புலன்ஸ்' ஓட்டுநர். வாகனங்கள் மீது மோகம் கொண்ட தீபா, நேரம் கிடைக்கும் போதெல்லாம், 'பைக்'கில் ஏறி ஊர்களை சுற்றி வருபவர். 'பைக்'கில் தனியாக நாடு முழுவதும் சுற்றி வந்துள்ளார். பெண் என்று ஒதுங்கி வாழாமல், சாதனை ஏற்படுத்த வேண்டும் என்கிறார், இந்த புதுமைப்பெண்.
- ஜோல்னாபையன்
