PUBLISHED ON : மே 31, 2026

* பூஜை அறையில் வைக்கும் சுவாமி படங்களை ஒரே அளவில் வாங்கி மாட்டினால் தெய்வ உணர்வோடு கலை உணர்வும் மிளிரும். படங்களை மாதம் இருமுறையேனும் மெல்லிய, பருத்தி துணியால் துடைக்க, பளிச்சென்று இருக்கும். சிறிய அழகான, 'சீரியல் லைட் செட்டை' படத்தை சுற்றி வைக்கவும். விளக்கேற்றியதும் சிறிதுநேரம் போட்டு வைத்தால் மாலை போட்டது மாதிரி அழகாக இருக்கும்
* வீட்டில் துாசு அதிகம் படிய விடாமல் அவ்வப்போது சுத்தம் செய்தால் சிரமம் தெரியாது. வீடும் சுத்தமாக இருக்கும். தேவையில்லாத பழைய துணிகள், வேண்டாத சாமான்களைத் துாக்கி எறிந்து விட்டாலே வீடு சுத்தமாகி விடும்
* வீட்டினுள் அலங்கார செடியை வளர்த்தால் மன அமைதி கிடைக்கும். வீட்டு வாசல் மற்றும் ஜன்னல்களுக்கு ஒரே 'டிசைன்' கொண்ட, 'ஸ்கிரீன்' வாங்கிப் போட அழகு கூடும். முடிந்தவரை வீட்டு சுவரில் அடித்திருக்கும், 'பெயின்ட்' நிறத்திற்கு, மாறுபட்ட நிறத்தில், 'ஸ்கிரீன்' இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்
* படுக்கை அறையை படு அழகாக மாற்றும் ரகசியம் தலையணையில் தான் ஒளிந்துள்ளது. விதவிதமான கலர்கள் கொண்ட தலையணைகளை மெத்தையின் அளவுக்கு ஏற்ப தேர்ந்தெடுத்து வைக்கவும். 'பெட்ரூம்' சுவரில் இயற்கை காட்சிகள் கொண்ட, 'வால் பேப்பர்'களை ஒட்டினால் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும்.
