தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

1


PUBLISHED ON : அக் 11, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 11, 2026

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பி. ராஜன், மதுரை: முதல்வர் விஜயின், மக்களிடமான அணுகுமுறை, எம்.ஜி.ஆர்., பாணியில் உள்ளதே...

எம்.ஜி.ஆரைப் போல, மக்களின் நாயகனாக இருக்கவே ஆசைப்படுகிறார், விஜய். எம்.ஜி.ஆர்., போல் பரோபகாரியாகவும், தமிழக மக்களுக்கு நல்லாட்சி தருவார் என்றும் எதிர்பார்ப்போம்.

அ.ரவீந்திரன், கன்னியாகுமரி: டில்லியில், யமுனை நதியை சுத்தம் செய்வது போல், கூவம் நதியை சுத்தம் செய்யுமா தமிழக அரசு?

சென்னையில் உள்ள தன்னார்வலர்களும், அரசுடன் கைகோர்த்து களமிறங்க வேண்டும்; மேலும், கூவம் நதியில் கழிவு நீரை கலப்பவர்களும், கழிவுகளைக் கொட்டுபவர்களும், தவறை உணர்ந்து திருந்தினால், கூவம் மணப்பது சாத்தியமே!

பெ.பொன் பாண்டி, மதுரை: 'முதல்வர் விஜய், என் அன்புத் தம்பி ஆகி விட்டார்' என, தி.மு.க., - எம்.பி., கனிமொழி கூறுகிறாரே...

தன் அண்ணன் ஸ்டாலினை, 'ஸ்வீட் அங்கிள்' என, விஜய் கூறியிருப்பதால், இப்படி சொந்தம் கொண்டாடி இருக்கிறார் இந்த, 'ஸ்வீட் சிஸ்டர்!'

* எம்.கல்லுாரி ராமன், சாயல்குடி: டில்லியில், காற்று மாசைக் கட்டுப்படுத்த, தனியார் நிறுவனங்களில், 50 சதவீதத்தினர், வீட்டிலிருந்தே பணியாற்ற, டில்லி அரசு உத்தரவிட்டுள்ளதை பாராட்டலாம் தானே...

வடமாநிலங்களில், குளிர்காலம் துவங்கும்போது, கோதுமை அறுவடை முடிந்து, வைக்கோலை எரிக்கத் துவங்குவர். பனியுடன் சேரும் இப்புகை, காற்று மாசை அதிகரிக்கும்; இவற்றுடன், வாகன புகையும் சேரும்போது, காற்று மாசு மிகவும் அதிகரித்து, மூச்சு விடவே மக்கள் சிரமப்படுவர். இப்போதைய இந்த உத்தரவால் மாசும் மட்டுப்படும்; பெட்ரோல் - டீசல் பயன்பாடும் குறையும்!

வி.பி.காந்திமதி, மதுரை: கட்டு கட்டாய் பணம், நகைகளுடன், யூ - டியூபரான பெண் ஒருவர் வெளியிட்ட, 'வீடியோ'வை பார்த்த திருடர்கள், அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று, அவ்வளவையும் அள்ளிச் சென்றுள்ளனரே...

தங்களிடம் உள்ள சொத்து குறித்து, தம்பட்டம் அடிப்பவர்களுக்கு, இது நல்ல பாடம்!

* ஜி.கிருஷ்ணமூர்த்தி, சென்னை: 'மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும்போது, அதன் தரத்தை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்' என, பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது குறித்து...

மாணவர்களுக்கு தரமான உணவு கிடைக்க வழி சொல்லியிருக்கிறது பள்ளிக்கல்வித்துறை. இந்த உத்தரவை, ஆசிரியர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

அ.மயில்சாமி, கோவை: 'பயங்கரவாதமும், நட்புறவும் ஒன்றாக பயணிக்க முடியாது...' என, ஐ.நா., பொதுச்சபையில், நம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர், ஜெய்சங்கர், நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் கூறியிருப்பது பற்றி...

பயங்கரவாதத்தை மூச்சுக்காற்றாக சுவாசிக்கும் பாகிஸ்தானுக்கு, உலக அரங்கில், இந்தியா விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை இது. புரிந்து கொண்டு, பாகிஸ்தான் தன் கொட்டத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும். பிரதமர் மோடியும், 'இனியும் பொறுப்பதற்கில்லை' என, சொல்லியிருக்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us