PUBLISHED ON : ஆக 09, 2026

அ நிறம் | அளவு
நமக்கு சுதந்திரம் கிடைத்த போது, 'ஜன கன மன' பாடல் தேசிய கீதமாக இருக்கவில்லை. இப்பாடல், 10 ஆண்டுகளுக்கு முன்பே, தாகூரால் எழுதப்பட்டிருந்தாலும், ஜன., 24, 1950 அன்று, அதிகாரப்பூர்வமாக தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
*****
சுதந்திரம் அடைந்து, சில மாதங்களுக்கு பிறகு, அதாவது, 1947 நவம்பர் மாதம், இந்தியா தன் முதல் தபால் தலைகளை வெளியிட்டது. தேசிய கொடியின் உருவம் பொறிக்கப்பட்ட, இந்த தபால் தலைகள், கடிதங்களை அனுப்புவதற்கான வெறும் கருவியாக மட்டும் இருக்கவில்லை. இந்தியா ஒரு புதிய சகாப்தத்தில் நுழைந்து விட்டது என்பதை உலகிற்கு பெருமையுடன் பறைசாற்றும் ஒரு பிரகடனமாகவும் அவை விளங்கின.
******
