தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : நவ 01, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 01, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வீ.குமாரி, சென்னை: 'உலகில், குழந்தை திருமணத்தால் பாதிக்கப்படும் சிறுமியரில் மூன்றில் ஒருவர், இந்தியாவைச் சேர்ந்தவர்...' என்ற அதிர்ச்சி தகவல், ஐ.நா.,வின் ஆய்வறிக்கையில்வெளியாகியுள்ளதே...

கடும் அதிர்ச்சி தரும் தகவல் இது. குழந்தைகளின் எதிர்காலத்தை நிர்ணயிப்பது கல்வி மட்டும் தான் என்பதை, பெற்றோர் உணர வேண்டும். பெண் குழந்தைகளைப் படிக்க வைத்து, அவர்கள் சொந்தக்காலில் நின்ற பின், திருமணம் செய்து வைப்பது குறித்து, பெற்றோர் கண்டிப்பாக யோசிக்க வேண்டும்!

பெ.பாண்டி, மதுரை: 'த.வெ.க., ஆட்சியில், விலைவாசி கடுமையாக உயர்ந்து விட்டது...' என, தே.மு.தி.க., பிரேமலதா குற்றஞ்சாட்டுகிறாரே...

விஷயமே தெரியாமல் பேசுகிறார், பிரேமலதா. உலகளவில், அசாதாரண பொருளாதார சூழல் நிலவுகிறது. அதனால், ஏற்பட்டுள்ள விலை உயர்வு இது. குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுபவர்களின், 'கேட்டகரி'யில் தான், பிரேமலதாவும் இருக்கிறார்!

எம்.பாஸ்கர், தஞ்சாவூர்: கோஷ்டிகளே இல்லாத காங்கிரஸ் சாத்தியமா?

சூரியனே உதிக்காத உலகம் சாத்தியமா... அதுபோலத் தான் கோஷ்டியே இல்லாத காங்கிரசும், பாஸ்கர்!

* கி.பாலமுருகன், ராமநாதபுரம்: 'சொத்து விற்பனைப் பதிவுக்கு, 50 ஆண்டுகால வில்லங்க சான்றிதழ் சரிபார்ப்பைக் கட்டாயமாக்க வேண்டும்...' என, நில நிர்வாகத் துறை பரிந்துரை செய்துள்ளதே...

நில மோசடிகள், அபகரிப்பு ஆகியவற்றைத் தடுக்கவே இந்த பரிந்துரை என்றாலும், நடைமுறையில் சாத்தியமா என்பதை, அரசு யோசிக்க வேண்டும்!

எஸ்.ரவி, புதுச்சேரி: 'போதைப் பொருட்களை ஒழிப்போம்...' என்று சொல்லும் முதல்வர் விஜயின், த.வெ.க.,விலேயே அதன் பிரமுகர் பூபாலன், போதைக் கடத்தல் புள்ளியாக இருந்து, புலனாய்வுத் துறையால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பது எதைக் காட்டுகிறது?

கட்சியினரின் செயல்பாடுகளை அறிய, 'சிறப்பு புலனாய்வுக் குழு'வை, விஜய் தனியாக அமைக்க வேண்டும் என்பதை காட்டுகிறது!

மூ.வள்ளி, கோவை: 'அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களுக்கு, பெட்டி பெட்டியாக பணம் கொடுத்து, முதல்வர் விஜய், 'ஹோல்சேலில்' வாங்கி இருக்கிறார்...' என்று, 'காமெடி' செய்கிறாரே, தி.மு.க., உதயநிதி...

தன் கட்சி பழக்கத்தை, தெரியாமல் போட்டுடைத்து விட்டார், உதயநிதி!

* எல்.மூர்த்தி, கோவை: கச்சா எண்ணெய்க்காக, வெளிநாடுகளிடம் கையேந்தும் அளவுக்கு, என்ன வளம் இல்லை நம் நாட்டில்?

எந்த வளர்ச்சி திட்டத்தை அறிவித்தாலும், எதிர்க்கும் திராவிடக் கட்சிகள் போல், பல கட்சிகள் இந்தியா முழுவதும் இருப்பதே, நம்மிடம் பல வளங்கள் இருந்தும் வளர்ச்சி குறைவதற்கான காரணம், மூர்த்தி!

ப.சோமசுந்தரம், சென்னை: போக்குவரத்தை சரி செய்யும் பணியில், முதன்முதலாக, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் மனித ரோபோக்களை, கேரள அரசு, கொச்சியில் பயன்படுத்தப் போகிறதாமே...

அந்த ரோபோக்களையும், கைநீட்டப் பழக்கப்படுத்தாமல் இருந்தால் சரி!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us