தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : அக் 18, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 18, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ம.ரங்கராஜன், மதுரை: 'சிறுமியின் ஆபாச வீடியோக்களை நீக்க முடியாவிட்டால், அந்த இணையதளத்தையே முழுமையாக முடக்க வேண்டும்...' என்று, காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதே...

சரிதானே! இப்படி, 'கிடுக்கி' போட்டால் தான், ஆபாச வீடியோக்கள் வெளியாவதைக் கட்டுப்படுத்த முடியும்!

ப.மகராசி, தஞ்சை: பெஹல்காம் உட்பட, பல முக்கிய தாக்குதல்களை நடத்திய, 'லக்ஷர் இ தொய்பா' கமாண்டர் மூசா, இந்திய பாதுகாப்பு படையினரால், 'என்கவுன்டர்' மூலம் கொல்லப்பட்டு விட்டாரே... பாராட்டலாம் தானே...

பாக்., பயங்கரவாதிகளிடம் இருந்து நம்மைக் காக்க, 1990ல், ஜம்மு-காஷ்மீரில் ஆரம்பிக்கப்பட்டது, 'ராஷ்ட்ரீய ரைபிள்ஸ்' படை! இந்தப் படையினர் தான், மூசாவையும், அவரது கூட்டாளிகளையும் அழித்தனர்; இன்னும் வேட்டை தொடர்கிறது. அமரன் திரைப்படத்தில் பார்த்திருப்பீர்களே... அந்த வீரர்களைப் போல், 'நித்ய கண்டம் பூர்ண ஆயுசு' தான், நம், 'ராஷ்ட்ரீய ரைபிள்ஸ்' படையினரின் வாழ்க்கையும்!

* பெ.லோகநாதன், கொம்பாடியூர், தர்மபுரி: 'இண்டி' கூட்டணியில், தி.மு.க.,விற்கு பதிலாக, த.வெ.க., இடம் பெறுவது சரியாக இருக்குமா?

கடந்த லோக்சபா தேர்தலின்போது, 'இண்டி' கூட்டணியில் இருந்த ஒவ்வொரு தலைவரும், தான் தான் பிரதமர் வேட்பாளர் என்ற நினைப்பில் இருந்ததால், யாரிடமும் ஒற்றுமையே தென்படவில்லை. இப்படி கோஷ்டிகளாக செயல்படும் கூட்டணியில் சேர்வது, விஜயின் மனநிலைக்கும், எதிர்காலத்துக்கும் நல்லதல்ல!

* வீ.குமாரி, சென்னை: ' மத்திய அரசின் உறுதுணையுடன், என் கூட்டணி அரசு, ஆந்திர மாநிலத்தில், 'ஜெட்' வேகத்தில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது...' என, பெருமிதப்படுகிறாரே அம்மாநில முதல்வர், சந்திரபாபு நாயுடு...

மாநில வளர்ச்சிக்காக எந்த சந்தர்ப்பத்தையும் விடுவதே இல்லை அவர். 2019 சட்டசபை தேர்தலில் ஆட்சியை இழந்ததற்கான காரணங்களில், மத்திய அரசிடம் மோதல் போக்கை கடைபிடித்து, மாநில வளர்ச்சியைக் கோட்டை விட்டதும் ஒன்று. எனவே, இம்முறை மிகவும் சுதாரித்து, மாநில வளர்ச்சிக்காக, முழு முனைப்புடன் செயலாற்றுகிறார்!

ஜி.முருகவேல், மதுரை: அரசு அலுவலகங்களில், லஞ்சம் வாங்குபவர்களை பிடிக்கின்றனர்; கொடுப்பவர்களை என்ன செய்வது?

லஞ்சத்தை வாங்கும் போக்கு நின்றால், லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியமே இருக்காதே! சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு, காரியத்தை சாதிக்க லஞ்சம் கொடுப்பவர்களின் முட்டியை தட்ட வேண்டியது தான்!

பெ.பொன் ராஜபாண்டி, மதுரை: ' பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க, காகித அளவிலான நடவடிக்கை மட்டும் போதாது; களத்தில் இறங்குங்கள்...' என, போலீசாருக்கு, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளதே...

போலீசார், உச்ச நீதிமன்ற உத்தரவை, மதித்து நடந்தே தீர வேண்டும். 'குற்றம் இழைப்பவர்கள் உங்களைப் பார்த்தாலே பயப்பட வேண்டும்; அப்படி நடந்து கொள்ளுங்கள்...' என, போலீசாரின் கோழைத்தனத்தையும் சாடி இருக்கிறது, உச்ச நீதிமன்றம். போலீசார் தீரத்துடன் செயல்பட்டால் தான், குற்றங்கள் குறையும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us