sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : மே 17, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 17, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தொழிலதிபராகும், அனிருத்!

இசையமைப்பாளர், அனிருத், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என, பலமொழி படங்களுக்கு இசையமைப்பதில் பிசியாக இருக்கிறார். தெலுங்கு நடிகர், அல்லு அர்ஜுன் நடிக்கும், ராக்கா என்ற தெலுங்கு படத்துக்கு இசையமைக்க தற்போது, ஹைதராபாத்தில் முகாமிட்டுள்ள, அனிருத், அப்படத்துக்காக, இதுவரை தான் பயன்படுத்தாத சில புதுமையான இசைக்கருவிகளை பயன்படுத்துகிறார். மேலும், அல்லு அர்ஜுனுக்காக நான்கு, 'தீம் மியூசிக் டிராக்'குகளையும் உருவாக்கி வருகிறார்.

இதற்கிடையில், தொழிலதிபராக உருவாகவும் முயன்று வருகிறார், அனிருத். ஏற்கனவே, சொந்தமாக ஒரு ஆடியோ நிறுவனம் வைத்திருப்பவர், தற்போது, சரும பராமரிப்பு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றையும், ஒரு மதுபான தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் பங்குதாரராகவும் ஆகியுள்ளார். 'எதிர்காலத்தில் சினிமா வாய்ப்புகள் சரிந்தாலும், தொழிலதிபராக நீடிக்கவே இந்த திட்டம்...' என்கிறார் .

சினிமா பொன்னையா

கதையின் நாயகியாக, சிம்ரன்!

சசிகுமாருடன், சிம்ரன் நடித்த, டூரிஸ்ட் பேமிலி படம், 'சூப்பர் ஹிட்' அடித்தபோதும், சிம்ரனுக்கு புதிய படங்கள் ஒப்பந்தமாகவில்லை. இந்நிலையில், தீவிர முயற்சிக்கு பின், டீச்சர் என்ற படத்தின் மூலம் கதையின் நாயகியாக உருவெடுத்துள்ளார். இந்த படத்தை ஆரம்பத்திலேயே பிரபலப்படுத்த வேண்டும் என்பதற்காக , படத்தின், 'டீசர் வீடியோ'வை நடிகர், விஜய் சேதுபதி மூலம் வெளியிட வைத்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த படத்தை, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என, மூன்று மொழிகளில் வெளியிட்டு, கதையின் நாயகி, 'மார்க்கெட்'டுக்கு அழுத்தமான அஸ்திவாரம் போடவும் திட்டமிட்டு வருகிறார்.

எலீசா

இயக்குனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த, தமன்னா!

ஹிந்தி நடிகருடனான காதல், 'பிரேக்-அப்' ஆன பிறகு, மீண்டும் சினிமாவில் கவர்ச்சி புயலாக உருவெடுத்துள்ளார், தமன்னா. தற்போது, புருஷன் என்ற தமிழ் படத்தில் விஷாலுடன் நடித்து வருகிறார். நீச்சல் உடையில் நடிப்பதற்கும் தயாராக இருப்பதாக சொல்லி, நீச்சல் உடை அணிந்து ஒரு, 'போட்டோ ஷூட்' எடுத்து அதை, 'கமர்ஷியல்' பட இயக்குனர்களுக்கு அனுப்பி, இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதோடு, 'கிளாமருக்கு என்னிடம் எந்த கட்டுப்பாடும் இல்லை. அதனால், எப்படிப்பட்ட, 'டூ-பீஸ்' அணிந்து நடிக்கும் வேடமாக இருந்தாலும், தாராளமாக என்னை அணுகலாம்...' என்று, இயக்குனர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருக்கிறார், தமன்னா.

எலீசா

அஜித்தின், கார் ரேஸ் படம்!

