
காதலுக்கு, புதிய தத்துவம் சொல்லப்போகும், சிம்பு!
கடந்த காலங்களில், பல காதல் கதைகளில் நடித்துள்ள, சிம்பு, தற்போது நடிக்க போகும், காட் ஆப் லவ் என்ற தமிழ் படத்தில், காதல் என்றால் என்ன, அது ஏன், எதற்காக, எப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் வருகிறது, என்று இன்றைய இளசுகளுக்கு ஒரு புதிய தத்துவத்தை சொல்லக்கூடிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அதற்காக இந்த படத்தில், ருக்மணி வசந்த், மீனாட்சி சவுத்ரி, மிருணாள் தாக்கூர் என்ற, மூன்று நடிகையரை காதல் செய்து, புதிய காதல் பாடம் நடத்த போகிறார், சிம்பு.
— சினிமா பொன்னையா
'ரெட் சிக்னல்' போட்ட, பிரியங்கா மோகன்!
தென்மாநில மொழி படங்களில் பரவலாக நடித்துவரும், பிரியங்கா மோகன், 'கமர்ஷியல்' படங்களில் அசைவ காட்சிகளில் நடிக்குமாறு இயக்குனர் வலியுறுத்தினால், அப்படி நடிக்க மறுக்கிறார். அதோடு, 'அப்படி நடிக்கும் அளவுக்கு என்னிடம் உடற்கட்டு இல்லை. அதனால், என்னை தோலுரிப்பதை விட்டு விட்டு, என்னுடைய முக பாவனைகளில் வெளிப்படும், அசைவ நடிப்பை எடுத்துக் கொள்ளுங்கள்...' என்று, தன் நிலைப்பாட்டை கூறுகிறார், பிரியங்கா மோகன்.
— எலீசா
பூஜா ஹெக்டே கேட்ட அதிரடி கேள்வி!
படங்களின் தோல்வியை கருத்தில் கொண்டு யாரேனும் இயக்குனர்கள் அடுத்த படத்தில் தன்னை ஒப்பந்தம் செய்ய மறுத்தால், அவர்களிடம் மல்லுக்கு நிற்கிறார், நடிகை, பூஜா ஹெக்டே. 'இந்த படத்திற்கு கதை ரெடி பண்ணியது நீங்கள். அதில், பிரதான வேடத்தில் நடித்தது ஒரு, 'ஹீரோ...' இப்படி நீங்கள் இரண்டு பேருமே படத்தில் முக்கியத்துவம் பெற்று விட்டு, தோல்வி அடைந்தால் அதற்கு எப்படி நான் பொறுப்பு ஆவேன்...' என்று கேள்வி எழுப்புகிறார்.
மேலும், 'படத்தின் வெற்றியை மட்டும் கொண்டாடும் நீங்கள், தோல்வியையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு மாறுங்கள். எங்களைப் போன்ற நடிகையரின் பக்கம் தோல்வியை திருப்பி விட்டு, நீங்கள் தப்பித்துக்கொள்ளும் வேலையை விட்டு விடுங்கள்...' என்று ரவுண்டு கட்டி அடிக்கிறார், பூஜா ஹெக்டே.
— எலீசா
சிவகார்த்திகேயன் பாணியில், சூரி!
தான், 'ஹீரோ'வாக வளர்ந்து வந்தபோது, நயன்தாரா மற்றும் ஹன்சிகா போன்ற முன்னணி நடிகையரை தனக்கு ஜோடியாக நடிக்க வைத்து, தன்னை வளர்த்துக் கொண்டார், சிவகார்த்திகேயன்.
இந்நிலையில் தற்போது, காமெடியனாக இருந்து, 'ஹீரோ'வாக நடித்து வரும், சூரியும், 'மார்க்கெட்'டில் இருக்கும் முன்னணி நடிகையரை தனக்கு ஜோடியாக நடிக்க வைக்குமாறு, சில நடிகையரை பட்டியல் போட்டு வருகிறார்.
