தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...


PUBLISHED ON : அக் 11, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 11, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முதன்முதலாக, தனுஷுடன் நடிக்கும், வடிவேலு!

தமிழ் சினிமாவில், ரஜினி, கமல் தொடங்கி அத்தனை கதாநாயகர்களுடனும் நடித்து விட்டார், வடிவேலு. அவர்களில், தனுஷுடன் மட்டும் இதுவரை நடிக்கவில்லை. தற்போது, தனுஷின் 56-வது படத்தில் முதன்முதலாக நடிக்க போகிறார். இது குறித்து, வடிவேலு கூறுகையில், 'தனுஷுடன் நடிப்பதற்கு பல சூழல்கள் உருவானது. ஆனால், சிலர் எங்களுக்கிடையே கருத்து, மோதலை ஏற்படுத்தி, தீப்பொறியைக் கொளுத்தி போட்டுவிட்டனர். இதனால், எங்களால் எந்த படத்திலும் இணைந்து நடிக்க முடியாமல் போய்விட்டது. தற்போது, முதன்முதலாக, தனுஷுடன் உற்சாக மனநிலையுடன் நடிக்கப் போகிறேன். எது எப்போது நடக்க வேண்டுமோ; அப்போதுதான் நடக்கும், நம்முடைய கையில் எதுவுமே இல்லை...' என்கிறார்.

— சினிமா பொன்னையா

முடிவை மாற்றிய, கவின்!

ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் உதயநிதி போன்றவர்கள், நயன்தாராவை தங்கள் படங்களில் நடிக்க வைத்து, தங்களது 'மார்க்கெட்'டை உயர்த்திக் கொண்டனர். அதே பாணியை, ஹாய் என்ற தமிழ் படத்தில் நடிகர், கவினும் கையில் எடுத்தார். ஆனால், அந்த படம் தோல்வியடைந்து விட்டது. இதன் காரணமாக, தன் அடுத்த படத்தில், த்ரிஷாவை தனக்கு ஜோடியாக நடிக்க வைக்குமாறு, அப்பட இயக்குனரிடம் கேட்டு வந்த கவின், தற்போது அந்த முடிவை மாற்றி கொண்டுள்ளார். 'கதை நன்றாக இருந்தால் யார் நடித்தாலும் படம் ஓடும். முன்னணி நடிகையர் நடித்தால் தான் படம் ஓடும் என்ற காலம் மலையேறிவிட்டது...' என்று மாற்றி பேசத் தொடங்கியிருக்கிறார்.

— சினிமா பொன்னையா

அதிரடியில் இறங்கிய, ராஷ்மிகா மந்தனா!

'ரொமான்டிக்' நாயகியாக நடித்து வந்த, தெலுங்கு நடிகை விஜயசாந்தி, ஒரு கட்டத்தில் அதிரடி, 'ஆக்ஷன்' நாயகியாக உருவெடுத்து நடித்தார், அவருக்கு பின், வந்த எந்த நடிகையும் அந்த இடத்தை இதுவரை நிரப்பவில்லை. இந்நிலையில், தற்போது, மைசா என்ற பலமொழி படத்தில், பழங்குடியின பெண்ணாக அதிரடியான, 'ஆக்ஷன்' நாயகியாக நடித்துள்ளார், ராஷ்மிகா மந்தனா.

குறிப்பாக, 'பைக் சேஸிங்' மட்டுமின்றி, 90 அடி உயரத்திலிருந்து தண்ணீருக்குள் குதித்து சண்டை செய்யும் காட்சியிலும் நடித்திருக்கும் ராஷ்மிகா, 'இனிமேல் படத்திற்கு படம் இதுபோன்று, அதிரடி காட்சிகளில் நடிக்கப் போகிறேன். அதனால், என் படங்களில், இனி, 'ரொமான்ஸ்'க்கு வாய்ப்பு இருக்காது...' என்கிறார்.

— எலிசா

கவர்ச்சியால் கதறவிட்ட, கயாடு லோஹர்!

தமிழில், டிராகன் என்ற படத்தில் அறிமுகமா ன, அசாமிலிருந்து இறக்குமதியான நடிகை, கயாடு லோஹர், தற்போது திரைக்கு வந்துள்ள, தி பாரடைஸ் என்ற தெலுங்கு படத்தில் நடிகர், நானிக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதில், இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சி காட்டி, அங்குள்ள கவர்ச்சி கதாநாயகியரையே கதற விட்டிருக்கிறார்.

அதுமட்டுமின்றி, புகைப்பிடிக்கும் காட்சியிலும் மிரட்டலாக நடித்து, இளவட்ட ரசிகர்களை ஈர்த்திருக்கும், கயாடு லோஹருக்கு தற்போது, தெலுங்கு படவுலகான, 'டோலிவுட்'டில் மவுசு எகிறிவிட்டது. அதோடு, எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல், அவர் காட்டும் இந்த அணுகுமுறை மேல்தட்டு, 'ஹீரோ'களை கவர்ந்திருப்பதால், ஆளாளுக்கு போட்டி போட்டு, அம்மணிக்கு சிபாரிசு செய்ய துவங்கி விட்டனர்.

— எலிசா

கருப்புப் பூனை!

சார்பட்டா நடிகரின் 'மார்க்கெட்' வீழ்ந்து கிடப்பதால், அதை துாக்கி நிறுத்த, சில படங்களை அவரே தயாரித்து, நடித்தார். ஆனால், அந்த படங்களும் சறுக்கிவிட, கையை சுட்டுக் கொண்டார். அதையடுத்து, தற்போது அவரிடம் கதை சொல்லிய இயக்குனர்களும், தயாரிப்பாளர்கள் கிடைக்காததால், அவரையே தயாரித்து நடிக்குமாறு கேட்டனர். அதற்கு, சார்பட்டா நடிகரோ, 'ஏற்கனவே படம் தயாரித்து இரண்டு வீடுகளை விற்றுவிட்டேன். அதோடு என் மனைவி மூலமாக வாங்கிய கடனுக்காக மும்பை, 'பைனான்சியர்' என்னை துரத்திக்கொண்டிருக்கிறார். சொந்தமாக படமெடுத்து தெருவுக்கே வந்து விட்டேன். இதற்கு மேலும் நான் படம் தயாரிக்க வேண்டுமா? இப்படியே போனால் நடிப்புக்கே முழுக்குப் போட்டு ஓடி விடுவேன்...' என்று தன் பரிதாப நிலையை சொல்லி, புலம்புகிறார்.

சினி துளிகள்!

* பா.ரஞ்சித் இயக்கி வரும் வேட்டுவம் படத்தில் ஹீரோவாக அட்டக்கத்தி தினேஷ் நடிக்க, வில்லனாக நடிக்கிறார், ஆர்யா.

* கன்னட நடிகர், யஷ் நடித்த, டாக்ஸிக் என்ற பலமொழி படம் அதிர்ச்சி தோல்வி அடைந்த நிலையில், ஹிந்தியில், தான் ராவணனாக நடித்திருக்கும் மகாபாரதம் படத்தை எதிர்நோக்கியுள்ளார், யஷ்.

அவ்ளோதான்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us