sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இதப்படிங்க முதல்ல...

/

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : நவ 16, 2025

Google News

PUBLISHED ON : நவ 16, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்ரமை கைவிட்ட, இயக்குனர்கள்!

த ங்கலான் மற்றும் வீர தீர சூரன் படங்களின் தோல்விக்கு பின், இயக்குனர்கள் பிரேம்குமார் மற்றும் மடோன் அஸ்வின் ஆகியோர் இயக்கத்தில் நடிக்க இருந்தார், விக்ரம். ஆனால், அவரது முந்தைய படங்களின் தோல்வியை கருத்தில் கொண்டு கடைசி நேரத்தில் அவர்கள் இருவருமே பின்வாங்கி விட்டனர். இதனால், தன், 63வது படத்தை இயக்க எந்த முன்னணி இயக்குனர்களும் தயாராக இல்லை என்பதால், தற்போது, குறும்பட இயக்குனர் ஒருவரின் இயக்கத்தில் நடிப்பதற்கு தயாராகி கொண்டிருக்கிறார், விக்ரம்.

- சினிமா பொன்னையா

புதுமுக நடிகருக்கு ஜோடியாகும், ருக்மணி வசந்த்!

ஏ ஸ் மற்றும் மதராஸி படங்களில் நடித்த கன்னட நடிகை, ருக்மணி வசந்த், அடுத்தபடியாக, இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில், இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன், ஹர்ஷவர்தன், 'ஹீரோ'வாக அறிமுகமாகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவரிடம், ' புதுமுக நடிகருடன் நடிக்கிறீர்களே...' என்று கேட்டால், 'இந்த படத்தில் வழக்கமான படங்களில் இருந்து மாறுபட்ட கதாபாத்திரம் எனக்கு கிடைத்திருக்கிறது. அந்தக் கதாபாத்திரம் என்னை ரொம்பவே, 'இம்ப்ரஸ்' பண்ணியதால் தான், 'ஹீரோ'வை பற்றி கவலைப்படாமல் ஏற்றுக் கொண்டேன்...' என்கிறார், ருக்மணி வசந்த்.

- எலீசா

ஹன்சிகா செய்த பூஜை!

மு ம்பை நடிகையான, ஹன்சிகா மோத்வானி, தன் தோழியின் கணவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், இப்போது அவர்களுக்கிடையே புயல் வீசிக்கொண்டு இருப்பதால், விரைவில் அவரை விவாகரத்து செய்வதற்கு திட்டமிட்டு வருகிறார். அதோடு, தனக்கு ஜாதகத்தில் பல தோஷங்கள் இருப்பதாக ஜோதிடர் சொன்னதை அடுத்து, சமீபத்தில் சில மாந்திரீகர்களை தன் மும்பை வீட்டுக்கு அழைத்து, கிரக தோஷ நிவர்த்தி பூஜை நடத்தி இருக்கிறார், ஹன்சிகா. இதற்காக அவர், 48 நாட்கள் விரதமும் இருந்துள்ளார்.

- எலீசா

'ட்ராக்' மாறுகிறாரா, சந்தானம்?

'ந ம்பர் ஒன்' காமெடியனாக இருந்த, சந்தானம், ஒரு கட்டத்தில், 'ஹீரோ'வாகி விட்டார். ஆனால், தான் நடிக்கும் படங்கள் வெற்றி பெறாத போதும், தொடர்ந்து அதே, 'ரூட்'டில் பயணித்து வந்தார். இந்நிலையில், சிம்பு நடிக்கும் ஒரு புதிய படத்தில் காமெடியனாக நடிக்க சம்மதம் தெரிவித்திருகிறார், சந்தானம், அதையடுத்து தற்போது, ரஜினி நடித்து வரும், ஜெயிலர்- 2 படத்திலும் காமெடி வேடத்தில் நடிக்க போகிறார். திடீரென்று, 'டிராக்'கை மாற்றியதை அடுத்து, அவரது ஆஸ்தான இயக்குனர்கள் சிலரும் தாங்கள் இயக்கும் படங்களில், காமெடியனாக நடிப்பதற்கு, சந்தானத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

- சினிமா பொன்னையா

கருப்புப் பூனை!

சார்பட்டா நடிகரின் மார்க்கெட் குடை சாய்ந்து கிடப்பதால், முன்னாள் நடிகையான அவரது மனைவி கணவருக்காக களமிறங்கி, படவேட்டை நடத்துவதாக சொல்லி, கோலிவுட்டுக்கு, 'விசிட்' அடிப்பவர், சில நாட்களில் தன் முன்னாள் பாய் பிரண்டுகளுடன் நள்ளிரவு, 'பார்ட்டி'களில் ஐக்கியமாகி விடுகிறார். ஆனாலும், இதுவரை நடிகருக்கு ஒரு படவாய்ப்பும் வந்தபாடில்லை. ஆனால், இதை பயன்படுத்தி வெளியில் செல்லும் தன் மனைவி, பாய் பிரண்டுகளுடன் கூத்தடிப்பதை மோப்பம் பிடித்த சார்பட்டா நடிகர், தற்போது சினிமா வட்டாரத்துக்குள் செல்வதற்கே அம்மணிக்கு, 'தடா' போட்டுள்ளார்.

*****

'நான் அடுத்த தளபதியாக முயற்சிக்கவில்லை...' என்று, அமரன் நடிகர் வாய் பேச்சுக்காக சொன்னபோதும், மனதளவில், 'நான்தான் அடுத்த தளபதி...' என்ற நினைப்பில் தான் சுற்றிக் கொண்டிருக்கிறார் என்று அவரிடம் கதை சொன்ன சில இயக்குனர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, உச்ச நடிகர், தளபதி நடிகரின் முந்தைய படங்களில் இடம்பெற்ற, மாஸான சீன்களை போல், மீண்டும் அதைவிட மாஸான காட்சிகளாக உருவாக்கி, அதில் தன்னை நடிக்க வைக்க வேண்டும் என்று கறாராக சொல்கிறார்.

இதனால், நாங்கள் கதைகளை புதிதாக யோசித்தாலும், அதில் முந்தைய படங்களிலிருந்து முக்கிய சீன்களை சுட்டு, இவர் படங்களுக்கு வைக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும் புலம்பித் தள்ளுகின்றனர் அந்த இயக்குனர்கள்.



சினி துளிகள்!


* இயக்குனர், பா.ரஞ்சித் இயக்கும், வேட்டுவம் படத்தில், வில்லனாக நடித்து வருகிறார், ஆர்யா.

* பராசக்தி படத்தை அடுத்து, இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கும் படத்தில், நடித்து வருகிறார், சிவகார்த்திகேயன். அதையடுத்து, இயக்குனர், வெங்கட் பிரபு படத்தில் நடிக்க போகிறார்.

* நீண்ட காலமாகவே தமிழ் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதை தவிர்த்து வரும் நடிகர், அஜித்குமார், சமீபத்தில் ஒரு ஆங்கில மாத இதழுக்கு பேட்டி கொடுத்து, அட்டை படத்திற்கும், 'போஸ்' கொடுத்துள்ளார்.

* ஏற்கனவே, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, ஹீரோ என்ற படத்தில் நடித்த மலையாள நடிகை, கல்யாணி பிரியதர்ஷன், தற்போது, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திலும் அவருடன் ஜோடியாக நடிக்கிறார்.

அவ்ளோதான்!






      Dinamalar
      Follow us