sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இதப்படிங்க முதல்ல...

/

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : டிச 28, 2025

Google News

PUBLISHED ON : டிச 28, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரஜினி படத்திலிருந்து விலகிய, சந்தானம்!

ச மீப காலமாக, 'ஹீரோ'வாக மட்டுமே நடித்து வரும் நடிகர், சந்தானத்தை, ரஜினியின், ஜெயிலர் -2 படத்தில் காமெடியனாக நடிக்க அழைத்தபோது, முதலில், ரஜினிக்காக இந்த படத்தில் நடிக்க சம்மதித்தார். ஆனால், இந்த செய்தி வெளியானதை அடுத்து, அவரது நட்பு வட்டார, 'ஹீரோ'கள் சிலரும் தங்கள் படங்களிலும் காமெடி ரோலில் நடிக்க சந்தானத்துக்கு, நெருக்கடி கொடுத்தனர். இதனால், ரஜினிக்காக தன் கொள்கையை தளர்த்திக் கொண்டால், மீண்டும் தன்னை முழு நேர காமெடியன் ஆக்கி விடுவர் என்று கடைசி நேரத்தில், ஜெயிலர் -2 படத்திலிருந்தும் விலகி விட்டார், சந்தானம்.

சினிமா பொன்னையா

சர்ச்சையில் சிக்கிய, தமன்னா!

மீ ண்டும் தமிழில், 'ரீ-என்ட்ரி' கொடுத்திருக்கும் நடிகை, தமன்னா, உடல் மெலிந்து இருப்பதை பார்த்து, அவர் வெளிநாட்டு சரக்கு அடித்து உடல் இளைத்து விட்டதாக சிலர் கூறி வந்தனர். தற்போது, ஏதோ ஊசி மருந்தை உடலுக்குள் செலுத்தி, அவர் உடல் இளைத்து விட்டதாக இன்னொரு செய்தியும் சினிமா வட்டாரங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.

இதை தடாலடியாக மறுக்கும், தமன்னா, 'என் உடம்பை குறைக்க செயற்கைத்தனமாக எந்த முயற்சியிலும் நான் ஈடுபடவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை எல்லாருக்குமே உடல்வாகு மாறும். அந்த மாற்றம் தான் எனக்கு ஏற்பட்டுள்ளது...' என்று சொல்லி, சரக்கு ஊசி விவகாரத்துக்கு மறுப்பு கூறி, சமாளித்து வருகிறார்.

— எலீசா

'பிளாஸ்டிக் சர்ஜரி' செய்த, நயன்தாரா!

த ற்போது, 41 வயதான நடிகை, நயன்தாரா, தொடர்ந்து கதையின் நாயகி மற்றும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில், சில இயக்குனர்கள் அவரது முகத்தில் முதிர்ச்சி தென்படுவதாக கூறியதை அடுத்து, சமீபத்தில், அமெரிக்க நாட்டிற்கு சென்று முகத்தில், 'பிளாஸ்டிக் சர்ஜரி' செய்து, திரும்பியுள்ளார். இதன் மூலம், அவரது முகம், இப்போது எப்படி இருக்கிறதோ அப்படியே, 50 வயதானாலும் இருக்குமாம். இதற்காக பல கோடிகளை செலவு செய்துள்ளார், நயன்தாரா.

— எலீசா

ரத்தக் களறியான வேடத்தில் நடிக்கும், சிம்பு!

ந டிகர், சிம்பு நடிக்கும், அரசன் படம், வட சென்னை ரவுடிகளுக்கிடையே நடக்கும் வெட்டு, குத்து சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதை என்பதால், படம் முழுக்க வன்முறை காட்சிகள் தான் இடம்பெறுகிறதாம். ஆனால், தன், 'ரொமான்ஸ்' நடிப்புக்கென்றே ஒரு ரசிகர் வட்டம் இருப்பதால், இந்த, 'ஆக்ஷன்' கதைக்குள்ளும் ஒரு, 'லவ் டிராக்'கை வைக்குமாறு இயக்குனரை கேட்டுக் கொண்டார், சிம்பு. 'அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. 'ஆக்ஷன்' கதைக்குள், 'லவ் ட்ராக்'கை வைத்தால், கதையின் வேகம் குறைந்து விடும்...' என்று சொல்லி, சிம்புவின் கோரிக்கையை நிராகரித்து விட்டார், இப்படத்தின் இயக்குனர், வெற்றிமாறன்.

சினிமா பொன்னையா

கருப்புப் பூனை!

பைசன் பட நடிகை, கதையின் நாயகியாக நடித்து வெளியான படம் எதிர்பார்த்தபடி, வியாபாரம் ஆகவில்லை. இதனால், அவரது படக்கூலியை பாதியாக குறைத்து விட்டனர். இதன் காரணமாக செம கடுப்பில் இருக்கும், அம்மணி, 'பெரிய கம்பெனி என்பதால் கேட்டபோதெல்லாம், 'கால்ஷீட்' கொடுத்து நடித்தேன். இப்போது அவர்கள் புத்தியை காட்டி விட்டனர்...' என்று தான் சந்திக்கும் நபர்களிடமெல்லாம், அந்த இரண்டெழுத்து பட நிறுவனத்தை கடுமையான வார்த்தைகளால் வசை பாடி வருகிறார். அதோடு, 'இனிமேல் எந்த ஒரு படமாக இருந்தாலும், 'கிளைமேக்ஸ்' காட்சியில் நடிப்பதற்கு முன்பே, மொத்த பணத்தையும் வெட்டினால் தான் படப்பிடிப்பு தளத்துக்கே வருவேன்...' என்று, 'கண்டிஷன்' போட்டு வருகிறார், நடிகை.

சினி துளிகள்!

* ஏற்கனவே தெலுங்கில், உப்பென்னா என்ற படத்தில் வில்லனாக நடித்த, நடிகர், விஜய் சேதுபதி தற்போது தெலுங்கு நடிகர், விஜய் தேவரகொண்டா நடிக்கும் ஒரு படத்திலும் வில்லனாக நடிக்க இருக்கிறார்.

* லாக் டவுன் படத்திற்கு பிறகு, ஆர்யாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கப் போகிறார் நடிகை, அனுபமா பரமேஸ்வரன்.

* ரவி மோகன் நடித்து வரும், கராத்தே பாபு என்ற படம் அதிரடியான, அரசியல் சார்ந்த கதையில் தயாராகி வருகிறது.

அவ்ளோதான்!






      Dinamalar
      Follow us