PUBLISHED ON : நவ 08, 2026

காகங்களுக்கு மலர் அர்ச்சனை: அண்டை நாடான நேபாளத்தில், 'தீஹார்' என்ற பெயரில், ஐந்து நாட்கள் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். அதில், முதல்நாள் காகங்களுக்குத் தயிர்சாதம் வைப்பர். அப்போது, காகங்களின் மீது மலர்களை வீசி எறிவர். அவை, காகங்களின் மீது பட்டுவிட்டால் நன்மை உண்டாகும் என்பது, அவர்களது நம்பிக்கை
* தீபாவளியை ராஜஸ்தானில், 'தீபமாலிகா' என்று அழைக்கின்றனர். ராஜஸ்தானில், தீபாவளியன்று, வரும் அமாவாசையுடன் ஆண்டு முடிந்துவிடுகிறது. மறுநாள் புது ஆண்டு தொடங்கும்.
* வட மாநிலங்களில் தீபாவளியன்று, லட்சுமி வீட்டில் தங்குவதாக நம்புகின்றனர். அன்று முழுவதும் 24 மணிநேரமும் விளக்கு எரிந்து கொண்டிருக்கும். இந்த விளக்கிலிருந்து எடுக்கப்படும் மையைத்தான் ஆண்டு முழுவதும் கண் மையாகப் பூசுகின்றனர். இதை, 'மோனித்' திருவிழா என்கின்றனர்.
- எம்.அசோக் ராஜா
