sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இதப்படிங்க முதல்ல....

/

இதப்படிங்க முதல்ல....

இதப்படிங்க முதல்ல....

இதப்படிங்க முதல்ல....


PUBLISHED ON : அக் 19, 2025

Google News

PUBLISHED ON : அக் 19, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'ஹீரோ'களை புலம்ப விடும், சாய்பல்லவி!

குடும்பப்பாங்கான நடிகையாக வலம் வரும், சாய்பல்லவியிடம், 'படத்தில் குளியல் சீன் உள்ளது...' என்று இயக்குனர்கள் சொன்னால், 'நீச்சல் உடை அணிந்து நடிக்க மாட்டேன். முழு உடம்பையும் கவர் பண்ணிதான் நடிப்பேன்...' என்று, 'கண்டிஷன்' போடுகிறார். அதோடு, 'முத்தக் காட்சியிலும், 'நோ டச்சிங்!' முத்தம் கொடுப்பது போல், 'ஆக்ட்' மட்டுமே செய்வேன்...' என்றும் கண்டிஷன் போடுகிறார், சாய்பல்லவி.

- எலீசா

இளையராஜா குடும் பத்தின், அடுத்த வாரிசு!

இசையமைப்பாளர் இளையராஜாவை தொடர்ந்து, அவரது மகன்களான கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, மகள் பவதாரணி ஆகியோரும், இசை துறைக்கு வந்தனர். தற்போது, கார்த்திக் ராஜாவின் மகனும், இளையராஜாவின் பேரனுமான, யத்தீஸ்வர் ராஜாவும், 'போற போக்குல' என்ற பெயரில் ஒரு ஆல்பத்துக்கு இசையமைத்து பின்னணி பாடியுள்ளார். இந்த ஆல்பத்தை ரஜினி, கமல் வெளியிட்டுள்ளனர். இதை அடுத்து திரைப்படங்களுக்கு இசையமைக்கவும் தயாராகி வருகிறார், யத்தீஸ்வர் ராஜா.

- சினிமா பொன்னையா

இறங்கி அடிக்கும், அனுபமா பரமேஸ்வரன்!

டிராகன் படத்தில், அனுபமா பரமேஸ்வரன் முக்கிய வேடத்தில் நடித்திருந்த போதும், அப்படத்தில் நடித்த, நடிகை கயாடு லோகருக்கே பெயர் கிடைத்தது. இதனால், கடும் அப்செட் ஆன அனுபமா, தற்போது, பைசன் படத்தை மிகவும் எதிர்பார்க்கிறார். அதோடு, இந்தப் படத்தின் வெற்றி, தோல்விக்கு பிறகு தான் புதிய படங்களை கைப்பற்ற வேண்டும் என்று நினைக்காமல், இப்போதிலிருந்தே புதிய படங்களுக்கு கல்லெறிந்து வருகிறார் அனுபமா. இதுவரை, கோடு போட்டு நடித்து வந்தவர், சமீபத்தில், கிளாமர் ஆல்பம் ஒன்றை வெளியிட்டு, இனிமேல் நான் பக்கா, கமர்ஷியல் நடிகை ஆகப்போகிறேன்... என்றும் அறிவித்துள்ளார்.

- எலீசா

ரத்தக்களறியுடன், ரஜினிகாந்த்!

ஏற்கனவே, ஜெயிலர் படத்தில் ரத்தக்களரியான வேடத்தில் நடித்திருந்த, ரஜினிகாந்த், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் அதே ரத்தக்களரியான, 'கெட்-அப்'பில்தான் படப்பிடிப்பு தளங்களில் காணப்படுகிறார். இந்த படத்திற்கும், கூலி படத்தை போன்று, 'ஏ' சான்றிதழ் கொடுத்து விடுவரே என்றால், 'சான்றிதழுக்காக கதையில், 'காம்ப்ரமைஸ்' செய்தால் படம் தோல்வி அடைந்து விடும். அதனால், சான்றிதழா, 'ஹிட்'டா? என்றால், 'ஹிட்' தான் எனக்கு முக்கியம்...' என்கிறார், ரஜினி.

- சினிமா பொன்னையா

கருப்பு பூனை!

'மாடு இளைச்சாலும் கொம்பு இளைக்காது' என்று சொல்வது போல், தான் நடித்த படங்கள் தோல்வியடைந்த போதும், 'என்னை மையமாகக் கொண்ட கதைகளில் மட்டுமே நடிப்பேன்...' என்று அடம் பிடித்துக் கொண்டிருக்கிறார், புயல் காமெடியன். சில, 'மாஜி ஹீரோ'க்கள் நடிப்பது போன்று, 'கேரக்டர் ரோல்'களில் நடிக்க சொன்னால் தடாலடியாக மறுத்து விடும், புயல் காமெடியன், 'பட வாய்ப்பு இல்லை என்பதற்காக, துக்கடா வேடங்களில் ஒரு போதும் நடிக்க மாட்டேன். அப்படி ஒரு எண்ணத்தோடு என்னை தேடி யாரும் வராதீர்கள்...' என்று இயக்குனர்களை துரத்தி அடித்து வருகிறார்.

சமகாலத்து நடிகையர் பலரும் சினிமாவில் நடித்து வந்த போதும், தன்னால் மட்டும் தொடர்ந்து படங்களில் நடிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் இருக்கிறார், மூன்று எழுத்து பூ நடிகை. தன் கணவர், தற்போது இயக்கி வரும் படத்தில் ஒரு அம்மன் பாடலுக்கு நடனமாடியுள்ள, பூ நடிகை, சமீபத்தில் தன் கிரக தோஷங்களை கழிப்பதற்காக தன் வீட்டில் ஒரு நள்ளிரவு பூஜை நடத்தி உள்ளார். இந்த பூஜையில் சில மலையாள மாந்திரீகர்களும் பங்கேற்று உள்ளனர்.

சினிதுளிகள்!

* மாமன்னன் படத்திற்கு பிறகு, அதே பாணியில் வந்த வேடங்களை தவிர்த்து வந்த வடிவேலு, தற்போது எதிர்பார்த்தபடி மாறுபட்ட வேடங்கள் கிடைக்காததால் மீண்டும் அதுபோன்ற வேடங்களில் நடிக்க தான் தயாராக இருப்பதாக கூறி வருகிறார்.

* தான் தயாரிக்கும் படங்களில், தானும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு எடுத்திருக்கிறார், குஷ்பூ.

அவ்ளோதான்






      Dinamalar
      Follow us