PUBLISHED ON : ஜூன் 21, 2026

அ நிறம் | அளவு
நம் அண்டை நாடுகளான திபெத் மற்றும் பர்மா மக்களின் கலப்பு வம்சத்தினர் தான் நாகாலாந்து மாநில மக்கள். மலைவாசிகளான இவர்கள் எப்போதும் அடர்த்தியான நிறங்களில் உள்ள ஆடைகளை அணிந்து, பார்ப்பவரை வியக்க வைப்பர்.
இவர்கள், வீடுகளிலேயே மதுவை தயாரிக்கின்றனர். வீடுகளில் ஏதேனும் விசேஷம் நடைபெற்றால், அரிசி, கோதுமை போன்ற தானியங்களில் இருந்து மதுவை தயாரித்து வழங்குவர். விருந்தினர்களுக்கு இந்த மதுவை, அலங்காரமான மூங்கில் குழாய்களில் அடைத்து, பரிமாறுவர். தரமாக மது தயாரிக்கும் பெண்களை, விழாவில் பாராட்டுவதும் வழக்கம்.
- ஜோல்னாபையன்
