sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : ஜூன் 07, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 07, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஹிட்' படங்களின், இரண்டாம் பாகத்தை இயக்கும், ஆர்.ஜே.பாலாஜி!

நயன்தாரா நடிப்பில், மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கிய இயக்குனரும், நடிகருமான, ஆர்.ஜே.பாலாஜி தற்போது, சூர்யா நடிப்பில், கருப்பு என்ற தமிழ் படத்தை இயக்கி, 'ஹிட்' கொடுத்துள்ளார். இதையடுத்து, இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப்போவதா கூறும், ஆர்.ஜே.பாலாஜி, அதற்கு முன்னதாக ஏற்கனவே, நயன்தாரா நடிப்பில், மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கியவர், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை, நயன்தாராவை வைத்து, சுந்தர்.சி இயக்கியுள்ள நிலையில், அடுத்து, மூக்குத்தி அம்மன் மூன்றாம் பாகத்தை மீண்டும், நயன்தாராவை வைத்து தான் இயக்க திட்டமிட்டிருப்பதாக கூறுகிறார்.

சினிமா பொன்னையா

பிரியங்கா மோகனின் புது முடிவு!

தமிழில், டாக்டர் மற்றும் டான் போன்ற 100 கோடி ரூபாய் வசூல் செய்த தமிழ் படங்களில் நடித்த போதெல்லாம், பிரியங்கா மோகனின் நடிப்புக்கு எந்த பாராட்டும் கிடைக்கவில்லை. ஆனால், இணையதளத்தில் வெளியான , மேட் இன் கொரியா என்ற தமிழ் படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த, அவரது நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்தன. இதையடுத்து தற்போது, வெற்றிமாறன் இயக்கும், அரசன் படத்தில், உணர்வுபூர்வமான ரோலில் நடித்து வரும், பிரியங்கா மோகன், இனிமேல், இதுபோன்ற வேடங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப் போவதாக கூறுகிறார்; இயக்குனர்களிடமும் அதுபோன்ற கதாபாத்திரத்தை தரும்படி கேட்டு வருகிறார்.

எலீசா

மீண்டும், 'பயோபிக்' கதைகள் தேடும், கீர்த்தி சுரேஷ்!

மறைந்த நடிகை, சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவான, மகாநடி என்ற தெலுங்கு படத்தில் நடித்து, தேசிய விருது பெற்றவர், கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு தேடி வந்த பல, 'பயோபிக்' படங்களை தவிர்த்தவர், தற்போது மீண்டும் சில பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு கதையில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அப்படி தான் நடிக்கும் கதைகள், மகாநடி படத்தை போல இன்னொரு தேசிய விருதை தனக்கு பெற்று தரக்கூடியதாக இருக்க வேண்டும் என்ற கோணத்தில் கதைகள் தேடத் தொடங்கி இருக்கிறார், கீர்த்தி சுரேஷ்.

எலீசா

த்ரிஷாவின் தள்ளுபடி அறிவிப்பு!

த்ரிஷாவின் கேரியரில், மணிரத்னம் இயக்கத்தில், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த, குந்தவை கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பாராட்டு பெற்றது. இந்த கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் தன், 'மார்க்கெட்டை ஸ்டெடி' பண்ணிக் கொண்ட, த்ரிஷா, அடுத்தடுத்து வரலாற்று கதாபாத்திரங்களில் நடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.

இதற்காக, தென்மாநில சினிமாவில் சரித்திர கதைகளை படமாக்கும் நிறுவனங்களை தேடிச்சென்று படவேட்டையில் இறங்கியுள்ளார். திருப்திகரமான வேடங்களில் நடிக்க வாய்ப்பளித்தால் படக்கூலியில், 25 சதவீதத்தை தள்ளுபடி செய்வதாகவும் முன்மொழிந்து வருகிறார், த்ரிஷா.

எலீசா

கருப்புப் பூனை!

தளபதி நடிகர் சி.எம்., ஆகிவிட்டதால், உச்ச நடிகர் பெரிய அளவில், 'பீல்' பண்ண துவங்கி விட்டார். காரணம், இவர் அரசியல் கட்சி துவங்கி களமிறங்க தயாரானபோது, 'முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று முதலமைச்சர் ஆவதெல்லாம் நடக்காத காரியம். தேர்தலில் தோல்வியடைந்து அசிங்கப்பட்டு விடாதீர்கள்...' என்று சிலர் அவரை பயமுறுத்தி விட்டனர். அதனால்தான் கடைசி நேரத்தில் அரசியலுக்கு வராமல் அவர் பின்வாங்கி விட்டார்.

தற்போது, முதல் தேர்தலிலேயே தளபதி நடிகர், சி.எம்., ஆகிவிட்டதை அடுத்து, தனக்கு தடை போட்ட சில திரையுலக நண்பர்களை தொடர்பு கொண்டு, 'என்னை பயமுறுத்தி நான் முதலமைச்சராவதையே தடுத்து நிறுத்தி விட்டீர்களே. இனிமேல் வாழ்க்கையில் எந்த நண்பர்களின், 'அட்வைஸை'யும் நான் கேட்கப்போவதில்லை...' என்று கோபத்தை வெளிப்படுத்தி கொந்தளித்துள்ளார், உச்ச நடிகர்.

*****

சொந்த படம் எடுத்து, பெரிய அளவில் நஷ்டப்பட்டு விட்டார், பிசாசு நடிகை. ஆனபோதும், அவரது ஆஸ்தான, 'ஹீரோ'கள் யாரும் அவருக்கு கைகொடுக்கவில்லை. தற்போது, தன் கடனை அடைப்பதற்காக ஒரு தொழிலதிபரிடம் தஞ்சம் அடைந்துள்ளார், நடிகை. அவர், நடிகையை கடனில் இருந்து மீட்டதோடு, மீண்டும் படம் தயாரித்து, நடிக்க, 'பைனான்ஸ்' உதவி செய்வதாகவும் அம்மணிக்கு உறுதியளித்துள்ளார். இதனால், அபிமான, 'ஹீரோ'கள் அத்தனை பேரையும் ஓரங்கட்டி, அந்த தொழிலதிபரிடமே முழு நேரமும் ஐக்கியமாகி உள்ளார், பிசாசு நடிகை.

சினி துளிகள்!

* முப்பது வயதை கடந்து விட்ட, ஆண்ட்ரியாவுக்கு, சில நடிகர்-நடிகையரின் விவாகரத்தை பார்த்த பின், திருமணத்தின் மீதான ஆர்வமே போய்விட்டதாக கூறுகிறார்.

* நடிகர்களுடன் இணைத்து வதந்திகள் பரவினால், மன நிம்மதி போய் விடும் என்பதால், எந்த நடிகர்களுடனும் நட்பு வளர்ப்பதில்லை, என்கிறார், நடிகை, மமிதா பைஜு.

* பல இயக்குனர்களும் தமிழ் சினிமாவில் நடித்து வரும் நிலையில், இயக்குனர், கார்த்திக் சுப்புராஜும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

* ரஜினி நடித்து வரும், ஜெயிலர்-2 படத்தின் கிளைமாக்ஸ் காட்சி திருப்திகரமாக இல்லாததால் மீண்டும் சீன்களை மாற்றி படமாக்கியுள்ளார் இயக்குனர், நெல்சன்.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us