தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

1


PUBLISHED ON : ஜூலை 12, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 12, 2026

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரஜினி நடத்தும் அதிரடி, 'ஆபரேஷன்!'

கமல்ஹாசன் தயாரிப்பில், ரஜினி நடிக்கும், தர்மன் படத்தில், அவர் ஐந்து ரூபாய் டாக்டராக நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், அதை மறுக்கிறார், ரஜினி. 'இந்த படம் ஒரு அதிரடியான, 'திரில்லர்' கதையில் உருவாகிறது. இதன்மூலம் மருத்துவத் துறையில் உள்ள விஷம மனிதர்களை வேறோடு பிடுங்கி எரியும், 'ஆபரேஷன்' நடத்துகிறேன். அந்த வகையில் இந்த, தர்மன் படத்தில், விஷக் கிருமிகளை அழிக்கக்கூடிய எமதர்மனாக நடிக்கிறேன்...' என்கிறார், ரஜினி.

சினிமா பொன்னையா

கவர்ச்சிக்கு, 'தடா' போடும், ஜான்வி கபூர்!

தெலுங்கு நடிகர், ராம் சரணுக்கு ஜோடியாக, நடிகை ஸ்ரீதேவியின் மகள், ஜான்வி கபூர் நடித்த, பெத்தி என்ற தெலுங்கு படத்தில், அவரை சில காட்சிகளில் ஆபாச நடிகையாக சித்தரித்து விட்டதால், கடும், 'அப்செட்'டில் உள்ளார்.

ரசிகர்களும் அதை விமர்சனம் செய்ததால், மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டதாகவும் கூறுகிறார், ஜான்வி கபூர். 'இனிமேல் என், 'இமேஜை' பாதிக்கக்கூடிய, 'கிளாமர்' வேடங்கள் மற்றும் 'டபுள் மீனிங்' வசனங்களை பேசி நடிக்கவே மாட்டேன். அது, எத்தனை பெரிய இயக்குனர்களின் படமாக இருந்தாலும் ஆரம்பத்திலேயே அதுபோன்ற காட்சிகளுக்கு கத்திரி போட்டு விடுவேன்...' என்கிறார்.

எலீசா

மணிரத்னத்தை மிஞ்சிய, ராஜமவுலி!

இயக்குனர் மணிரத்னம், தான் எதிர்பார்த்தபடி காட்சி வரவில்லை என்றால் திரும்பத் திரும்ப அவற்றை, பல நாட்கள் படமாக்க கூடியவர், இந்நிலையில் தற்போது, வாரணாசி படத்தை இயக்கி வரும், இயக்குனர், ராஜமவுலியும் அப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியை, 100 முறை படமாக்கி இருக்கிறார். அந்த அளவுக்கு முந்தைய படங்களை விட, இந்த படத்தில் கூடுதல் கவனம் செலுத்தும் ராஜமவுலி, 'இது உலகத்தரம் வாய்ந்த படம் என்பதால் கூடுதல், 'ரிஸ்க்' எடுக்கிறேன் என்பதோடு, யாருமே எதிர்பாராத வகையில் காட்சிகளை புதுமையாக வடிவமைக்க போகிறேன்...' என்கிறார்.

சினிமா பொன்னையா

முடி அலங்காரத்தை மாற்றிய, பூஜாஹெக்டே!

ஜனநாயகன் படத்தை அடுத்து, தற்போது, காஞ்சனா- 4 படத்தில் நடித்து வரும், பூஜா ஹெக்டே,தன் நீளமான தலைமுடியை கத்தரித்து, 'பாப் கட்டிங்'கிற்கு மாறி உள்ளார். இதன் மூலம், தன் தோற்றத்தை மாற்றி அமைத்திருப்பதாக கூறும் பூஜாஹெக்டே, 'அடுத்து, ஒரு 'பாலிவுட்' பயிற்சியாளர் மூலம் தீவிர உடற்பயிற்சி செய்து என், 'பாடி லாங்குவேஜை'யும் பக்காவாக மாற்ற போகிறேன். அதனால், இனிமேல் நான் நடித்து வெளியாகும் படங்களில் நவீன அழகியாக, என்னை ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்...' என்கிறார்.

எலீசா

கருப்புப் பூனை!

தான் நடித்த படங்கள் சரியாக ஓடாததால், ராசியில்லாத நடிகையாக சித்தரிக்கப்பட்ட அந்த ராசியான நடிகை, தற்போது உச்ச நடிகரின் புதிய படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அதோடு, சூட்டோடு சூடாக தமிழ் படங்களில் நடிக்க தன், 'கவுண்டவுனை' ஆரம்பித்து விட வேண்டும் என்பதற்காக, சில இளவட்ட, 'ஹீரோ'களுக்கு 'பாலிவுட்' பாணியில், 'மிட் நைட் பார்ட்டி' கொடுத்துள்ளார். குறிப்பாக, உச்ச நடிகரின் படத்தில் தான் முக்கிய வேடத்தில் நடிப்பதை சொல்லி, இதே வேகத்தில் பல, 'மெகா' படங்களை கைப்பற்றி விட வேண்டும் என்பதில் படுதீவிரம் காட்டி வருகிறார், நடிகை.

சினி துளிகள்!

* அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், ரஜினி நடிக்கும், தர்மன் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் ஒப்பந்தமாகியுள்ளார், ராசி கண்ணா.

*அரசன் படத்தை அடுத்து, இயக்குனர், மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்கும், விஜய் சேதுபதி, இந்த படத்தை முடித்ததும், கிருத்திகா உதயநிதி இயக்கும் புதிய படத்தில் நடிக்கப் போகிறார்.

* 'சூப்பர் குட் பிலம்ஸின்' 100வது படமாக, எற்கனவே, ஜீவா நடித்த, தலைவர் தம்பி தலைமையில் என்ற படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது.

* ஏற்கனவே இரண்டு, 'ஆஸ்கர்' விருதுகள், இரண்டு, 'கிராமி' விருதுகள், 'கோல்டன் குளோப்' விருது என, பல விருதுகளை பெற்றுள்ள இசையமைப்பாளர், ஏ.ஆர்.ரஹ்மான், தற்போது அமெரிக்காவின் மிக உயரிய விருதான, 'கோல்டன் பிளேட்' விருதையும் பெற்றுள்ளார்.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us