
கொடிக் கம்பத்தை ஒட்டியுள்ள கொடியின் நுனிப்பக்கம், 'ஹயின்ட்' என்றும், கம்பத்துக்கு எதிர்ப்புறம் உள்ள கொடியின் நுனிப்பக்கம், 'ப்ளை' என்றும் ஆங்கிலத்தில் கூறப்படுகிறது
* நம் நாட்டின் தேசிய கொடியை வடிவமைத்தவர், பிங்கலி வெங்கய்யா
* சைப்ரஸ் நாட்டுக் கொடியில், அந்நாட்டின் வரைபடம் இடம் பெற்றிருக்கும்
* லிபியா நாட்டுக் கொடி, முழுவதும் பச்சை நிறத்தை கொண்டிருக்கும்
* துாய வெண்மை நிறக் கொடியை கொண்ட நாடு, வெஸ்டர்ன் சஹாரா
* அரைக்கம்பத்தில் கொடி பறந்தால், துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது என்று அர்த்தம்
* சிவப்பு கொடி பறந்தால், அபாயம் என்று பொருள். வெள்ளைக்கொடி பறந்தால், சமாதானம் என்று அர்த்தம். கப்பலில், மஞ்சள் கொடி பறந்தால், தொற்று நோயாளிகள் உள்ளனர் என்று அறியலாம்
* உலகின் மிகப் பழமையான தேசியக் கொடி, டச்சு நாட்டினுடையது
* மிகப் பெரிய தேசியக் கொடியை கொண்ட நாடு, டென்மார்க்
* இரண்டு தேசிய கீதங்களை இசைக்கும் நாடு, ஆஸ்திரேலியா
* தேசியக் கொடியில் இசைக்கருவி இடம்பெற்றுள்ள நாடு, அயர்லாந்து
* பெரிய நட்சத்திரம் ஒன்றும், நான்கு சிறிய நட்சத்திரங்களையும் கொண்ட தேசியக் கொடியை கொண்டது, சீனா
* 'யூனியன் ஜாக்' எனப்படுவது, இங்கிலாந்து நாட்டின் தேசியக் கொடி
* ஹங்கேரியின் தேசியக் கொடி நம் நாட்டு கொடியை போன்ற நிறத்தை ஒத்திருக்கும். ஆனால், ஒரே ஒரு வித்தியாசம், நடுவில் அசோக சக்கரம் கிடையாது
* நம் நாட்டில் தேசிய கீதத்தை எழுதியவர், தாகூர். இவர் தன்னுடைய, 'தத்துவ போதினி' பத்திரிகையில், 'பாரத விதாதா' என்ற தலைப்பில், ஜனகனமண... பாடலை வெளியிட்டார். ஜனவரி 21, 1950ல், இந்தப் பாடலை, இந்தியாவின் தேசிய கீதமாக அறிவித்தது, இந்திய அரசாங்கம்.

