
ரஜினி பாணிக்கு மாறும், சிரஞ்சீவி!
சமீபகாலமாக, தான் நடிக்கும் படங்களில், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னட பட நடிகர்களை இணைத்து, பல மொழி படமாக கொடுத்து வருகிறார், ரஜினி. இந்நிலையில் தற்போது, தெலுங்கு நடிகர், சிரஞ்சீவியும் தான் நடிக்கப் போகும் புதிய படத்திலிருந்து, ரஜினி பாணிக்கு மாறியுள்ளார். அதன்படி, தமிழ் நடிகர், கார்த்தியை அப்படத்தில் நடிக்க இணைத்திருக்கிறார். அடுத்தபடியாக, கன்னடம் மற்றும் ஹிந்தி நடிகர்களையும் அவருடன் இணைந்து நடிக்க பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
-சினிமா பொன்னையா
'சீனியர் ஹீரோ'களுடன் அடுத்த ரவுண்டை ஆரம்பித்த, நயன்தாரா!
தமிழில், மூக்குத்தி அம்மன்- 2 படத்தில் நடித்து வரும், நயன்தாரா, 'சீனியர் ஹீரோ'களின், 'பேவரிட்' நாயகியாகவும் மாறி உள்ளார். குறிப்பாக, தெலுங்கில், சிரஞ்சீவிக்கு ஜோடியாக, மூன்றாவது முறையாக நடித்து வரும், நயன்தாரா, அடுத்து, பாலகிருஷ்ணாவுடன் ஏற்கனவே, மூன்று படங்களில் நடித்தவர் இப்போது, நான்காவதாக இன்னொரு படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளார். அந்த வகையில், கதையின் நாயகியாக நடித்துக் கொண்டே இன்னொரு பக்கம், 'சீனியர் ஹீரோ'களுடன் அடுத்த ரவுண்டை துவங்கி இருக்கிறார், நயன்தாரா.
-எலீசா
மீண்டும் தமிழுக்கு வரும், வித்யா பாலன்!
ஆ ரம்ப காலத்தில், தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல், ஹிந்திக்கு சென்று பிரபலமானவர் நடிகை, வித்யா பாலன். நீண்ட இடைவெளிக்கு பிறகு, தமிழில், அஜித்துடன், நேர்கொண்ட பார்வை படத்தில், கவுரவ கதாபாத்திரத்தில் நடித்தவர், தற்போது, ரஜினி நடித்து வரும், ஜெயிலர்- 2 படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கப் போகிறார்.
எதிர்காலத்தில் பல மொழி படங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்போவதாக சொல்லி, இயக்குனர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார், வித்யா பாலன்.
-- எலீசா
சிவகார்த்திகேயனுக்கு, 'டப்' கொடுத்த, ஸ்ரீ லீலா!
தெலுங்கு சினிமாவிலிருந்து தமிழுக்கு வந்திருக்கும் நடிகை, ஸ்ரீ லீலா, தற்போது, சிவகார்த்திகேயனுடன், பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். அதோடு, நடனத்தில் படு சூறாவளியாக இருக்கும், ஸ்ரீ லீலா, இப்படத்தின் பாடல் காட்சியில் அதிரடி ஆட்டம் போட்டு, சிவகார்த்திகேயனுக்கு, 'ஷாக்' கொடுத்துள்ளார். இதனால், அரண்டு போன, சிவகார்த்திகேயன் அவரது வேகத்துக்கு தன்னால் ஈடு கொடுக்க முடியவில்லை என்று தனக்கேற்ப, அசைவுகளை மாற்றுமாறு, டான்ஸ் மாஸ்டரை கேட்டுக் கொண்டுள்ளார். அந்த அளவுக்கு அதிரடி ஆட்டமாடி, தெலுங்கு, 'ஹீரோ'களை தொடர்ந்து, தமிழ், 'ஹீரோ'களையும் ஆட்டம் காண வைத்து வருகிறார், ஸ்ரீ லீலா.
-சினிமா பொன்னையா
கருப்புப் பூனை!
சீயான் நடிகரின் வாரிசுக்கு சமீபத்தில் திரைக்கு வந்த மூன்றெழுத்த படம், 'ஹிட்' அடித்ததை அடுத்து, புதிய படங்கள் அவரை நோக்கி படையெடுக்க துவங்கி உள்ளன. இதன் காரணமாக, அந்த படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்த மலையாள நடிகை, மேற்படி நடிகரை வளைத்துப் போட்டுக் கொண்டார். அவரை வைத்து கோலிவுட்டில் மார்க்கெட்டை பிடித்து விடலாம் என்று அடிக்கடி வாரிசு நடிகருடன், ஸ்டார் ஹோட்டலில், 'மீட்டிங்' போட்டு வந்தார்.
இந்த தகவல், சீயான் நடிகரின் காதுகளை எட்டியதை அடுத்து, மேற்படி நடிகைக்கு போன் செய்து, 'இனிமேலும் என் மகனை சந்திக்கும் தகவல் அறிந்தால், கோலிவுட் பக்கமே தலை காட்ட முடியாத அளவுக்கு வேலையை காட்டி விடுவேன்...' என்று, கடும் மிரட்டல் விடுத்துள்ளார். இதன் காரணமாக ஸ்டார் ஹோட்டலை காலி பண்ணி விட்டு சொல்லாமல் கொள்ளாமல் கேரளத்துக்கு ஓட்டம் பிடித்து விட்டார், மேற்படி நடிகை.
முன்பெல்லாம் படக்கூலி விவகாரத்தில் அதிக கெடுபிடி செய்ய மாட்டார், தல நடிகர். ஆனால், இப்போது, தளபதி நடிகர் அரசியல் ஏரியாவுக்குள் சென்று விட்டதால், தன் படங்களுக்கான வரவேற்பு அதிகமாக இருக்கும் என்று கருதுகிறார். அதன் காரணமாகவே, 100 முதல் 150 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசி வந்த, தல நடிகர் தற்போது, 200 கோடி ரூபாயாக உயர்த்தி விட்டார். அதுவும், 'சிங்கிள் பேமென்டாக' வெட்டி விட வேண்டும் என்றும், கறார் காட்டுகிறார்.இதனால், இதுவரை இல்லாத அளவுக்கு, தல நடிகர் மீது தயாரிப்பாளர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு இருக்கிறது.
சினி துளிகள்!
* 'ஒரு நாளைக்கு, எட்டு மணி நேரம் மட்டுமே படங்களில் நடிப்பேன். அதிகப்படியான நேரம் நடித்து உடல் நலத்தை கெடுத்துக்கொள்ள மாட்டேன்...' என்கிறார் நடிகை, ராஷ்மிகா மந்தனா.
* ஜெயிலர்- 2 படத்தை அடுத்து, இயக்குனர், சுந்தர்.சி படத்தில் நடிக்க போகிறார், ரஜினி. இந்த படத்தை நடிகர், கமலஹாசன் தயாரிக்கிறார்.
* துருவ் விக்ரமுக்கு ஜோடியாக, பைசன் படத்தில் நடித்த, அனுபமா பரமேஸ்வரன், அதையடுத்து, லாக் டவுன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
* அஜித்தின், 64வது படத்தை, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் நிலையில், 65வது படத்தை, இயக்குனர், மனு ஆனந்த் இயக்குகிறார்.
அவ்ளோதான்!

