தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : செப் 27, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 27, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவகார்த்திகேயனின் புது திட்டம்!

இளைஞர்கள் மட்டுமின்றி, தனக்கான பெண் ரசிகைகளையும் அதிகப்படுத்துவதில் தீவிரம் காட்டுகிறார், சிவகார்த்திகேயன். இதன் காரணமாகவே, தான் காரில் படப்பிடிப்புக்கு செல்லும்போது, எங்காவது பெண்கள் கூட்டமாக நிற்பதை பார்த்தால், இறங்கி அவர்களிடம் இரண்டொரு வார்த்தை பேசிவிட்டு செல்கிறார். இது குறித்து கேட்டால், 'பெண்களை, 'இம்ப்ரஸ்' செய்தால் மட்டுமே, சினிமாவில் பெரிய இடத்திற்கு வர முடியும். ஒரு பெண், சினிமா பார்க்க தியேட்டருக்கு வந்தால், அவரது குடும்பத்தில் உள்ள அனைவரும் வருவர். அதனால்தான் என் படங்களில், 'சென்டிமென்ட்' காட்சிகளை அதிகமாக வைப்பதோடு, 'கிளாமர்' காட்சிகள் எல்லை மீறாமல் இருக்கும்படி, இயக்குனர்களுக்கு உத்தரவு போடுகிறேன்...' என்கிறார், சிவகார்த்திகேயன்.

— சினிமா பொன்னையா

கயாடு லோஹர் போடும், 'கண்டிஷன்!'

த மிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும், அசாமிலிருந்து தமிழுக்கு இறக்குமதியான நடிகை, கயாடு லோஹர் தன்னை திரையில் பார்க்கும் போது படத்திற்கு படம் அழகாக தெரியவேண்டும் என்பதற்காக, பிரத்யேகமாக ஆடை வடிவமைப்பாளர் ஒருவரை நியமித்திருக்கிறார். அவர் மூலமாக, ஒவ்வொரு படத்திலும் கதைக்கு ஏற்றபடி தன்னை அழகுபடுத்திக் காட்டக்கூடிய ஆடைகளை தேர்ந்தெடுப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

தயாரிப்பாளர் தரப்பில் இவர் நடிக்கும் படத்தில் வேறொரு ஆடை வடிவமைப்பாளரை நியமித்தால், அதை ஏற்க மறுத்து, தான் நியமித்திருக்கும் ஆடை வடிவமைப்பாளர்தான் வேண்டும் என்றும், தயாரிப்பாளரே, அவருக்கு சம்பளம் கொடுக்கவேண்டும் என்றும் ஆரம்பத்திலேயே, 'கண்டிஷன்' போட்டு விடுகிறார்.

— எலீசா

'ரூட்'டை மாற்றிய, பிரியங்கா மோகன்!

ஆ ரம்பத்தில் முன்னணி, 'ஹீரோ'களின் படங்கள் என்ற அடிப்படையில் வாய்ப்புகளை கைப்பற்றி வந்த, பிரியங்கா மோகனுக்கு, அப்படி அவர் நடித்த படங்கள் எதிர்பார்த்தபடி வெற்றியடையாததால் தமிழில், 'மார்க்கெட்'டை பிடிக்க முடியவில்லை. அதனால், இப்போது, 'ஹீரோ'களை விட, கதாபாத்திரங்கள் தான் முக்கியம் என்ற கோணத்தில் படங்களைத் தேர்வு செய்யத் துவங்கிவிட்டார்.

அந்த வகையில், 'ஹீரோ'களின் நாயகியாக இருப்பதை விட, இயக்குனர்களின் நாயகியாக இருக்கவே தான் விரும்புவதாக கூறும் பிரியங்கா, தற்போது இயக்குனர், வெற்றிமாறன் இயக்கத்தில், சிம்பு நடிக்கும், அரசன் படத்திலும், இயக்குனர், மாரி செல்வராஜ் இயக்கும், மஞ்சணத்தி என்ற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும், தனக்கான கதாபாத்திரம் அழுத்தமாக இருந்தால், ஜெய் மற்றும் கவின் போன்ற பெரிதாக, 'மார்க்கெட்' இல்லாத நடிகர்களின் படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.

