sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பதில்கள்!

/

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

1


PUBLISHED ON : மார் 15, 2026

Google News

PUBLISHED ON : மார் 15, 2026

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கே.செண்பக லதா, ஸ்ரீவைகுண்டம்: நாளிதழ்கள், ஊடகங்கள், போஸ்டர்களில் வெளியாகும் தி.மு.க., விளம்பரங்களில், முதல்வர் ஸ்டாலின், சிரித்த முகத்துடன், 'போஸ்' கொடுப்பதே இல்லையே... ஏன்?

இதே சந்தேகம் எனக்கும் ஏற்பட்டது; பொறுப்பாசிரியரிடம் சொன்னேன். அவரும், ஸ்டாலினிடம் தகவலைச் சொல்லுமாறு, அவருடைய பி.ஏ.,விடம் சொல்லி விட்டார். தகவல், ஸ்டாலினுக்கு சென்று விட்டது. இனி அவர், எல்லா விளம்பரங்களுக்கும் சிரித்தபடி, 'போஸ்' கொடுப்பார் என, நம்புவோம்!

டி.ரவீந்திரன், சென்னை: 'சட்ட அமைச்சரான ரகுபதிக்கு, அடிப்படை அறிவு இல்லாதது அதிர்ச்சி அளிக்கிறது...' என, உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளதே?

திருப்பரங்குன்றம் தீபத்துாண் விவகாரத்தில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி எடுத்த நடவடிக்கைகளையும், அவரது பேச்சுக்களையும் வைத்து, உயர் நீதிமன்றம் இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளது. அ.தி.மு.க.,வில், ஜெ., ஆட்சியில் சிறப்பாக செயல்பட்டவருக்கு, இப்போது என்ன, 'அழுத்தம்' வருகிறதோ தெரியவில்லை!

டி.சுதாகர், ராமநாதபுரம்: தமிழகத்தில், புதிதாக பொறுப்பேற்கும் ஒவ்வொரு அரசும், தமிழகத்தின் கடன் சுமையை ஏற்றுகிறதே... குறைக்க வழியே இல்லையா?

பதவி ஏற்கும் ஒவ்வொரு அரசும், மக்கள் வரிப் பணத்தை வீணடித்தும், கடன் வாங்கி, 'இலவசமாக இதைக் கொடுக்கிறேன்; அதைக் கொடுக்கிறேன்...' என்றும், வாரி இரைத்துக் கொண்டிருக்கிறது. அப்புறம் எப்படி கடன் சுமை குறையும்? இலவசங்களைப் பெற்றுக் கொள்பவர்கள் யோசிக்க ஆரம்பித்தால் தான் விடிவு வரும்!

சி.பிரபாகரன், சிவகங்கை: சமீப காலமாக, தமிழகத்தில், கீழே கிடந்த நகைகள் மற்றும் பணத்தை, உரியவர்களிடமோ, காவலரிடமோ ஒப்படைத்து வரும் செய்திகள் அதிகமாக வெளியாகிறதே...

நேர்மைக்குப் பெயர் பெற்றவர்கள், நம் மாநில மக்கள்; அதற்காக விளம்பரமும் தேடிக் கொள்வதில்லை அவர்கள்! இப்போதெல்லாம், சமூக வலைதளங்கள், எந்த நிகழ்வையும் உடனுக்குடன் படம் பிடித்து வெளியிடுவதால், பொதுமக்களுக்கு தெரிந்து விடுகிறது; அவ்வளவு தான் விஷயம்!

ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி: மூளைச்சாவு அடைந்த, பத்து மாத பெண் குழந்தை உடல் உறுப்பு தானம் மூலம், நான்கு பேருக்கு வாழ்வு கிடைத்துள்ளதே?

அக்குழந்தைக்கும், அதன் பெற்றோருக்கும் நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை! நம் நாட்டில், மருத்துவத் துறை இந்தளவு முன்னேற்றம் அடைந்துள்ளது, நமக்கெல்லாம் பெருமை தானே!

வி.பிரான்சிஸ்கா, சென்னை: ஒரு வழியாக, தி.மு.க., - காங்., கூட்டணி உறுதியாகி விட்டதே?

தேர்தலுக்கு தேர்தல், காங்கிரஸ் அரங்கேற்றும் நாடகம் ஊரறிந்ததே! சோனியா காலம் வரை, காங்கிரஸ், தி.மு.க.,வுடன் தான் இருக்கும்!

* ஆர்.ஜெயபாரதி, சாத்துார்: முதல்வர் எங்கு பேசினாலும், 'எந்த மிரட்டலுக்கும் பயப்பட மாட்டோம்...' என்று பேசுகிறாரே... அவரை யார் மிரட்டுகின்றனர்? விரக்தியின் வெளிப்பாடா இருக்குமோ?

அதானே? அவர் ஆட்சியில் நடப்பவற்றைச் சுட்டிக் காட்டினால், அவரை மிரட்டுகின்றனர் என, எண்ணிக் கொள்கிறார் போலும். 'ரெய்டு' செய்வதெல்லாம், அந்தந்த அரசு துறைகளின் வேலை. இவர் அலட்டிக் கொள்ள வேண்டாம் அல்லவா!

* கே.கணேசன், மறைமலைநகர், செங்கல்பட்டு: 'பெண்களை அடிக்கலாம்...' என, ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு, சட்டம் இயற்றியுள்ளதே?

ஒரு பெண்ணை, அவர் கணவரோ, உறவினரோ, ரத்த காயம் இல்லாமல், எலும்பு உடையாமல், வெளிக்காயம் இல்லாமல், எவ்வளவு வேண்டுமானாலும் அடிக்கலாம் என, ஆப்கானிஸ்தான் அரசு கூறி இருப்பது, மிகவும் கண்டிக்கத்தக்க செயல். பெண்களை மதிக்கும் நாட்டினருக்கு, பலத்த அதிர்ச்சியைக் கொடுக்கும் இந்த உத்தரவு.






      Dinamalar
      Follow us