
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முன்னாள் அமைச்சர்கள்
இந்நாள் எம்.பி.,க்கள்
அரசியல்வாதிகள்
தொழிலதிபர்கள்...
வீடுகளில் கட்டு கட்டாய்
பணம் நகைகள்
கைப்பற்றப்படுகின்றன!
ரகசிய அறைகள்
பல இடங்களில்
காணப்படுகின்றன
பிணவறை உட்பட!
திடீர் பணக்காரர்கள்
தொழிலதிபர்கள்
அரசியல்வாதிகள்
கல்வி வள்ளல்கள்...
எல்லார் வீடுகளிலும்
அலுவலகங்களிலும்
நிறுவனங்களிலும்
தொடர்கின்றன
ரெய்டுகள்!
பதவியில் இருக்கும்போது முன்னும் பின்னும்
காவலர் புடைசூழ
பந்தாவாக வந்தவர்கள்
இன்றும் அப்படியே
வருகின்றனர்
கொஞ்சமும்
வெட்கமில்லாமல்!
அன்றும் இன்றும்
எத்தனை ரெய்டுகள்
வந்தாலும் யாரும்
திருந்துவதாகத்
தெரியவில்லை!
எப்படித் திருந்துவர்
சரியான கடுமையான
உடனடி தண்டனைகள்
இல்லாத போது!
- சொல்கேளான் ஏ.வி.கிரி, சென்னை.

