
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
யானைகள், தங்களின் துதிக்கையை உணவு உண்ணவும், தண்ணீர் குடிக்கவும், எதிரிகளை துரத்துவதற்கும் பயன்படுத்தும். ஆனால், துதிக்கை இழந்த குட்டி யானை ஒன்று கேரளா மாநிலம் அதிரப்பள்ளி வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த குட்டி யானை, மற்ற யானைகளை போல சகஜமாக வாழ முடியாது என, கால்நடை மருத்துவர்கள் கூறினாலும், கடந்த நான்கு ஆண்டுகளாக எந்தவித சிரமும் இல்லாமல் வாழ்ந்து வருகிறது. இது, பசுக்களை போல தண்ணீர் குடித்து, உணவு சாப்பிடுகிறது. குட்டி யானையின் இச்செயல், கால்நடை மருத்துவர்களை வியக்க வைத்துள்ளது.
- ஜோல்னாபையன்