அதன் முதல்கட்டமாக, தான், 'ஹீரோ'வாக நடிக்கப் போகும் புதிய படத்தில் நடிக்க, மலையாள நடிகை, மமிதா பைஜுவை ஒப்பந்தம் செய்யுமாறு படக்குழுவுக்கு கோரிக்கை வைத்துள்ளார், சூரி.
— சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
நா ட்டாமை நடிகரின் வாரிசு, இயக்குனர் அவதாரம் எடுத்து, தெலுங்கில், ஒரு படம் தயாரித்து, இயக்கி, நடித்து வெளியிட்டார். ஆனால், அந்த படமோ தியேட்டர்களில், ஈ ஆடியதோடு தியேட்டர் வாடகைக்கு கூட வசூலிக்கவில்லை. இதனால், படம் தயாரித்த செலவு, படத்தை தியேட்டரில் ஓடவைத்த செலவு என, ஆத்துக்காரரின் காசை கரைத்துள்ளார், நடிகை. ஆனால், படம் தயாரித்து, இயக்கிய தன் மனைவி அதை டபுளாக கொடுப்பார் என்று எதிர்பார்த்த அவரது ஆத்துக்காரர், முதலுக்கே மோசமாகி விட்டதால் அம்மணியிடம் கொந்தளித்து விட்டார். அதோடு, 'நான் கொடுத்த பணத்தை புதிய படங்களில் நடித்து, வட்டியும் முதலுமாக திருப்பி கொடுத்துவிட வேண்டும்...' என்றும், 'கட் அன்ட் ரைட்'டாக சொல்லிவிட்டார். இதனால், முதல் படத்திலேயே பெரும் கடனாளியாகியுள்ளார், நாட்டாமையின் வாரிசு.
தளபதி நடிகருடன் கிசுகிசுக்கப்பட்டு வரும், மூனுஷா நடிகைக்கு அரசியலில் பேரார்வம் இருந்து வருகிறது. அதனால், தேர்தல் பிரசாரத்தில் தானும் கலந்து கொள்வதாக, தளபதி நடிகருக்கு துாது அனுப்பி இருக்கிறார். ஆனால் அவரோ, 'ஏற்கனவே குடும்பத்தில் விவாகரத்து அக்கப்போர் நடந்து கொண்டிருக்கிறது. இதுவே, அரசியல் வாழ்க்கையிலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நேரத்தில் பிரசாரத்துக்கு வந்தால், இதை வைத்தே எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் எனக்கு எதிராக பெரும் புயலை கிளப்பி விடுவர்...' என்று சொல்லி, நடிகைக்கு தடை போட்டு விட்டார். தளபதி போட்ட இந்த முட்டுக்கடையால் கடும், 'அப்செட்'டில் இருந்து வருகிறார், மூனுஷா.
சினி துளிகள்!
* தெலுங்கில், எஸ்.சரஸ்வதி என்ற படத்தை தயாரித்து, இயக்கி, கதையின் நாயகியாகவும் நடித்த, சரத்குமார் மகள் வரலட்சுமி அடுத்தடுத்து தன்னை கதையின் நாயகியாக வைத்து படம் இயக்குமாறு, தெலுங்கு இயக்குனர்களிடம் படவேட்டை நடத்தி வருகிறார்.@@quote@@
* தமிழில் பட வாய்ப்புகள் குறைந்து விட்டதால், மலையாளத்தில் கூடுதல் கவனம் செலுத்த துவங்கி இருக்கிறார், த்ரிஷா.
* நடிகர், விக்ரம் பிரபுவை தொடர்ந்து, சிவாஜி கணேசனின் இன்னொரு பேரன், தர்ஷன் கணேசன் என்பவர், இயக்குனர், லெனின் பாண்டியன் இயக்கும் படத்தில், 'ஹீரோ'வாகி உள்ளார்.
* டாக்சிக் என்ற கன்னட படத்தில் கிளாமராக நடித்திருக்கும், நயன்தாரா அதையடுத்து, ஹிந்தி நடிகர், சல்மான்கானுடன் நடிக்கும் ஹிந்தி படத்தில் அதை விட கூடுதல் கிளாமராக நடிக்கப் போகிறார்.
அவ்ளோதான்!