— எலீசா

அதிரடி, 'ஆக்ஷன்' கதை தேடும், சூரி!

தமிழ் சினிமாவில், நகைச்சுவை நடிகராக இருந்த சூரி, சமீபகாலமாக கதாநாயகனாக நடித்து வருகிறார். அதோடு, காதல் மற்றும் 'சென்டிமென்ட்' கொண்ட படங்களில் மட்டுமே நடித்துக் கொண்டிருந்தால், அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடியாது என்பதால், தற்போது அதிரடி, 'ஆக்ஷன்' கதைகள் பக்கம் கவனத்தைத் திருப்பியிருக்கிறார்.

குறிப்பாக, 'நான் நடிக்கும், 'ஆக்ஷன்' படமானது முன்னணி, 'ஆக்ஷன் ஹீரோ'களுக்கே சவால் விடக்கூடியதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட கதைகளில், 'ரிஸ்க்' எடுத்து நடிக்கத் தயாராக இருக்கிறேன்...' என்று கூறி, கதைகளைத் தயார் செய்யுமாறு இயக்குனர்களிடம் கூறி வருகிறார், சூரி.

— சினிமா பொன்னையா

கருப்புப் பூனை!


ஏற்கனவே, ஒரு தயாரிப்பாளருடனான திருமணம் தடைப்பட்ட நிலையில், மீண்டும் திருமணம் செய்து கொள்வது குறித்து யோசிக்காமல் இருந்து வந்த, மூனுஷா நடிகை, தற்போது தளபதி நடிகருடன் இணைத்து, தன் மீது தொடர்ந்து அவதுாறுகள் வருவதால், யாராவது தொழிலதிபரைத் திருமணம் செய்து, செட்டில் ஆகிவிடலாம் என்று நினைக்கிறார்.

அதற்காக, தன் அம்மாவிடம் சொல்லி, தன் ஜாதகத்தை ஒரு மலையாள ஜோதிடரிடம் கொடுத்துக் கிரக நிலைகளை ஆராய்ந்தபோது, நடிகை க்கு திருமண யோகமே இல்லை என்பது தெரியவந்துள்ளது.

ஒருவேளை கட்டாயமாக திருமணம் செய்து கொண்டாலும், அது ஓரிரு ஆண்டுகளிலேயே முறிந்துவிடும்; அந்த அளவுக்கு திருமண யோகம் இல்லாத ஜாதகமாக இருப்பதாக ஜோதிடர் கூறிவிட்டார்்.

இதனால், 'ரிஸ்க்' எடுக்க விரும்பாமல், 'இப்படியே தனி ஆளாக வாழ்க்கையை ஓட்டிவிடலாம்...' என்ற முடிவுக்கு வந்துவிட்டார், மூனுஷா.



சினி துளிகள்!


* பைவ் ஸ்டார் உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்த, கனிகா, தற்போது, இயக்குனர், நாகராஜன் இயக்கி வரும், ஆகாயம் படத்தில், 'ஹீரோ'வுக்கு அக்கா வேடத்தில் நடித்து வருகிறார்.

* ரஜினிகாந்த் நடித்த, ஜெயிலர் 1 படத்தில், அவரது மருமகளாக நடித்த, மிர்னா மேனன், ஜெயிலர் 2 படத்திலும் அதே வேடத்தில் நடித்திருக்கிறார்.

* நடிகர், சிரஞ்சீவிக்கு ஜோடியாக, விஸ்வாம்பரா என்ற தெலுங்கு படத்திலும், நடிகர், மோகன்லாலுக்கு ஜோடியாக, ராம் என்ற மலையாள படத்திலும் நடித்துள்ளார், த்ரிஷா. இவ்விரண்டு படங்களும் ரிலீஸாகத் தாமதமாகி வருகின்றன.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us