sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : பிப் 08, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 08, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மாவுக்கு,

நான், 33 வயது பெண். என்னுடைய, 25வது வயதில் திருமணமானது. என் பெற்றோருக்கு நான் ஒரே பெண். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள். அப்பா, தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அம்மா, இல்லத்தரசி.

கணவர், வசதியானவர். மூன்று படுக்கையறை கொண்ட, சொந்தமான, 'பிளாட்' உள்ளது. அவரது அம்மா இறந்து விட்டார். அப்பா மட்டும் தான். அவரது ஒரே அக்காவுக்கு திருமணமாகி வெளியூரில் வசிக்கிறார்.

திருமணமாகி இரண்டு ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருந்தோம். அதன்பின் கோவில் பிரார்த்தனை மற்றும் 'ட்ரீட்மென்ட்' என்று முயற்சி செய்து, ஆண் குழந்தை பிறந்தது.

நான் கர்ப்பமானதிலிருந்து உடல்நலம் பலவீனமாக இருந்ததால், இரண்டு ஆண்டுகள் அம்மா வீட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலை.

தினமும், என் கணவர், அலுவலகம் முடிந்து, என்னை வந்து பார்த்து, வேண்டியவைகளை வாங்கிக் கொடுத்து விட்டு செல்வார்.

குழந்தை பிறந்த ஓராண்டுக்கு பின், புகுந்த வீட்டுக்கு வந்தேன். அப்போது, என் கணவரின் போக்கில் மாற்றம் தெரிய ஆரம்பித்தது. விசாரித்ததில், கணவருக்கும், அவரது குடியிருப்பில் இருக்கும் இன்னொரு பிளாட்டில் வசிக்கும் பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதை அறிந்தேன்.

கணவரிடம் கேட்டதற்கு, 'அவளது குழந்தைகளுக்கு ஸ்கூல் பீஸ் கட்ட, கொஞ்சம் பணம் கடனாக கேட்டாள், அதான் கொடுத்து உதவினேன்...' என்றார்.

'அதை ஏன் இவ்வளவு தயக்கத்துடன் சொல்கிறீர்கள். நீங்கள் கடன் கொடுத்த விஷயம், அவள் கணவருக்கு தெரியுமா?' என்றதும், கணவருக்கு கோபம் வந்து விட்டது.

வாய்க்கு வந்தபடி திட்டினார். 'நீ எனக்கு தேவையில்லை. உன் அம்மா வீட்டுக்கு போ...' என்று, கலாட்டா செய்தார்.

தினமும் மது அருந்திவிட்டு வர ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில், மன அழுத்தம் அதிகமாக, குழந்தையுடன் அம்மா வீட்டுக்கு வந்து விட்டேன். இப்படியே ஒரு ஆண்டு கடந்தது. குழந்தைக்கு வேண்டியவைகளை மட்டும் வாங்கி அனுப்பி விடுவார், கணவர். ஆனால், நான் போன் செய்தால், பேச மாட்டார்.

வேறு வழி இல்லாமல், அந்த பெண்ணின் மொபைல் எண்ணை கண்டுபிடித்து, போன் செய்து, 'நீங்கள் திருமனமானவர் தானே. ஏன் என் கணவரிடம் பழகுகிறீர்கள்? அவரை விட்டு விலகி விடுங்கள்...' என்று கூறினேன்.

'இதை உன் கணவரிடம் சொல். என்னை ஏன் கேட்கிறீர்கள்?' என்று கடுமையாக பேசினாள், அப்பெண்.

இன்னும் எவ்வளவு காலத்துக்கு அம்மா வீட்டிலேயே இருப்பது? குழந்தையின் படிப்பு மற்றும் எதிர்கால வாழ்க்கை என்னாகுமோ என்று கவலையாக உள்ளது. நான் என்ன செய்யட்டும் அம்மா?

- இப்படிக்கு, உங்கள் மகள்.

அன்பு மகளுக்கு,

நீ என்ன படித்துள்ளாய்? வேலை பார்க்கிறாயா அல்லது இல்லத்தரசியா? உனக்கும், உன் கணவருக்கும் இடையே வயது வித்தியாசம் என்ன? அடிக்கடி உனக்கு உடல்நலக் குறைவு ஏற்படுமா? -போன்ற தகவல்கள் உன் கடிதத்தில் இல்லை.

நீ பிளஸ் 2 படித்தவள். வேலைக்கு போக விரும்பாத இல்லத்தரசியென, யூகிக்கிறேன். திருமணமான பெண்களுக்கு பொருளாதார பாதுகாப்பு இல்லை என்றால், அவர்களால் சுதந்திரமாய் செயல்பட முடியாது. அவர்கள் கணவர்களுக்கு நிரந்தர அடிமைகளே. நீ வீட்டுக்கு ஒரே பெண். உன் பெற்றோர் உன்னை மேற்படிப்பு படிக்கச் சொல்லி வற்புறுத்தவில்லையா? அப்படி அவர்கள் உன்னை வற்புறுத்தவில்லை என்றால் உன்னை செல்லம் கொடுத்து கெடுத்து விட்டனர் என, பொருள்.

எனக்கு தெரிந்த நிறைய பெண்கள் பிரசவத்துக்கு அம்மா வீட்டுக்கு செல்வதில்லை. முழு பிரசவ செலவையும் கணவரை செய்யவைத்து கணவரின் அருகாமையிலேயே இருக்கின்றனர்.

கர்ப்பமானதிலிருந்து இரண்டு ஆண்டுகள் நீ அம்மா வீட்டிலேயே இருந்தது பெரிய தவறு.

கணவருடன் இருந்தே உன் உடல் நலத்தை பேணக்கூடாதா?

திருமணமான ஆணும், திருமணமான பெண்ணும் திருமணபந்தம் மீறிய உறவு வைத்துக் கொள்வது சம்பந்தப்பட்ட இருவருக்கும் பாதுகாப்பானது. கல்யாணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் கிடையாது. மீறி கர்ப்பம் தரித்தால், பொறுப்பு திருமணபந்தம் மீறிய உறவு வைத்திருக்கும் பெண்ணின் கணவருக்கு போய்விடும்.

மது அருந்தலும், கள்ளஉறவும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள் போல. இப்போது உன் குழந்தைக்கு ஆறு வயதாகும் என, எண்ணுகிறேன். இன்னும் ஏன் அம்மா வீட்டில் இருக்கிறாய்? இன்னும் உன் கணவருக்கு ஏழெட்டு கள்ளத் தொடர்புகள் ஏற்படக் காத்திருக்கிறாயா?

நீ அறியாமை கலந்த அப்பாவி.

உடனே குழந்தையுடன் கணவர் வீட்டுக்குப்போ.

நாள் முழுவதும் நோயாளி பாவனையில் இராதே. மகிழ்ச்சியாக இரு, கணவரை மகிழ்ச்சிப்படுத்து. கணவரின் குடிப்பழக்கம் தானாக குறைந்து விடும். மகனை கொஞ்ச ஆரம்பித்தால் மனைவி மீதான மனப்பிணக்கு நீங்கும். திருமணபந்தம் மீறிய உறவு கசந்து நேர்வழி திரும்பி விடுவார்.

எல்லா மேஜிக்கும் உன் கையில்தான் உள்ளது. தறிகெட்ட வாகனத்தை கட்டுபாட்டுக்கு கொண்டு வர உன்னால் முடியும்.

வாழ்த்துகள்!

- என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us