தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

1


PUBLISHED ON : ஆக 23, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 23, 2026

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நடிக்க மறுத்த, ரவி மோகன்!

தன் அண்ணன், மோகன் ராஜா இயக்கத்தில், ஜெயம், எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி மற்றும் சந்தோஷ் சுப்ரமணியம் என, பல, 'சூப்பர் ஹிட்' படங்களில் நடித்தவர், ரவி மோகன். சமீபத்தில், மோகன் ராஜா மீண்டும் அவரிடம் ஒரு கதை சொல்லி, 'கால்ஷீட்' கேட்டபோது, அந்த கதையின் மீது நம்பிக்கை இல்லாததால் நடிக்க மறுத்து விட்டார்.

இதனால், மற்ற நடிகர்களிடம் அந்த கதை சொல்லி வந்த, மோகன் ராஜா, தற்போது கார்த்தியிடம், 'கால்ஷீட்' வாங்கியுள்ளார். 'தம்பியை சினிமாவில் வளர்த்து ஆளாக்கினேன். ஆனால், என், 'மார்க்கெட்' சரிந்த நேரத்தில், சொந்தத் தம்பியே கை கொடுக்கவில்லை...' என, வருத்தத்துடன் புலம்பி வருகிறார், மோகன் ராஜா.

சினிமா பொன்னையா

சம்பளத்தை உயர்த்திய, மமிதா பைஜு!

இதுவரை, 2 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்த மலையாள நடிகை, மமிதா பைஜு, புதிய தமிழ் படங்களில் நடிக்க, 3 கோடி ரூபாய் சம்பளம் கேட்கத் துவங்கியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர்களிடம், 'நான் கடை திறப்பு விழாக்களுக்கு செல்லும்போது கூடும் ரசிகர்கள் கூட்டத்தைப் பார்த்துள்ளீரா? இந்த கூட்டம் திரையரங்கிலும் எதிரொலிக்கும். அந்த அளவுக்கு எனக்கென்று ஒரு பெரிய ரசிகர் படை உருவாகி விட்டது. அப்படியிருக்கும் போது என் சம்பளத்தைக் கூட்டித் தருவதில் உங்களுக்கு என்ன பிரச்னை?' என்று அதிரடியாக கேள்வி எழுப்பியுள்ளார், மமிதா பைஜு.

எலீசா

பிரபுதேவாவுக்கு அதிர்ச்சி!

இந்தியாவின், மைக்கேல் ஜாக்சன் என்று கொண்டாடப்படும், பிரபுதேவா, தற்போது சில படங்களில், 'கேரக்டர் ரோல்'களில் நடித்து வருகிறார். இருப்பினும், சமீபத்தில் ஒரு படத்தில், பிரபுதேவாவுக்கு தனி பாடல் வைக்கப்பட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் அந்தப் பாடலில் இருந்தே அவரை துாக்கி விட்டார், அப்பட இயக்குனர். காரணம் கேட்டதற்கு, 'இப்போதைய ரசிகர்கள் மத்தியில், உங்கள் நடனத்திற்கு பெரிய வரவேற்பு இல்லை. அதுவும் இல்லாமல் உங்களுக்கு, வயதும் ஆகிவிட்டது. அதனால், அந்தப் பாடலை வேறொருவருக்கு கொடுத்து விட்டேன்...' என்று நடன சூறாவளி, பிரபுதேவாவிடம் கூறி, பேரதிர்ச்சி கொடுத்துள்ளார், இயக்குனர்.

சினிமா பொன்னையா

கருப்புப் பூனை!

தற்போது தன், 'மார்க்கெட் டவுன்' ஆகி கிடப்பதால், தன் ஆஸ்தான நடிகர்களுக்கு, போன் செய்து தன்னை அரவணைக்குமாறு அன்பு வேண்டுகோள் விடுத்திருக்கிறார், 'ஐஸ்வர்யம்' பொங்கும் காக்கா முட்டை நடிகை. அதோடு, அவர்களுக்கு தன் அசைவ போட்டோக்களை அனுப்பி, 'இதுபோதுமா இன்னும் கூடுதலான கவர்ச்சிக்கு மாற வேண்டுமா?' என்றும் கருத்து கேட்டுள்ளார்.

அதற்கு அவர்களோ, 'சினிமாவில் நீயெல்லாம் ஒரு ரவுண்டு வந்ததே பெரிய விஷயம். அதனால், இனிமேலும் உன் பருப்பு வேகாது. பேசாமல் கல்யாணம் செய்து, செட்டிலாகி விடு...' என்று அம்மணிக்கு, 'ஷாக்' கொடுத்துள்ளனர். இதனால், கடுப்பான நடிகை, 'உங்கள் தயவு இல்லாமலேயே இதே சினிமாவில் பெரிய கவர்ச்சி ரவுண்டு வந்து காட்டுகிறேன்...' என்று வேறு சில இளவட்ட நடிகர்களை துரத்தி வருகிறார், காக்கா முட்டை நடிகை.

*******

தான் நடிக்கும் படங்களில் இன்னொரு நாயகியும் இருந்தால், அந்த நடிகையை, 'ஓவர் டேக்' செய்வதில் தீவிரம் காட்டுகிறார், இதயமான படத்தில் நடித்த நடிகை. மேலும், இயக்குனர்களுடன், 'பார்ட்டி'களில் பங்கேற்று கம்பெனி கொடுத்து, நெருக்கமாகி வருகிறார். இப்படி அம்மணி போட்ட, 'மீட்டிங்' காரணமாக, ஆக்ஷன் கிங்குடன் நடித்த படத்தில் நடித்த அந்த இன்னொரு தமிழ் நடிகையை, துக்கடா நடிகையாக்கி விட்டனர். அந்த அளவுக்கு தான் மட்டுமே படத்தில் முக்கிய கதாநாயகியாக ஜொலிக்க வேண்டும் என்பதற்காக திரைமறைவு சூழ்ச்சிகளை செய்து வருகிறார், நடிகை. இதனால், மேற்படி நடிகை இடம்பெறும் படங்களில் இன்னொரு நாயகியாக நடிக்க வேண்டும் என்றாலே, மற்ற நடிகையர் தெறித்து ஓடுகின்றனர்.

சினி துளிகள்!

* தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு, கன்னடம் என்று படையெடுத்துக் கொண்டிருக்கிறார், ஐஸ்வர்யா ராஜேஷ்.

* இதயம் முரளி படத்தை அடுத்து, இம்மார்ட்டல் மற்றும் மஞ்சணத்தி போன்ற தமிழ் படங்களில் நடிக்கும், அசாமிலிருந்து தமிழுக்கு வந்த, கயாடு லோஹர், அடுத்து, சூர்யா நடிக்கும் படத்தையும் கைப்பற்றியுள்ளார்.

* அஜித்தின், விடாமுயற்சி படத்தில் வில்லியாக நடித்த, ரெஜினா, தற்போது, மூக்குத்தி அம்மன்- 2 படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

* தற்போது, சுந்தர்.சி இயக்கத்தில், விஷாலுக்கு ஜோடியாக, புருஷன் என்ற படத்தில் நடித்து வருகிறார், தமன்னா.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us