PUBLISHED ON : செப் 20, 2026

அ நிறம் | அளவு
கேரள மாநிலம் கொச்சியில், 'தே புட்டு' என்று ஒரு உணவு விடு தி இருக்கிறது. மலையாள நடிகர், திலீப்பும் அவரது நண்பர் நாதிர்ஷாவும் இந்த உணவு விடுதியை நடத்தி வருகின்றனர். இங்கு, அறுபதுக்கும் மேற்பட்ட புட்டு வகைகள் கிடைக்கின்றன. மேலும், சைவ வகை புட்டுகளுடன், அசைவம் சேர்க்கப்பட்ட புட்டுகளும் கிடைக்கின்றன. விதவிதமான புட்டுகளை தயாரித்து வழங்குவதால், வாடிக்கையாளர்களும் பெருகினர். படத்தில் காண்பது, கேரட் மற்றும் பீட்ரூட் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட வண்ணமயமான புட்டு.
- ஜோல்னாபையன்
