தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : ஜூலை 26, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 26, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரே கல்லில், நான்கு மாங்காய்!

இதுவரை ஹிந்தியில், நான்கு படங்களில் நடித்துள்ள, தனுஷ் இனி தான் நடிக்கும் படங்கள் அனைத்தும், தமிழ், ஹிந்தி மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார். அந்த வகையில், தற்போது, தனுஷ் நடித்து வரும், ஓம் படம் நான்கு மொழி ரசிகர்களையும் கவரும் வகையில், பல மாற்றங்களுடன் தயாராகி வருகிறது.

இப்படத்தில் மலையாள நடிகர், மம்மூட்டி மற்றும் ஹிந்தி நடிகர், நஸ்ருதீன் ஷா ஆகியோரையும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைத்துள்ளார். இதன் மூலம், இப்படத்தை, நான்கு மொழிகளில் பிரமாண்டமாக வெளியிடத் திட்டமிட்டுள்ளார், தனுஷ்.

சினிமா பொன்னையா

ஐஸ்வர்யா லட்சுமியை துரத்தும், 'ஹீரோ'கள்!

கட்டா குஸ்தி தமிழ் படத்தின், இரண்டு பாகங்களிலும் முதன்மை வேடத்தில் நடித்து, முன்னணிக்கு வந்துள்ளார், ஐஸ்வர்யா லட்சுமி. இதன் காரணமாக அவரது, 'மார்க்கெட்' உயர்ந்துள்ளது. இதனால், தற்போது, சில இரண்டாம் தட்டு நடிகர்கள், தங்களது படங்களில், ஐஸ்வர்யா லட்சுமிக்கு, முக்கிய இடத்தை கொடுத்து, தங்களது, 'மார்க்கெட்'டையும் அவரை வைத்து உயர்த்திக்கொள்ள தயாராகி விட்டனர். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, முன்னணி நடிகையருக்கு இணையாக, தன் சம்பளத்தை உயர்த்தி வருகிறார், ஐஸ்வர்யா லட்சுமி.

எலீசா

மீண்டும் வில்லனாக மிரட்டும், ரவி மோகன்!

ஏற்கனவே, சிவகார்த்திகேயன் நடித்த , பராசக்தி படத்தில், வில்லனாக நடித்து மிரட்டியவர், ரவி மோகன். தற்போது, ராகவா லாரன்ஸ் நடித்து வரும், ' பென்ஸ்' தமிழ் படத்திலும், வில்லனாக களம் இறங்கியுள்ளார். 'இனி, 'ஹீரோ, வில்லன்' என, இருவழிப் பாதையில் பயணிக்கப் போகிறேன். ஆனால், நான் நடிக்கும் வில்லன் வேடம், 'டம்மி'யாக இல்லாமல், 'ஹீரோ'வுக்கு இணையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்...' என்கிறார்.

சினிமா பொன்னையா

'ஆக்ஷன் ரூட்'டைப் பிடிக்கும், நயன்தாரா!

கன்னட நடிகர், யஷ் உடன் இணைந்து, டாக்ஸிக் என்ற பலமொழி படத்தில், கங்கா என்ற அதிரடியான, 'ஆக்ஷன்' கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், நயன்தாரா. இதற்காக, அவர் 'அல்ட்ரா மாடர்ன்' மற்றும் 'கிளாமர் லுக்'கிற்கு மாறியுள்ளார். இனி, இந்திய அளவில் உருவாகும் பல மொழி திரைப்படங்களில், 'கிளாமர்' கலந்த 'மாடர்ன்' கதாபாத்திரங்களில் நடிக்க, அவர் ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக, பல முன்னணி இயக்குனர்களை சந்தித்து, 'லீடு ரோல்'களில் நடிக்க வைக்குமாறு பேசி வருகிறார், நயன்தாரா. மேலும், இந்த, டாக்ஸிக் படத்தில் நடிக்க, அவர் 12 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார்.

எலீசா

கருப்புப் பூனை!

அந்த, சினேகமான புன்னகை நடிகைக்கு திருமணத்திற்கு பின், எதிர்பார்த்தபடி பட வாய்ப்புகள் வரவில்லை. எப்படியாவது, 'ரீ-என்ட்ரி' கொடுக்க, உடல் எடையைக் குறைத்து, சில இளம் இயக்குனர்களைத் துரத்தி வருகிறார், அந்த நடிகை. வறுமையில் இருக்கும் உதவி இயக்குனர்களுக்குப் பண உதவியும் செய்து வருகிறார். 'என்னை முதன்மைப்படுத்தி படம் எடுத்தால், எனக்கு பேசப்படும் சம்பளத்தில், 50 சதவீதத்தை உங்களுக்கே, கமிஷனாக வெட்டி விடுகிறேன்...' என்று, 'ஆபர்' கொடுத்து வருகிறார்.

***********

எப்போதுமே தன்னுடன் நடிக்கும், நடிகையருக்கு ரகசியத் துாது விடுவது தான் அந்த, வம்பு நடிகரின் வழக்கம். அப்படித்தான் தன் புதிய படத்தில் ஒப்பந்தமான, இதயமான படத்தில் நடித்த நடிகைக்கும் வலை வீசியுள்ளார். நள்ளிரவு நேரத்தில் நடிகையை மொபைல் போனில் அழைத்து, கடலை போட்டதோடு, தான் கொடுக்கும், 'பார்ட்டி'க்கும் வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

ஆனால், உஷாராகிவிட்ட அந்த நடிகை, 'தேவையில்லாமல் இரவு நேரங்களில், 'கால்' செய்து, என்னை தொந்தரவு செய்யாதீர்கள். சினிமாவில் நான் நடிக்கத்தான் வந்திருக்கிறேன்; 'பார்ட்டி' கொண்டாடி, ஜாலி ஆட்டம் போட வரவில்லை...' என்று நடிகருக்கு, 'நறுக்'கென்று பதிலடி கொடுத்துள்ளார். இதனால், செம கடுப்பான, வம்பு நடிகர், தன் படத்திலிருந்தே அந்த நடிகையைத் துாக்கி விடுமாறு இயக்குனருக்கு அவசர உத்தரவு போட்டு விட்டார்.

சினி துளிகள்!

* நெல்சன் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள, ஜெயிலர்- 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவை, மலேஷியாவில் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளது, படக்குழு.

* இதயம் முரளி படத்திற்கு பிறகு, இம்மார்ட்டல் மற்றும் மஞ்சணத்தி ஆகிய தமிழ் படங்களில் நடிக்கிறார், கயாடு லோஹர்.

* நயன்தாரா கதையின் நாயகியாக நடிக்கும், மூக்குத்தி அம்மன் 2 படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார், சினேகா.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us