sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இதப்படிங்க முதல்ல...

/

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : பிப் 01, 2026

Google News

PUBLISHED ON : பிப் 01, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பதட்டத்தில் நடிகர், எஸ்.ஜே.சூர்யா!

நடிகர், விஜய் நடித்த, ஜனநாயகன் மற்றும் நடிகர், சிவகார்த்திகேயன் நடித்த, பராசக்தி போன்ற தமிழ் படங்கள் 'சென்சார் போர்டின்' கெடுபிடியில் சிக்கியதால் தற்போது, கில்லர் என்ற தமிழ் படத்தை இயக்கி, நடித்து வரும் நடிகர், எஸ்.ஜே.சூர்யா கடும், 'அப்செட்'டில் இருக்கிறார். காரணம், 10 ஆண்டுகளுக்கு பின் அவர் இயக்கும் படம் என்பதால் இதில் யாருமே யோசித்தே பார்க்காத காட்சிகளை வைத்துள்ளார்.

இந்த நேரத்தில் 'சென்சார் போர்ட்' அதிகப்படியான கெடுபிடி காட்டத் துவங்கி இருப்பதால், தான், 'ரிஸ்க்' எடுத்து நடித்துள்ள காட்சிகளை கத்தரி போட்டு விடுவாரோ என்ற பதட்டம் தற்போதே அவருக்கு ஏற்பட்டுள்ளது.

சினிமா பொன்னையா.

கவர்ச்சிக்கு மாறிய, கீர்த்தி சுரேஷ்!

திருமணத்திற்கு பிறகு, தெலுங்கு நடிகர், விஜய தேவரகொண்டாவுக்கு ஜோடியாக, ரவுடி ஜனார்த்தனா என்ற தெலுங்கு படத்தில் நடிக்கும் நடிகை, கீர்த்தி சுரேஷ், இந்த படத்திற்காக உடல் எடையை குறைத்து, கவர்ச்சிகரமான, 'கெட்-அப்'புக்கு மாறியுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என, ஐந்து மொழிகளில் வெளியாவதால், அனைத்து மொழி ரசிகர்களையும் கிளுகிளுப்பேற்றும், 'சீன்'களில் நடிப்பதாக கூறும் கீர்த்தி சுரேஷ், 'இந்த படம் என்னை, 'அல்ட்ரா மா டர்ன்' நடிகையாக வெளிப்படுத்தும்...' என்கிறார்.



— எலீசா


அமானுஷ்யத்துக்கு மாறிய, ரக்ஷிதா மகாலட்சுமி!

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்த நடிகை, ரக்ஷிதா மகாலட்சுமி, பையர் மற்றும் எக்ஸ்ட்ரீம் போன்ற தமிழ் படங்களில் எல்லை மீறிய கவர்ச்சியை வாரி இறைத்தார். இதனால், சின்னத்திரையின் குடும்ப நடிகை, சினிமாவுக்கு போனதும் இப்படி கவர்ச்சி நடிகையாகி விட்டாரே என்ற தாறுமாறான விமர்சனங்களை சந்தித்தார், ரக்ஷிதா. இந்த இமேஜை மாற்ற வேண்டும் என்பதற்காக, 'யு-டர்ன்' போட்டிருப்பவர், அதுபோன்ற படங்களை தவிர்த்து, தற்போது மிரட்டலான, அமானுஷ்ய படங்கள் பக்கம் திரும்பி இருக்கிறார்.

எலீசா

சிரஞ்சீவிக்கு, இளையராஜா கொடுத்த அனுமதி!

தன் இசையில் உருவான படங்களின் பாடல்களை, புதிய படங்களில் மற்றவர்கள் பயன்படுத்துவதற்கு, காப்புரிமை கேட்டு வருகிறார் இசையமைப்பாளர், இளையராஜா. இந்நேரத்தில் சமீபத்தில், தெலுங்கு நடிகர், சிரஞ்சீவி நடித்து திரைக்கு வந்துள்ள, மன சங்கர வர பிரசாத் காரு என்ற தெலுங்கு படத்தில், ரஜினி நடித்த, தளபதி படத்தில், இளையராஜா இசையில் உருவான, 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி...' என்ற தமிழ் பாடலை பயன்படுத்தி உள்ளனர். ஆனால் இதற்கு, இளையராஜா காப்புரிமை கேட்கவில்லை. காரணம், நடிகர், சிரஞ்சீவி அவரை தொடர்பு கொண்டு நேரடியாகவே அனுமதி கேட்டுள்ளார். அதன் காரணமாகவே அந்த பாடலை பயன்படுத்திக் கொள்வதற்கு அவருக்கு அனுமதி கொடுத்திருக்கிறார், இளையராஜா.

சினிமா பொன்னையா.

கருப்புப் பூனை!

சினிமாவை பொறுத்தவரை ஒரு படத்தில் ஒப்பந்தம் செய்து, 'அட்வான்ஸ்' கொடுத்தால் அதன் பிறகு அந்த படம் நிறுத்தப்பட்டாலும் கொடுத்த, 'அட்வான்ஸை' திரும்ப வாங்கும் பழக்கமில்லை. ஆனால், ரன் நடிகரை, இரண்டு படங்களில் ஒப்பந்தம் செய்துவிட்டு அந்த படங்களை கிடப்பில் போட்டவர்கள் இப்போது கொடுத்த, 'அட்வான்ஸை' கேட்டு நச்சரிக்கின்றனர். இதனால், கடுப்பான நடிகர், 'உங்களுக்கு நான் கொடுத்த, 'கால்ஷீட்' தேதியை வீணடித்து விட்டு, 'அட்வான்ஸை' திருப்பிக் கேட்பதா?' என்று கேட்டு, இனிமேல் தமிழ் சினிமாவே வேண்டாம் என்று பாலிவுட்டுக்கு சென்று விட்டார், ரன் நடிகர்.



சினி துளிகள்!


* மலையாளத்தில், சுந்தரி யாயவள் ஸ்டெல்லா என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ள நடிகை, ஊர்வசியின் மகள், தேஜா லட்சுமி, தற்போது, பாப்லோ பார்ட்டி என்ற படத்தில், ஊர்வசியுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த படம் தமிழ்-, மலையாளம் என, இரு மொழிகளில் தயாராகிறது.

* ஹிந்தியில் நடித்த, துரந்தர் படத்தின் வெற்றிக்கு பிறகு, பாலிவுட்டில் நடிகர், மாதவனின், 'மார்க்கெட்' சூடு பிடிக்க துவங்கி உள்ளது.

* நடிகர், தனுஷ் நடித்துள்ள 54வது படத்திற்கு, கர என்று, 'டைட்டில்' வைத்துள்ளனர். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை, மமிதா பைஜூ நடித்துள்ளார். இப்படத்தை, இயக்குனர், விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார்.

அவ்ளோதான்!






      Dinamalar
      Follow us