தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : செப் 20, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 20, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரஜினி தடை!

பொதுவாகவே, ரஜினிகாந்த் தன் படங்களில் அதிரடியான அரசியல் வசனங்களை வைப்பதை வாடிக்கையாகக் கொண்டவர். அந்த வகையில், தற்போது வெளிவரவிருக்கும், ஜெயிலர்- 2 படத்திலும் சில துாக்கலான அரசியல் வசனங்கள் இடம்பெற்று படமாக்கப்பட்டன. ஆனால், ஏற்கனவே, 'சோஷியல் மீடியா'வில், விஜய் மற்றும் ரஜினி ரசிகர்களிடையே கடுமையான, 'சைபர்' போர் நடந்து வருகிறது. இந்தச் சூழலில் கதைக்காக வைக்கப்படும் இந்த வசனங்கள் கூட, விஜயை சீண்டுவதற்காகவே பேசப்பட்டதாக பெரிய சர்ச்சையைக் கிளப்பிவிடும் என்பதால், அந்த அரசியல், 'பஞ்ச் டயலாக்'குகள் அனைத்தையும் படத்திலிருந்து துாக்கிவிட்டு, அதற்குப் பதிலாகப் புதிய வசனங்களை பேசியுள்ளார், ரஜினி.

சினிமா பொன்னையா

குழந்தை பிறப்பை தள்ளிப்போட்ட, கீர்த்தி சுரேஷ்!

திருமணத்திற்கு பின், தன், 'மார்க்கெட்' என்னவாகுமோ என்று கலக்கத்தில் இருந்த, கீர்த்தி சுரேஷ், தற்போது, செம ஹேப்பி. காரணம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என, மூன்று மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அதனால், குழந்தைப் பிறப்பை தள்ளிவைத்துவிட்டு, சினிமா பயணத்தில், பெரிய 'ரவுண்ட்' வரத் தயாராகிவிட்டார். 'இந்த 'ரவுண்ட்'டிலும் சில மாநில மற்றும் தேசிய விருதுகளை தட்டித் துாக்காமல் விடமாட்டேன்...' என்றும் அடித்து சொல்கிறார்.

எலீசா

'ரூட்'டை மாற்றும், அதிதி ஷங்கர்!

இயக்குனர் ஷங்கரின் மகள், அதிதி ஷங்கர் நடித்த படங்கள் வெற்றி பெறாததால், தற்போது, 'ரூட்'டை மாற்றத் திட்டமிட்டு வருகிறார். தான், 'ஹீரோயினாக' அறிமுகமான, விருமன் படத்தில் பாடிய, 'மதுரை வீரன்...' பாடல், 'ஹிட்'டானதை தொடர்ந்து, மாவீரன் படத்தில் பாடிய, 'வண்ணாரப்பேட்டையில...' என்ற பாடலும் வரவேற்பைப் பெற்றது.

இப்படி சினிமாவில் தன் நடிப்புக்கு பெரிய பெயர் கிடைக்காத நிலையில், தான் பாடிய பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால், அடுத்தபடியாக சரியான பட வாய்ப்புகள் கிடைக்காவிட்டால், பின்னணி பாடகியாக முழுவீச்சில் களமிறங்க தயாராகிவிட்டார், அதிதி ஷங்கர். இதற்காக தான் பாடிய, 'ஹிட்' பாடல்களின் ஆடியோக்களை மாற்றுமொழி இசையமைப்பாளர்களுக்கும் அனுப்பி, வாய்ப்பு கேட்டு வருகிறார்.

எலீசா

சூரியின், அடுத்த திட்டம்!

நடிகர், சூரி நடித்த, மண்டாடி என்ற தமிழ் படம், 75 கோடி ரூபாய் 'பட்ஜெட்டி'ல் உருவானது. அடுத்தபடியாக, முதல் வரிசை நடிகர்கள் பாணியில், 100 கோடி ரூபாய் 'பட்ஜெட்' படங்களில் நடிக்கத் தயாராகிவிட்டார். அதற்கேற்ற கதைகளைத் தேடிப் பிடித்து வருபவர், தயாரிப்பாளர்களிடம், 'நான் நடிக்கும் படங்களைத் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என, மூன்று மொழிகளிலும் வெளியிடுவதோடு, வெளிநாடுகளிலும், 'மல்டிபிளக்ஸ்' தியேட்டர்களில் வெளியிட வேண்டும்...' என்று கோரிக்கை வைத்து வருகிறார், சூரி.