குட் பேட் அக்லி படத்திற்கு பின், தன், 64வது படத்தில், அஜித்குமார் நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில், அவரோ முழு நேரமும், கார் ரேசில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், கார் ரேசில் அவர் பங்கேற்கும் முக்கிய காட்சிகளை ஒரு ஆவண படமாக எடுத்திருக்கிறார் இயக்குனர், ஏ.எல்.விஜய். இந்த படத்தை விரைவில், 'கிளாடியேட்டர்ஸ்' என்ற பெயரில் வெளியிடுவதற்கு திட்டமிட்டு வருகின்றனர். இந்த படத்தில், அஜித் நடித்த திரைப்படங்களை மிஞ்சும் சாகச காட்சிகள் இடம்பெற்றுள்ளதாம்.

சினிமா பொன்னையா

ரஜினிக்கு எழுதிய கதையில், அல்லு அர்ஜுன்!

ரஜினி நடித்த, கூலி படத்தை இயக்கிய இயக்குனர், லோகேஷ் கனகராஜ், அதையடுத்து மீண்டும், ரஜினிக்கு ஒரு கதை சொன்னபோது அதில் நடிக்க மறுத்து விட்டார். அதனால், இப்போது அதே கதையை, தெலுங்கு நடிகர், அல்லு அர்ஜுனிடம் சொல்லியதோடு, அந்த கதையில் தெலுங்கு ரசிகர்களுக்காக சில திருத்தங்களை செய்து, இயக்கப் போகிறார். அதே சமயம், ரஜினிக்காக, 'மாஸ் ஓப்பனிங்' கொடுத்து உருவாக்கிய காட்சிகளில் அப்படியே, அல்லு அர்ஜூனை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார், லோகேஷ் கனகராஜ்.

சினிமா பொன்னையா



கருப்புப் பூனை...


* தளபதி நடிகருடன், இரண்டு படங்களில் நடித்த அந்த, பீஸ்ட் நடிகை, தன் மும்பை பாய் பிரண்டுடன் அடிக்கடி, 'டேட்டிங்' சென்று வந்தார். ஆனால், அந்த நபரோ அம்மணியுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகளை வீடியோ எடுத்ததோடு, 'தனக்கு உடனடியாக, 5 கோடி ரூபாய் தர வேண்டும். இல்லை என்றால், இந்த வீடியோக்களை, 'சோஷியல் மீடியா'வில் வெளியிட்டு விடுவேன்...' என்று அம்மணியை, 'பிளாக் மெயில்' செய்து, பேரதிர்ச்சி கொடுத்து விட்டார். நம்பிய காதலனே, வில்லன் ஆகிவிட்டதால், உச்சகட்ட அதிர்ச்சியடைந்த, பீஸ்ட் நடிகை, பின்னர் தன் அபிமானிகள் சிலரை அழைத்து சென்று, அந்த பாய் பிரண்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இரண்டு கோடி ரூபாய், 'டீல்' பேசி, அவர் வைத்திருந்த ரகசிய வீடியோவை கைப்பற்றி உள்ளார். இந்த செய்தி சினிமா வட்டாரங்களில் கசிந்ததை அடுத்து, பாய் பிரண்டுடன், 'டேட்டிங்' செய்து வரும் அத்தனை நடிகையருமே பீதி அடைந்துள்ளனர்.

சினி துளிகள்!

* வாத்தி படத்தில், தனுஷுக்கு ஜோடியாக நடித்த, மலையாள நடிகை சம்யுக்தா, தற்போது, பிளாக் கோல்ட் என்ற தமிழ் படத்தில் கதையின் நாயகியாக, போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார்.

* தமிழில், ஈஸ்வரன் மற்றும் பூமி போன்ற படங்களில் நடித்த, மும்பை நடிகை, நிதி அகர்வால், மீண்டும் தமிழில் புதிய படங்களை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

* திரைப்படங்களில் நடிப்பதை விட, சினிமா விழாக்களுக்கு மிகவும், 'ஷாட்'டான உடை அணிந்து படுகவர்ச்சியாக வருகிறார், மாளவிகா மோகனன்.

* விஜய்யுடன், பீஸ்ட் மற்றும் ஜனநாயகன் படங்களில் நடித்துள்ள, பூஜா ஹெக்டே, தற்போது, லாரன்ஸ் உடன், காஞ்சனா-4 படத்தில் நடித்து வருகிறார்.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us