PUBLISHED ON : ஜூலை 19, 2026

ரஜினி நடிக்க மறுத்த கதையில், சிவகார்த்திகேயன்!
சமீபகாலமாக, புதுவரவு இயக்குனர்களிடம் தீவிரமாக கதை கேட்டு வரும், ரஜினி, அந்த கதைகள், இப்போதைய தன் வயதுக்கு, 'செட்'டாகவில்லை என்றால், 'வேறு புதிதாக யோசியுங்கள்...' என்று கூறி, அனுப்பி விடுகிறார். அப்படி, ரஜினியிடம் கதை சொல்லி திரும்பிய, சிபி சக்கரவர்த்தி மற்றும் ராம்குமார் போன்ற இயக்குனர்களிடம், ரஜினியிடம் சொன்ன இளமையான கதையில் தான் நடிக்க, 'கால்ஷீட்' கொடுத்திருக்கிறார், சிவகார்த்திகேயன். குறிப்பாக, 'ஆரம்பத்திலிருந்து, 'எண்டு கார்டு' போடும் வரை, ரஜினி நடிப்பது போன்ற, மாஸான அதே காட்சிகள் அப்படியே இருக்க வேண்டும்...' என்று அவர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
— சினிமா பொன்னையா
இயக்குனர் ஷங்கரை நடிக்க அழைக்கும், இயக்குனர்கள்!
கே. எஸ்.ரவிக்குமார், சேரன் உள்ளிட்ட பல முன்னணி இயக்குனர்களும் படம் இயக்க வாய்ப்பு இல்லை என்பதால், நடிகராகி விட்டனர். இந்நிலையில், இந்தியன்- 2 மற்றும் கேம் சேஞ்சர் என்ற இரண்டு தோல்வி படங்களை கொடுத்துவிட்டு, அடுத்த படத்திற்கு தயாரிப்பாளர் கிடைக்காமல் தடுமாறி வரும் இயக்குனர், ஷங்கருக்கும் நடிப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளனர், சில இயக்குனர்கள். குறிப்பாக, 'பாசிட்டிவை' விட, 'நெகட்டிவ்' வேடங்கள் தான் உங்களுக்கு, 'செட்' ஆகும் என்று சொல்லி, அவரை வில்லனாக்கவும் திட்டமிட்டு வருகின்றனர்.
— சி.பொ.,
அதிரடிக்கு மாறும், ராஷ்மிகா மந்தனா!
தற்போது, மைசா என்ற தெலுங்கு படத்தில் பழ ங்குடியின பெண்ணாக, 'ஆக்ஷன்' வேடத்தில் நடித்திருக்கும், ராஷ்மிகா மந்தனா, அடுத்து, தெலுங்கு நடிகர், அல்லு அர்ஜுன் நடிக்கும், ராக்கா என்ற தெலுங்கு படத்தில் வில்லியாக உருவெடுக்கிறார். இதன் பிறகும் கடந்த காலங்களைப் போன்று, 'ரொமான்ஸ், கிளாமர்' என்று இறங்காமல் அதிரடியான, 'ஆக்ஷன்' கலந்த, கதாபாத்திரங்கள் மற்றும் மாறுபட்ட வில்லி வேடங்களில் தன்னை வெளிப்படுத்த தயாராக இருப்பதாக சொல்லும், ராஷ்மிகா, சில, 'ஆக்ஷன்' பட இயக்குனர்களிடம் பட வேட்டையில் ஈடுபட்டுள்ளார்.
— எலீசா
வில்லனாக உருவெடுக்கும், அதர்வா!
'இதுவரை எத்தனையோ படங்களில், 'ரொமான்டிக்' நாயகனாக நடித்தபோதும், எந்த படமும் எனக்கு கை கொடுக்கவில்லை. ஆனால், பராசக்தி படத்தில் வில்லத்தனமாக நடித்த வேடம் தான் ரசிகர்களிடம் என்னை பேச வைத்தது. அந்த வேடம், நான் நடிப்பதற்கு எளிதாக இருந்தது. 'பாடி லாங்குவேஜும்' பொருந்தி இருந்தது. குறிப்பாக, என் நடிப்புக்கு ரசிகர்கள் முதன்முதலாக தியேட்டரில் கைதட்டல் கொடுத்தனர். அதனால் இனிமேல், கதாநாயகனாக நடிப்பதிலிருந்து விடுபட்டு, 'வில்லன் ரூட்'டையே பிடித்துக் கொள்ள போகிறேன்...' என்கிறார், அதர்வா.