'அதற்கேற்ப, என் படங்களில் இனிமேல் நடிக்கும், 'ஹீரோயின்' மட்டுமின்றி, முக்கியக் கதாபாத்திரங்களில் நடிப்பவர்களும் இந்திய அளவில் பிரபலமானவர்களாகவே இருக்க வேண்டும்...' என்றும் கோரிக்கை வைக்கிறார்.

சினிமா பொன்னையா

கறுப்புப் பூனை!

சினிமாவுக்கு வருவதற்கு முன்பே, ஒருவரை காதலித்து வந்த, நீண்ட பெயர் கொண்ட அந்த பிரியமான நடிகைக்கு, தற்போது சினிமாவில் நிலைத்து நிற்க வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கியுள்ளது. ஆனால், அவரது காதலரோ, வயதாகிக் கொண்டே செல்வதால், 'நாம் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்...' என்று அம்மணியைத் துரத்துகிறார். இருப்பினும், அவருக்குப் பிடிகொடுக்காமல் நழுவி வரும் நடிகை, 'இப்போதைக்கு அதற்கு வாய்ப்பில்லை. வேண்டுமானால் வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்...' என்று காதலருக்கு, 'ஷாக்' கொடுத்து விட்டார்.

இதன் காரணமாக, '10 ஆண்டுகளுக்கு மேலாக என்னைக் காதலித்துவிட்டு, இப்போது சினிமா மோகத்தில் என்னை கழற்றிவிட நினைப்பதா?' என்று நடிகையுடன் மோதலில் ஈடுபடுவதோடு, 'ஆறு மாதத்தில் கல்யாணத்திற்கு சம்மதிக்காவிட்டால், கடத்திச் சென்று கழுத்தில் தாலி கட்டுவேன்...' என்று நடிகைக்கு மிரட்டல் விடுத்துள்ளார், காதலர். இதனால், தற்போது துப்பாக்கி ஏந்திய, 'செக்யூரிட்டி'யுடன் படப்பிடிப்புத் தளங்களுக்கு வரத் துவங்கியிருக்கிறார், நடிகை.

*****

தமிழில், முதன் முதலாக, அமரன் நடிகர் படத்தில் நடிக்க வந்த, அந்த மூன்றெழுத்து தெலுங்கு நடிகை, தற்போது சுள்ளானுடன், இரண்டெழுத்து படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால், அந்த மூன்றெழுத்து நடிகையை, ஓரங்கட்டி விட்டு இதே படத்தில் நடிக்கும், மற்றொரு நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்ததோடு, பாடல் காட்சியில், 'டூ--பீஸ்' நடிகையாகவும் தோலுரித்து விட்டனர்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த மூன்றெழுத்து நடிகை, 'படத்தில் ஒப்பந்தமாகும் போது இரண்டு, 'ஹீரோயின்'களுக்கும் முக்கியத்துவம் உள்ளது என்று சொல்லி விட்டு, இப்போது என்னை மட்டும் இருட்டடிப்பு செய்துவிட்டீர்கள்...' என்று கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதோடு, படப்பிடிப்புக்கு, 'கால்ஷீட்' கொடுத்தபடி ஆஜராகாமல், படக்குழுவினரை பழி வாங்கி வருகிறார்.

சினி துளிகள!

* அருள்நிதிக்கு ஜோடியாக, டிமான்டி காலனி 2 படத்தில் நடித்த, பிரியா பவானி சங்கர், இப்போது அப்படத்தின் மூன்றாம் பாகத்திலும் நடித்திருக்கிறார்.

* பாலிவுட்டில், ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர், சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள, ராமாயணா படத்தின் முதல் பாகம், தீபாவளி தினத்தன்று வெளியாகிறது.

* தமிழில், சிவகார்த்திகேயனுடன் நடித்த, பராசக்தி படத்திற்குப் பிறகு தற்போது தனுஷுடன், ஓம் படத்தில் நடித்து வருகிறார், தெலுங்கு நடிகை, ஸ்ரீலீலா.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us