PUBLISHED ON : ஜூலை 26, 2026

அ நிறம் | அளவு
'பாம்பென்றால் படையும் நடுங்கும்!' என்பது நம் முதுமொழி. ஆனால், பாம்பு என்றதும், வாங்குவதற்கு படையெடுத்து வருகின்றனர், சீனர்கள். நாம் பாம்பை கண்டு பயப்படும்போது, அவர்களோ பல நுாற்றாண்டுகளாக பாம்பை பிடித்து சாப்பிட்டு வருகின்றனர். இவர்கள் யாரும் பாம்புகளை கண்டு நடுங்குவதில்லை. நாம் உணவுக்காக, கோழிகளை வளர்ப்பது போல, அவர்கள், தங்கள் வீடுகளில் பாம்புகளை வளர்க்கின்றனர். இங்கு பாம்பு வளர்ப்பதை குடிசை தொழிலாகவே செய்து வருகின்றனர். படத்தில், சீனாவில் இருக்கும் இந்த இறைச்சி கடையில், விதவிதமான பாம்புகளை விற்பனைக்கு வைத்துள்ளதை தான் படத்தில் பார்க்கிறீர்கள்.
— ஜோல்னாபையன்