— சினிமா பொன்னையா
கருப்புப் பூனை!
தான் சி.எம்., ஆனதும், பல சினிமா பிரபலங்கள், தன்னை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கி கொடுத்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார், தளபதி நடிகர். ஆனால், அதில் சிலர் தன்னுடன் எடுத்த புகைப்படங்களை தங்களது படங்களின், 'பப்ளிசிட்டி'க்காக பயன்படுத்த துவங்கியதால் கடுப்பாகி விட்டார்.
இதனால், விளம்பர நோக்கத்தில் தன்னை சந்திக்க வருபவர்களுக்கு, 'செக் போஸ்ட்' வைத்துவிட்டார். 'நட்பு ரீதியான சந்திப்புகளை வியாபாரமாக்காதீர்கள்...' என்று தன் உதவியாளர் மூலம், சில நடிகர்களுக்கு எச்சரித்துள்ளார். அதோடு, 'இனிமேல் சினிமாக்காரர்கள் என்னை சந்திக்க வருவதற்கு தடை போட்டு விடுங்கள்...' என்றும் உத்தரவிட்டுள்ளார், தளபதி நடிகர்.
****
தமிழில் சரியான பட வாய்ப்புகள் இல்லை என்று ஆந்திராவில், 'செட்டில்' ஆன, அங் காடித் தெரு நடிகை, ஒரு வெளிநாட்டு தொழிலதிபருடன் ரகசிய குடித்தனம் நடத்தி வந்தார். இந்நிலையில் தற்போது, மீண்டும், சண்டக்கோழி நடிகர் படத்தின் மூலம் தமிழுக்கு, 'ரீ-என்ட்ரி' கொடுத்துள்ள நடிகை, இங்கு வந்த வேகத்திலேயே இளவட்ட, 'ஹிட்' பட இயக்குனர்களுடன் ரகசிய சந்திப்பு நடத் தி வருகிறார்.
அதோடு, 'என்னை, 'லீடு ரோலில்' வைத்து படம் இயக்கினால், 'அட்வான்ஸ்' கொடுத்ததுமே, 'மிட் நைட் பார்ட்டி' கொடுத்து அசத்தி விடுவேன்...' என்று குஷிப்படுத்தியுள்ளார். இதனால், கோடம்பாக்கத்தில் மேற்படி நடிகையை வட்டம் போடும் இளவட்ட இயக்குனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சினி துளிகள்!
* விஜய் நடித்த கடைசி படமான, ஜனநாயகன் இணையத்தில் கசிந்ததை அடுத்து, அதை 1 கோடியே 20 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
* டிராகன் தமிழ் படத்தில் நடித்த, கயாடு லோஹர், தென்னிந்திய அளவில் தற்போது, ஏழு படங்களில் நடித்து வருகிறார்.
* 'ஐந்து ரூபாய் டாக்டர்' என்று அழைக்கப்படும் மறைந்த டாக்டர் திருவேங்கடத்தின் வாழ்க்கை வரலாறு கதையை, சூர்யா நடிப்பில் படமாக்குகிறார் இயக்குனர், ஞானவேல்.
* உடல் பெருத்து இருந்த, அஞ்சலி தற்போது, 'ஸ்லிம்' ஆகி, கவர்ச்சிகரமான, 'ஹீரோயின்' வேடங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டுவதோடு, விஷாலுடன் நடித்துள்ள, மகுடம் படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு தனக்கு, 'வெயிட்'டான கதாபாத்திரம் கிடைத்திருப்பதாகவும் கூறுகிறார்.
* கருணாஸ் கதையின் நாயகனாக நடிக்கும், என்ன விலை? என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக, நிமிஷா சஜயன் நடிக்கிறார்.
அவ்ளோதான்!
