தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : நவ 29, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 29, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வி.கவுதம் சித்தார்த், விழுப்புரம்: தனது ஓய்வு நாள் பரிசாக, தன் சேமிப்புத் தொகையிலிருந்து, 5 லட்சம் ரூபாயை தானமாக வழங்கி, தான் பணிபுரியும் அரசு உதவி பெறும் தனியார் தொடக்கப் பள்ளியின் மைதானத்தைச் சீரமைத்துக் கொடுத்திருக்கிறாரே, கேரள ஆசிரியை வனஜா...

ஆசிரியை வனஜாவை, மனதார பாராட்டுவோம்! இதைப் படித்ததும், வனஜாவைப் போல, இவ்வளவு பெரிய தொகையை அனைவராலும் கொடுக்க முடியாவிட்டாலும், சிறு தொகையையாவது அவரவர் படித்த, பணிபுரிந்த பள்ளிக்கு நன்கொடையாகக் கொடுக்க வேண்டும் என்ற உத்வேகம், அனைவருக்கும் எழ வேண்டும்!

கி.பாலமுருகன், கரிசல்புலி: முதலீட்டாளர் ஊக்குவிப்பு ஆணையத்தை, தமிழக அரசு அமைத்துள்ளதே...

அதன் மூலம், தமிழகத்திற்கு வர வேண்டிய முதலீடுகள், வேகமாக வரும் என்று நம்புவோம்!

ஏ.ருக்குமணி, கோவை: தி.மு.க.,வின் ஆட்சி நடந்த, ஐந்து ஆண்டுகளுக்கு பின், தமிழக மக்களுக்கு, தமிழக முதல்வரிடம் இருந்து, நேரடியாக தீபாவளி வாழ்த்து கிடைத்திருப்பது பற்றி...

'எம்மதமும் நம் மதம்' என்று செயல்படும், முதல்வர் விஜயை பாராட்டுவோம்!

* கி.முருகன், ராமநாதபுரம்: மனிதர்களால் இயக்கப்பட்ட, முதல் மின்சார விமானத்தைப் பரிசோதனை செய்து, சீனா வெற்றி பெற்றுள்ளதே...

சீனா, எல்லா துறைகளிலும் முன்னோடியாக விளங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன், துடிப்பாகச் செயல்படுகிறது. ஒரு காலத்தில், சீன பொருட்கள் என்றாலே தரமற்றவை என்ற கூற்று, இப்போது மாறி வருகிறது. ஆனால், அந்நாட்டுடன் நட்புடன் பழக முடியாத வகையில், அண்டை நாடுகளிடம் வாலாட்டுவதை கைவிடவில்லை, சீனா!



எம்.பாஸ்கர், தஞ்சாவூர்: 'திரைகளின் வெளிச்சத்தைத் தாண்டி, அறிவின் வெளிச்சத்தில், குழந்தைகளின் உலகம் விரியட்டும்...' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், குழந்தைகள் தின வாழ்த்து சொல்லி இருக்கிறாரே...

இத்தனை ஆண்டுகாலமாக இப்படி ஒரு அறிவுரையைச் சொல்ல விடாமல், எந்த, 'திரை' அவரைத் தடுத்ததோ?

சா.சொக்கலிங்க ஆதித்தன், நெல்லை: 'இந்தியாவில் தற்போது ஜனநாயகம் இல்லை...' என்கிறாரே, ராகுல்...

ஆமாமாம்... உண்மையே இல்லாத விஷயங்களை திரித்துப் பேசி, அதை வைத்து இளைஞர்களைத் துாண்டி, போராட்டம் நடத்தி, அது வன்முறையாக மாறும்போது, வியட்நாம் நாட்டுக்குச் சென்று பதுங்குவது தான் ஜனநாயகம் என, அவருக்கு யாரோ சொல்லிக் கொடுத்தால், இவர் என்ன செய்வார் பாவம்! இந்தியாவில் இருக்கப் பிடிக்கவில்லை எனில், இத்தாலியில் இவர் குடியேறி விடலாமே!

* எம்.ஜெயலட்சுமி, புதுச்சேரி: போட்டித் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க, முன்னாள் ராணுவ வீரர்களை, தேர்வு பார்வையாளர்களாக நியமிக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாமே...

தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளும் முடிவுக்கு வரும்; ராணுவ வீரர்களுக்கு பெரிய அங்கீகாரமும் கிடைக்கும். இந்த நடவடிக்கை விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்ப்போம்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us